TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 3.2 – மணிமேகலை

3.2 மணிமேகலை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 3.2 – மணிமேகலை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - manimegalai

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் சீத்தலை சாத்தனார்
இயற்பெயர் சாத்தன் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார்
வேறுபெயர் தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன்
காலம் கி.பி. 2-ம் நூற்றாண்டு

சொல்லும் பொருளும்

  • சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  • பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள், குழீஇஒன்றுகூடி
  • தோம் – குற்றம்
  • கோட்டி – மன்றம்
  • பொலம் – பொன்
  • வேதிகை – திண்ணை
  • தூணம் – தூண்
  • தாமம் – மாலை
  • கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
  • காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
  • விலோதம் – துணியாலான கொடி
  • வசி – மழை
  • செற்றம் – சினம்
  • கலாம் – போர்
  • துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).

இலக்கணக்குறிப்பு

  • தோரணவீதியும், தோமறு கோட்டியும் – எண்ணும்மை
  • காய்க்குலை கழுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைமுற்று
  • உறுபொருள் – உரிச்சொல் தொடர்
  • தாழ்பூந்துறை – வினைத்தொகை
  • பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

பரப்புமின் = பரப்பு +மின்

  • பரப்பு – பகுதி
  • மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன்

  • அறை – பகுதி
  • த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
  • மணிமேகலை  ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
  • மணிமேகலையின் துறவு வாழக்கையைக் கூறுவதால் மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயருண்டு.
  • இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம், பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
  • சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
  • பெளத்த சமயம் சார்புடையது.
  • மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
  • இது 30 காதையாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை
  • மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
  • கூல வணிகம் (கூலம் – தானியம்) செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
  • இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
  • கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • இவரும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் சமகாலத்தவர் என்பர்

மதிப்பீட்டு வினாக்கள்

பலவுள் தெரிக.

ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

  1. திசைச்சொற்கள்
  2. வடசொற்கள்
  3. உரிச்சொற்கள்
  4. தொகைச்சொற்கள்

விடை : தொகைச்சொற்கள்.

சிறு வினா

1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு கொட்டுபவன் இவ்வரிகளை கூறினான்

பொருள் விளக்கம்:-

புகார் நகரில் 28 நாட்கள் இந்திர விழா நடைபெறுவதால், தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் தெரிவித்தான்.

2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றா? விளக்குக எழுதுக

பட்டிமன்றம், பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றே!

விளக்கம்:-

புலவர்கள் சொற்போரிட்டு வாதிடும் இடம் பட்டிமண்டபம் ஆகும். இவையே இன்று பட்டிமன்றம் என்றும் அழைக்கப்டுகிறது.

குறு வினா

உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:-

  • தோரணம் கட்டுதல், தெருக்களையும், கோவில் மண்டபங்களையும் தூய்மைப்படுத்தி வண்ணம் அடித்தல், கோலமிடுதல் போன்றவற்றை செய்தனர்.
  • பனையோலை, மாவிலை தோரணங்களை கட்டுவர். வாழை மரங்களை கட்டி வைப்பர்.
  • நாடகம், இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.

இந்திரவிழா நிகழ்வுகள்:-

  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் அழகுப் பொருட்கள் பலவற்றை அழகுபடுத்தினர்.
  • பாக்கு, வாழை, வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு ஆகியவற்றை நட்டு வைத்தனர்.
  • தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் புது மணலைப் பரப்பினர்.
    பட்டிமண்டபத்தில் வாதிட ஏற்பாடு செய்தனர்.

கற்பவை கற்றபின்

1. உன் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை உருவாக்கு

பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா அழைப்பிதழ்

பக்தி ததும்பும் நெஞ்சங்களே!

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 15-ம் நாள் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா துவங்க உள்ளது.

முதல் நாள் பூச்சாட்டல்
2-ம் நாள் புனித நீருற்றல்
3-ம் நாள் பூக்குழி இறங்குதல்
4-ம் நாள் இசைக்கச்சேரி

பக்தர்கள் அனைவரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்

கோவில் நிர்வாகம், வெங்கடேஸ்வரபுரம்

2. குறிப்புகளை கொண்டு ஓர் இயற்கைக் காட்சியை விரித்தெழுதுக

பூஞ்சோலை – சிரிக்கும் மலர்கள் – பசுமையான புல்வெளி – கூவும் குயில் – வீசும் தென்றல் – விளையாடும் குழந்தைகள் – அழகிய காட்சிகள்

இய்ற்கையன்னைப் பச்சைப் பட்டு உடுத்தி பூஞ்சோலையில் வண்ணமயமாகச் சிரிக்கும் மலர்கள் அங்குப் பசுமையான புல்வெளி மெத்தைகள் மீது கூவும் குயில் கீதம் இசைக்கும் நாதத்துக்கு வீசும் தென்றல் காற்றில் விளையாடும் குழந்தைகள் முத்து ரதமாய் அழகிய காட்சிகள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பல மொழி பேசும் மக்களைக் குறிக்கும் சொல் _____________

