3.4 வல்லினம் மிகும் இடங்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 3.4 – வல்லினம் மிகும் இடங்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
பலவுள் தெரிக.
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று –
- அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
- புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
- எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
- பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.
விடை : எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. வல்லினம் மிகுதல் என்றால் என்ன?
வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.
2. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
4. வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு வழிகள் யாவை?
வல்லினம் மிகும் இடங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கினாலே, தவறுகளைத் தவிர்த்து விடலாம். மரபையும் பட்டறிவையும் தாண்டி, சொற்களை ஒலித்துப் பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளியவழி எனலாம்.
கற்பவை கற்றபின்…
வல்லினம் மிகலாமா?
அ) பெட்டிச்செய்தி
ஆ) விழாக்குழு
இ) கிளிப்பேச்சு
ஈ) தமிழ்த்தேன்
உ) தைப்பூசம்
ஊ) கூடக்கொடு
எ) கத்தியை விடக்கூர்மை
ஏ) கார்ப்பருவம்
தொடர் தரும் பொருளைக் கூறுக.
அ) சின்னக்கொடி / சின்னகொடி
- சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
- சின்ன கொடி – சிறிய கொடி
ஆ) தோப்புக்கள் / தோப்புகள்
- தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
- தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்
இ) கடைப்பிடி / கடைபிடி
- கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
- கடைபிடி- வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது
ஈ) நடுக்கல் / நடுகல்
- நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
- நடுகல் – நினைவுச்சின்னம்
உ) கைம்மாறு / கைமாறு
- கைம்மாறு – உதவி செய்தல்
- கைமாறு –கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
ஊ) பொய்ச்சொல் / பொய்சொல்
- பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
- பொய் சொல்- பொய் சொல்வது தவறு
சிந்தனை வினா
நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதிவருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.
அதற்க்கு – தவறு | அதற்கு = அது+அன்+கு அது (சுட்டுப்பெயர்) + அன் (சாரியை) + கு (வேற்றுமை உருபு) அதன்+கு = அதற்கு – என்பதே சரி (எ.கா.) இந்தப் பொருள் வேண்டாம். அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள். |
கடைபிடித்தல்
கடைப்பிடித்தல் |
கடைபிடித்தல் – கடையைப்பிடித்தல் கடைப்பிடித்தல் – பின்பற்றுதல் (எ.கா.) சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடைபிடித்தார். நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம். |
அதற்க்கு – தவறு
வல்லெற்றுக்கு அருகில் இன்னொரு வல்லினம் மிகாது. அதற்கு என்றே எழுத வேண்டும்
கடைபிடி. கடைப்பிடி
இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து “கடைப்பிடி” என வரும்போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.
எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.
கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்கு குறைவான எண்ணிக்கையில் தான் தங்கத்தினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.
மேலும் இரும்பை பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்தச் சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.
விடை :
பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று. கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில் தான் தங்கதினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் இரும்பைப் பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்த சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன. |
மொழியை ஆள்வோம்!
படித்துச் சுவைக்க.
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ
மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம்போட்டுத்
தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!
வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ
முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா
தொட்டில் கட்டித் தாலாட்டத் தூக்கம் வருமோடா
கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால்
மதியத்து வெயிலிலே மயக்கமும்தான் வாராதோ
வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன்
வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ?
– நாட்டுப்புறப்பாட்டு, தகவலாளர்: வேலம்மாள்
பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
- ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது.
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
- மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
- அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
- உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
- வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா
வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.:
விடை :
தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேலும் கீழும்
- ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
2. மேடும் பள்ளமும்
- மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது
3. நகமும் சதையும்
- நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.
4. முதலும் முடிவும்
- இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது
5. கேளிக்கையும் வேடிக்கையும்
- திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
6. கண்ணும் கருத்தும்
- நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கர்நாடகம்
- கேரளா
- இலங்கை
- ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக:
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
- கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
- கண்டெடுக்க + பட்டு + உள்ளன
- கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
- வினாத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செய்தித்தொடர்
- உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
மொழியோடு விளையாடு
பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அ) அலை – அழை
அலை | கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது. |
அழை | வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன் |
ஆ) கரை – கறை
கரை | ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன |
கறை | படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது |
இ) குளவி – குழவி
குளவி | பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது |
குழவி | குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) |
ஈ) வாளை – வாழை
வாளை | மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது. |
வாழை | வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம். |
உ) பரவை – பறவை
பரவை | பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை. |
பறவை | பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன. |
ஊ) மரை – மறை
மரை | தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும். |
மறை | வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன. |
அகராதியில் காண்க.
அ) இயவை
- வழி
- மூங்கில்
- அரிசி
- துவரை
- தோரை நெல்
- காடு
ஆ) சந்தப்பேழை
- சந்தனப் பெட்டி
இ) சிட்டம்
- நூல் சிட்டம்
- உரிந்து கருகியது
- பெருமை அறிவு
- நீதி
- உயர்ந்து
ஈ) தகழ்வு
- அகழ்
- அறிவு. உண்கலம்
உ) பௌரி
- பெரும் பண் வகை
பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக..
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
- வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6) ____________
- இந்திரவிழா
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3) ____________
- தவறு
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7) ____________
- தவளை ஓட்டம்
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2) ____________
- விதி
13. மா + அடி – இதன் புணர்ந்த வடிவம் (3) ____________
- மாவடி
19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2) ____________
- கோள்
வலமிருந்து இடம்
9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2) ____________
- சிரை
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3) ____________
- ஆய்வு
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5) ____________
- சாத்தனார்
18. தனி + ஆள் -சேர்த்து எழுதுக. (4) ____________
- தனியாள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7) ____________
- ஏறு தழுவுதல்
2. இவள் + ஐ – சேர்ந்தால் கிடைப்பது (3) ____________
- இவளை
3. மரத்தில் காய்கள் ____________ ஆகக் காய்த்திருந்தன (4)
- திரட்சி
5. உரிச்சொற்களுள் ஒன்று (2) ____________
- தவ
6. ____________ சிறந்தது (2)
- சால
8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2) ____________
- ஓரை
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4) ____________
- சாடிகள்
15. காய் பழுத்தால் ____________ (2)
- கனி
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3) ____________
- வத்தி
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2) ____________
- யார்
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4) ____________
- தக்கார்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
கலைகள் பலகண்ட கவின்மிகு தமிழ்நாடு நாத கீதம் மிருதங்க தாளம் வீணை மெல்லிசை மீட்ட புதுக்கோலம் புனைந்து கோமாதா வாழ்த்த தீபச்சுடரொளி எங்கும் ஏற்றுவோம்! |
நிற்க அதற்குத் தக…
நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்
- கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்த போது.
- கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
- தெருவில் கிடந்த நகையை எடுத்து காவலரிடம் ஒப்படைத்த போது
- ஏழை குழந்தையின் படிக்கும் செலவை ஏற்றபோது
அறிவை விரிவு செய்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க. ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்
- தமிழர் சால்பு – சு. வித்யானந்தன
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…