8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.5 – மகனுக்கு எழுதிய கடிதம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் | நா.முத்துக்குமார் |
காலம் | 12.07.1972 – 14.08.2016 |
ஊர் | காஞ்சிபுரம் |
பணி | பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் |
படைப்புகள் | நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், சில்க்சிட்டி, குழந்தைகள் நிறைந்த வீடு, தூசிகள் |
சிறப்பு | இரண்டு தேசிய விருது, இரண்டு பிலிம் பேர் விருது |
பாட நூல் மதிப்பீட்டு வினா
மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை
கடதம் எழுதுவது ஒரு கலை என்பார்கள். அத்தகு அரிய கடித்கலையில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்துகளை இனிக் காண்போம்.
வாழ்க்கை நாடகம்
உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழந்து, பின் தலைநிமிர்ந்து. அந்தச் சாகத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கி எழ வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தை நான் நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.
கற்றுப்பார்
கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், சுற்றுப்பார்
உனக்கான காற்றை உருவாக்கு
கிராமத்தில் கூரை வீட்டில் வசித்தோம். கோடை காலத்தில் கூரை மீது இருந்து தேள்கள் விழும். இரவு முழுவதும் என் தந்தை விசிறியால் வீசிக் கொண்டே இருப்பார். இன்று விசிறியும் இல்லை. கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.
அறிவுரை
கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகமானது. உறவுகளையும் விட மேலானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களை சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும் என்று மகனுக்கு அறிவுரை பகிர்கிறார் முத்துக்குமார்.
முடிவுரை
உனக்கு வயதாகும் போது இதை மீண்டும் படித்துப் பார். உன் கண்ணீர் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான் என்று கடிதத்தை நிறைவு செய்கிறார் நா.முத்துக்குமார்.
கற்பவை கற்றபின்
1. நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீரு்கள்? அப்படியொரு கடிதம் எழுதுக.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற என் நண்பனுக்குப் பாராட்டு கடிதம் எழுதுகிறேன்.
507, காந்திநகர்
வெங்கடேஷ்வரபுரம், தென்காசி
தேதி
அன்புள்ள நண்பா!
உன் உயிர் நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் நலம். அதுபோல நீயும் உன் குடும்பத்தாரும் நலமா? இன்று காலை ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் உன்னுடைய புகைப்படத்தைப் பாரத்தேன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் நீ பெற்றதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. உழைப்பு உயர்வு தரும் என்பதை நீ நிருபித்து விட்டாய். மேலும், நீ பல சாதனை செய்ய என் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
சங்கர லிங்கம்
உறைமேல் முகவரி
பெறுநர்
கபிலன்
7/207, சமாதானபுரம்
திருநெல்வேலி
2. வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பரின் சிறந்த பண்பைப் பாராட்டியும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பைப் பற்றியும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக
இடம் : தென்காசி
நாள் :
அன்பு நண்பா!
உன் அன்புக்கு என் முதல் வணக்கம் நீ படிப்பில் மிகச்சிறந்தவன், அதுபோல பேச்சுப்போட்டியிலும் உன்னை வெல்ல யாராலும் முடியாது. தவறாக கருத வேண்டாம். உன் நலத்திற்காக ஒன்றைச் சொல்கிறேன். சினம் கொள்ள வேண்டாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். ஆம்! உடல் நலத்துடன் இருந்தால்தான், படிப்பிலும், போட்டியிலம் உயர முடியும். உன் உடல் நலத்தைக் கண்டுகொள். தினமும் நீ உடற்பயிற்சி செய். உன் உடல் இளைத்து வலுப்பெறுவாய். உன் மீது அக்கறை கொண்டதால் இதைச் சொல்கிறேன். தவறெனில் பொறுத்துக்கொள் நண்பா!
இப்படிக்கு
சங்கர லிங்கம்
கூடுதல் வினாக்கள்
1. எதன் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் இல்லை என சொல்லலாம்?
கைபேசி
2. கடிதங்களைக் கொண்டு பரிமாறிக்கொள்பவைகள் யாவை?
- வரலாறுகள்
- இலக்கியங்கள்
2. கதை வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளோர் யாவர்?
தாகூர், நேரு, டி.கே.சி.,வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு.வரதாசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன், நா. முத்துக்குமார்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…