  1. பன்மொழியாளர்
  2. பாடை மக்கள்
  3. சமயக்கணக்கர்
  4. எண்பேராயம்

.விடை : பாடை மக்கள்

2. புகார் நகரில் நடைபெறும் விழா _____________

  1. இந்திரவிழா
  2. பொங்கல் விழா
  3. தீப விழா
  4. ஏர்பூட்டுதல் விழா

.விடை : இந்திரவிழா

3. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. மணிமேகலை – சீத்தலைசாத்தனார்
  2. மணிமேகலை – மணிமலைத் துறவு
  3. மணிமேகலை – 30 காதைகள்
  4. மணிமேகலை – மூன்று காண்டங்கள்

.விடை : மணிமேகலை – மூன்று காண்டங்கள்

4. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  2. பாடைமாக்கள் – பலமொழி பேசும் மக்கள்
  3. எண்பேராயம் – அயல்நாட்டினர்
  4. ஐம்பொருங்குழு – அமைச்சர் குழு

.விடை : எண்பேராயம் – அயல்நாட்டினர்

5. ஐம்பெருங் குழுக்களைச் சாரதவர் _____________

  1. கரணத்தியலவர்
  2. அமைச்சர்
  3. சாரணர்
  4. தூதர்

.விடை : கரணத்தியலவர்

5. எண்பேராயத்தைச் சாரதவர் _____________

  1. கனகச் சுற்றம்
  2. படைத்தலைவர் 
  3. இவுளி மறவர்
  4. யானை மறவர்

.விடை : படைத்தலைவர்

6.  துருத்தி என்பது குறிப்பது

  1. ஏரி நடுவே இருக்கும் மணல் திட்டு
  2. குளம் நடுவே இருக்கும் மணல் திட்டு
  3. கடல் நடுவே இருக்கும் மணல் திட்டு
  4. ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு

.விடை : ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு

7. மணிமேகலையின் முதல் காதை _____________

  1. பவத்திறம் அறுகெனப் பாவை
  2. விழாவறை காதை
  3. உவவனம் புக்காதை
  4. எதுவுமில்லை

.விடை : விழாவறை காதை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. விழா _____________ எடுத்துரைக்கிறது

விடை : மனித மாண்புகளை

2. பண்பாட்டின் வெளிப்பாடு _____________

விடை : விழா

3. தங்கதத் தூண்களிலே தொங்கவிடப்பட்டிருந்தது _____________

விடை : முத்துமாலை

4. மணிமேகலை கதை அடிப்படையில் ____________ தொடர்ச்சி என்று கூறுவர்

விடை : சிலப்பதிகாரத்தின்

5. தண்டமிழ் ஆசான் என்று புகழ்ப்படுவர் ____________

விடை : சீத்தலைச்சாத்தனார்

6. தண்டமிழ் ஆசான் என்று சீத்தலைச்சாத்தனாரைப புகழந்தவர் ____________

விடை : இளங்கோவடிகள்

7. சீத்தலைசாத்தனார் வாழ்ந்த ஊர் ____________

விடை : மதுரை

8. தோம் என்பதன் பொருள் ____________

விடை : குற்றம் 

9. கோட்டி என்பதன் பொருள் ____________

விடை : மன்றம்

10. தாமம் என்பதன் பொருள் ____________

விடை : மாலை

11.மணிமேகலை ____________ முதன்மைப்படுத்தும்  புரட்சிக்காப்பியம் 

விடை : பெண்மையை

சிறு வினா

1. இந்திர விழா எங்கு எத்தனை நாட்கள் நடைபெறும்?

பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் நடைபெறும்

2. இந்திர விழாவினைக் காண வந்தோர் யாவர்?

சமயவாதிகள், காலக்கணிதர், மக்கள் உருவில் கடவுளர், பல மொழி பேசும் அயல்நாட்டின் ஐம்பெருங்குழு, எண்பேராயம்

3. விழா கொண்டாடுவதன் நோக்கம் யாது?

ஒன்று கூடுதல், கொண்டாடுதல், கூடி உண்ணுதல் மகிழ்ச்சியைப் பகிர்தல்

4. ஐம்பெருங்குழுவில் உள்ளவர்கள் யாவர்?

  1. அமைச்சர்
  2. சடங்கு செய்விப்பாேர்
  3. படைத்தலைவர்
  4. தூதர்
  5. சாரணனர் (ஒற்றர்)

5. இந்திர விழாக் காட்சிகளை வெளிப்படுத்தும் மணிமலைக் காதை எது?

  • விழாவறைக் காதை
  • இக்காதை மணிமேகலையின் முதல் காதை

6. எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள் யார்?

  • கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
  • கருமவிதிகள் (புரோகிதர்)
  • கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
  • கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
  • நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
  • படைத்தலைவர்
  • யானை வீரர்
  • இவுளி மறவர் (குதிரை வீரர்)

7. மணிமேகலை – குறிப்பு வரைக

  • ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
  • மணிமேகலைத் துறவு என்பது இதன் வேறு பெயராகும்.
  • பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம்
  • பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
  • சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
    பெளத்த சமயம் சார்புடையது.
  • மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
  • இது 30 காதையாக அமைந்துள்ளது.

8. சீத்தலைச் சாத்தனார் – குறிப்பு எழுதுக

  • மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர்  சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • தானிய வணிகம் செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
  • இவரின் வேறுபெயர் –  தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
  • கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • திருச்சி சீத்தலையில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்பர்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment