9.1 விரிவாகும் ஆளுமை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 9.1 – விரிவாகும் ஆளுமை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- தமிழுக்குத் தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத் தக்கவர்.
- அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளை கொண்டவை.
- இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம் பெற்றுள்ளது.
- தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழை பரப்பினார்.
- அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தார்.
- இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
பாட நூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
- கொம்பு
- மலையுச்சி
- சங்கு
- மேடு
விடை : மலையுச்சி
2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?
- நிலையற்ற வாழ்க்கை
- பிறருக்காக வாழ்தல்
- இம்மை மறுமை
- ஒன்றே உலகம்
விடை : ஒன்றே உலகம்
குறு வினா
தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?
தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான். ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும்.
சிறு வினா
1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளைக் ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
- இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
2. கோர்டன் ஆல்பர்ட கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
- முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமைதான என்கிறார் கோர்டன் ஆல்பர்ட்
- முதலாவது மனிதன், தன் ஈடுபாடுகளை வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப் படுத்த வேண்டும்.
- இரண்டாவது ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
- மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையத் தரும் தத்துவத்தை கடைபிடித்து நடத்தல் வேண்டும்.
நெடு வினா
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துக்களைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.
- உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் இயல்பு
- அதனையே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு வரிகளையும்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” – என்னும் குறட்பா வரிகளும் கூறுகின்றன.
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
- இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
கற்பவை கற்றபின்
1. உங்களக்குப் பிடித்த தமிழ் ஆளுமைகள் குறித்து கலந்துரையாடிக் குறிப்புகள் எழுதுக
இன்றைய உலகில் மனிதர்களிடம் காணும் பல துன்பங்ககுச் சினமே காரணம். அத்தகைய ‘சினம்’ பல துயர சம்பவங்களைக் கூட ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் தான் வள்ளுவர் ‘வெகுளாமை’ என்னும் அதிகாரத்தின் மூலம் ‘சினம் தவிர்க்க’ என்று வலியுறுத்தி இருக்கிறார். சினம் கொண்டவர் மட்டுமின்றி அவர் சார்ந்த அனைவரையும் அழிக்கும். சினம் கொள்ளாதவர் துறவியரினும் மேலானவர் என்கிறார் வள்ளுவர். சினம் தவிர்க்க என்ற ஆளுமை அனைவருக்கும் தேவையான ஒன்றுதான்.
2. உலகத் தமிழ்மாநாட்டு மலர், பொங்கல் மலர், தீபாவளிமலர் போன்றவற்றில் வெளிவந்துள்ள உலகப் பொதுவியல் சிந்தனைகள் குறித்து ஐந்து மணித்துகள்கள் பேசுக.
அனைவருக்கும் வணக்கம்! உலகத் தமிழ் மாநாட்டு மலைரப் படித்தேன். அதில் தமிழரின் ஒழுக்க நெறிகள் குறித்த கட்டுரைகள் அருமையாக இருந்தது. அனைவரும் அறிந்த நடக்க வேண்டியதைக் கூறியுள்ளது. பொங்கல் மலர் படித்தேன். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கட்டுரையில் ‘சமத்துவப் பொங்கல்’ செய்தியும் என்னை வியப்பில் ஆழ்ந்தியது. நன்றி.
கூடுதல் வினாக்கள்
பொருத்துக
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் | அ. ஆலந்தூர் கிழார் |
2. பூட்கையில்லோன் யாக்கை போல | ஆ. கணியன் பூங்குன்றனார் |
3. படுதிரை வையகம் பாத்தியப் பண்பே | இ. திருவள்ளுவர் |
4. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் | ஈ. தொல்காப்பியர் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
பொருத்துக
1. தத்துவஞானி | அ. மார்க்ஸ் அரேலியஸ் |
2. பேராசர் | ஆ. பரிப்பெருமாள் |
3. உரையாசிரியர் | இ. ஆல்பர்ட் சுவைட்சர் |
4. உலகமேதை | ஈ. செனக்கா |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்பதே அவரது கூற்றினை கூறியவர் ____________
- கணியன் பூங்குன்றனார்
- தெறன்ஸ்
- கோர்டன் ஆல்போர்ட்
- திருவள்ளுவர்
விடை : தெறன்ஸ்
2. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்றவர் ____________
- கணியன் பூங்குன்றனார்
- தெறன்ஸ்
- கோர்டன் ஆல்போர்ட்
- திருவள்ளுவர்
விடை : கோர்டன் ஆல்போர்ட்
3. பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் ____________
- கிரேக்கத் தத்துவஞானிகள்
- பிரெஞ்சுத் தத்துவஞானிகள்
- சீனத் தத்துவஞானிகள்
- பாரசீகத் தத்துவஞானிகள்
விடை : கிரேக்கத் தத்துவஞானிகள்
4. மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதபட்ட நூல் ____________
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
- நாலடியார்
- தொல்காப்பியம்
விடை : திருக்குறள்
5. திருவள்ளுவரை உலகப்புலவர் என போற்றுவது மிகவும் பொருத்தமான எனக் கூறியவர் ____________
- கணியன் பூங்குன்றனார்
- கோர்டன் ஆல்போர்ட்
- ஜி.யு.போப்
- திருவள்ளுவர்
விடை : ஜி.யு.போப்
6. தனிநாயகம் அடிகள் தொடங்கிய இதழ் ____________
- தமிழர் உணர்வு
- தமிழர் ஒருமைப்பாடு
- தமிழர் இனம்
- தமிழர் பண்பாடு
விடை : தமிழர் பண்பாடு
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குறிக்கோள் இல்லாதவன் வெறும் ___________ என்று நிலைநாட்டியவர் புலவர் ஆலத்தூர்கிழார்
விடை : சதைப்பிண்டம்
2. குறிக்கோள் சமுதாயம் இல்லாத ___________ அடையும்
விடை : வீழ்ச்சி
3. தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் ___________ குறிப்பிடத்தக்கவர்.
விடை : தனிநாயகம் அடிகள்
குறு வினா
1. சீன அறிஞர்கள் யாவர்?
வாவோட்சு, கன்பூசியசு
2. கிரேக்க அறிஞர்கள் யாவர்
பிளேட்டா, அரிஸ்டாட்டில்
3. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை புறநானூற்றில் ஆலந்துகிழார் எப்படி கூறுகிறார்?
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று புறநானூற்றில் ஆலந்துகிழார் கூறுகிறார்.
4. எப்போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது?
பிறருக்காகப் பணி செய்யும் போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது.
5. சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் யார்?
சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் இத்தாலி நாட்டினர் உரோமையர்.
6. தனிநாயகம் அடிகள் எவற்றை உருவாக்க காரணமாய் இருந்தார்?
தனிநாயகம் அடிகள் அகில உலகத் தமிழாய்வு மன்றம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக்க காரணமாய் இருந்தார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…