TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 9.2 – அக்கறை

9.2 அக்கறை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 9.2 – அக்கறை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Akkarai

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் கல்யாண சுந்தரம்
புனைப்பெயர் வண்ணதாசன், கல்யாண்ஜி
படைப்புகள் புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் ஆகியவை கவிதை நூல்கள், அகமும் புறமும் (கட்டுரைத் தொகுப்பு) தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பந்தல், ஒளியிலே தெரிவது (சிறுகதை)
சிறப்பு 2016 – சாகித்திய அகாதெமி விருது (ஒரு சிறு இசை)

இலக்கணக் குறிப்பு

  • உருண்டது – ஒன்றன் பால் வினைமுற்று
  • போனது – ஒன்றன் பால் வினைமுற்று
  • சரிந்தது – வினையெச்சம்
  • அனவரும் – முற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து – சரி + த்(ந்) + த் + உ

  • சரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால் இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

நூல் வெளி

  • கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள்.
  • இவை தவிர “அகமும் புறமும்” என்ற இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு வெளிவந்திருக்கிறது.
  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
  • கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும்
  • ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?

  1. ஒரு சிறு இசை
  2. முன்பின்
  3. அந்நியமற்ற நதி
  4. உயரப் பறத்தல்

விடை : ஒரு சிறு இசை

சிறு வினா

1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.

கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்

மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கைற இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி

2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.

மண்ணில் பிறந்தோம்
மண்ணில் தவழ்ந்தோம்
மண்ணில் நடந்தோம்
அதானல் தானோ என்னவோ
விளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம்
மதங்களை மறந்து
மனிதநேயத்தோடு
இறை இல்லங்களை கட்டினோம்
சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது

கற்பவை கற்றபின்

நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்த புதுக்கவிதைகைள திரட்டி எழுதுக

நிலா

வானவர்கள் விளையாடும் வானப் பந்து

மழை

ஏழைகளைக் கண்ட வானத்தாய் வடிக்கும் கண்ணீர்

காற்று

என் நண்பனுக்கு உயிர் கொடுத்ததால் உன்னச் சுவாசிக்கிறேன்

தண்ணீர்

சண்டையிட்டு கண்ணீர் விடுகிறோம் உன்னால்…

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1.கல்யாணசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்டவர் __________

  1. தாராபாரதி
  2. கண்ணதாசன்
  3. வைரமுத்து
  4. கல்யாண்ஜி

விடை : கல்யாண்ஜி

2. சைக்கிளில் வந்த __________ கூடை சரிந்தது.

  1. ஆப்பிள்
  2. தக்காளி
  3. ஆரஞ்சு
  4. கத்திரிக்காய்

விடை : தக்காளி

3. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக __________ பரிசினை பெற்றவர்.

  1. கல்யாண்ஜி
  2. தாராபாரதி
  3. கண்ணதாசன்
  4. வைரமுத்து

விடை : கல்யாண்ஜி

4. கல்யாண்ஜி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு _____________

  1. 2015
  2. 2017
  3. 2014
  4. 2016

விடை : 2016

பொருத்துக

1. புலரி, முன்பின், ஆதி அ. கட்டுரை நூல்
2. அகமும் புறமும் ஆ. கவிதை நூல்
3. சில இறகுகள் சில பூக்கள் இ. சிறுகதை நூல்
4. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் ஈ. கடிதங்கள் தொகுப்பு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. மற்ற மனிதர்கள் மீது அக்கறை இல்லதாதற்கு கல்யாண்ஜி கூறும் காரணத்தை கூறுக

  • சைக்கிளில் இருந்து தக்காளி கூடை சரிந்து விழுந்தது.
  • அங்குப் போவார் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் சொல்லிக் கொண்டு செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது மற்ற மனிதர்கள் மீது அக்கறை இல்லதாதற்கு காரணமாக கல்யாண்ஜி கூறுகிறார்.

2. கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் எவை?

புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு

3. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு எது?

கலைக்க முடியாத ஒப்பனை, தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment