TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.6 – திருக்குறள்

2.6 திருக்குறள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.6 – திருக்குறள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - thirukural

8th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
  • திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்
  • அறம், பொருள், இன்பம் என முப்பால் பகுப்புகள் கொண்டது
  • அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை கொண்டது.
  • பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல் என மூன்று இயல்களை கொண்டது.
  • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என இரு இயல்களை கொண்டது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ______________

  1. அடக்கமுடைமை
  2. நாணுடைமை
  3. நடுவு நிலைமை
  4. பொருளுடைமை

விடை : நடுவு நிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ______________

  1. வலிமையற்றவர்
  2. கல்லாதவர்
  3. ஒழுக்கமற்றவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கல்லாதவர்

3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது ______________

  1. வல் + உருவம்
  2. வன்மை  + உருவம்
  3. வல்ல + உருவம்
  4. வல்லு + உருவம்

விடை : வன்மை  + உருவம்

4. ‘நெடுமை + தேர்’ என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் ………………….

  1. நெடுதேர்
  2. நெடுத்தேர்
  3. நெடுந்தேர்
  4. நெடுமைதேர்

விடை : நெடுந்தேர்

5. ‘வருமுன்னர்’ எனத்  தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………

  1. எடுத்துக்காட்டு உவமை அணி
  2. தற்குறிப்பேற்று  அணி
  3. உவமை  அணி
  4. உருவக அணி

விடை : உவமை  அணி

குறு வினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

2. பழியின்றி வாழும் வழியாக, திருக்குறள் கூறுவது யாது?

தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன் பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. ‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

மனத்தை அடக்கும் வல்லமை இல்லதாவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

கோடிட்ட  இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் _____________
   புலியின்தோல் _____________ மேய்ந் தற்று.

விடை : பெற்றம், போர்த்த

2. விலங்கொடு _____________ அனையர் _____________
   கற்றாரோடு ஏனை யவர்

விடை : மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

விடை :-

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக. 

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் ____________

  1. பரிபாடல்
  2. திருக்குறள்
  3. குறுந்தொகை
  4. நற்றிணை

விடை : திருக்குறள்

2. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ____________

  1. ஆத்திச்சூடி
  2. திருவள்ளுவமாலை
  3. கலித்தொகை
  4. நற்றிணை

விடை : திருவள்ளுவமாலை

3. நடுவுநிலைமையுடன் செயல்படுவதே ____________ அழகாகும்

  1. கயவர்க்கு
  2. கல்லாதார்க்கு
  3. மூடர்க்கு
  4. சான்றோர்க்கு

விடை : சான்றோர்க்கு

4. மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் ____________ வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  1. கயவர்க்கு
  2. கல்லாதார்க்கு
  3. மூடர்க்கு
  4. சான்றோர்க்கு

விடை : சான்றோர்க்கு

5. ____________ வரும்முன்னே சிந்தித்து காத்துக் கொள்ள வேணடும்.

  1. வலி
  2. பழி
  3. சளி
  4. உளி

விடை : பழி

6. திருவள்ளுவர் ____________ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

  1. ஆயிரம்
  2. இரண்டாயிரம்
  3. மூவாயிரம்
  4. நான்காயிரம்

விடை : இரண்டாயிரம்

7. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ____________

  1. புறநானூறு
  2. தொல்காப்பியம்
  3. சீவகசிந்தாமணி
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

8. திருக்குறள் ____________ பகுப்புக் கொண்டது.

  1. இருபால்
  2. நான்குபால்
  3. முப்பால்
  4. ஐந்துபால்

விடை : முப்பால்

9. “கடல் ஓடா” எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ____________ 

  1. பிறிதுமொழிதல் அணி
  2. தற்குறிப்பேற்ற அணி
  3. உருவக அணி
  4. உவமை அணி

விடை : முப்பால்

10. முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ____________ 

  1. நக்கீரர்
  2. கம்பர்
  3. வள்ளுவர்
  4. கபிலர்

விடை : வள்ளுவர்

11. ____________ உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.

  1. பெரியபுராணம்
  2. திருக்குறள்
  3. தேவாரம்
  4. நற்றிணை

விடை : திருக்குறள்

பிரித்தெழுக

  • அவரவர் = அவர் + அவர்
  • தகவிலர் = தகவு + இலர்
  • நிலைமையான் = நிலைமை + ஆன்
  • மேய்ந்தற்று = மேய்ந்து + அற்று
  • பாலால் = பால் + ஆல்
  • நாவாயும் = நாவாய்  + உம்
  • இடம் + கண்ட = இடங்கண்ட

சிறு வினா

1. பொருத்தமான இடத்தை அறியாமல் எதனை கூடாது என வள்ளுவர் கூறுகிறார்?

பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும், தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

2. கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது எதற்கு இணையானது?

கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

3. பயனில்லா நிலத்தை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?

பயனில்லா நிலத்தை வள்ளுவர் கல்லாதவருடன் ஒப்பிடுகிறார்

4. எவரால் எந்தப் பயனும் இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?

கல்லாதவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

குறு வினா

1. பிறிது மொழிதல் அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக

அணி விளக்கம்

உவமையை மட்டும் கூறிப் பொருளினைப் பெற வைப்பதனால் பிறிது மொழிதல் அணி ஆகும்.

எ.கா.

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

அணி பொருத்தம்

அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாக செயல்பட முடியும் என்பதே புலவர் கூற விரும்பிய கருத்து. ஆனால் அதனைக் கூறாமல் பெரியதோர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓடாது என உவமையாக வேறொன்றைக் கூறியுள்ளார். ஆகவே இது பிறது மொழிதல் அணி ஆயிற்று

2. இல்பொருள் உவமையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

அணி விளக்கம்

உலகத்தில் இல்லாத பொருளை உவமையாக்கி கூறுவது இல்பொருள் உவமையணி எனப்படும்

எ.கா.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

அணி பொருத்தம்

பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தல் உலகில் இல்லா செயலாகும். எனவே அதனை உவமையாக்கிக் கூறியுள்ளமையார், இது இல்பொருள் உவமை அணி ஆயிற்று.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment