TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 2.2 – பட்ட மரம்

2.2 பட்ட மரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 2.2 – பட்ட மரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Patta Maram

8th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் கவிஞர் தமிழ்ஒளி
இயற்பெயர் விஜயரங்கம்
காலம் 21.09.1924 – 24.03.1965
படைப்புகள் நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், வீதியோ வீணையோ, குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம், புத்தர் பிறந்தார், திருக்குறளும் கடவுளும்

சொல்லும் பொருளும்

  • குந்த – உட்கார
  • கந்தம் – மணம்
  • மிசை – மேல்
  • விசனம் – கவலை
  • எழில் – அழகு
  • துயர் – துன்பம்

இலக்கணக்குறிப்பு

  • வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சம்
  • மூடுபனி, ஆடுகிளை – வினைத்தொகை
  • வெறுங்கனவு – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. விரித்த = விரி + த் + த் +அ

  • விரி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ

  • குமை – பகுதி
  • த் – சந்தி
  • த்-ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • கவிஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

பலவுள் தெரிக.

1. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன ?

  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை

விடை : கீழே

சிறு வினா

பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.
  • இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருந்தியது.

கற்பவை கற்றபின்

1. விளைநிலங்கள் கட்டங்களாகின்றன – என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசுக

ஏழை விவசாயி எங்க அப்பா காலத்திலிருந்து நெல் கரும்பு போட்டோம் அப்ப வந்தது. இப்ப… வெண்டை, புடவை கூட வரமாட்டேங்குது
அழகு (மனை விற்பனையாளர்) என்ன போட்டு என்ன ஆச்சு? மழையில்லாளா என்ன பண்ண முடியும்?
ஏழை விவசாயி அழகு… பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்ல, கிணத்துல தண்ணியில்லே!
அழகு நான் சொல்ற வழிக்கு வரமாட்டாங்கிற… வித்து பணத்த பேங்குல போட்டுட்டு நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்கு.
ஏழை விவசாயி பூமித்தாயே விக்கச் சொல்ற… வித்தா அப்பார்ட்மெண்ட கட்றங்கிறீங்க… என்ன ஆகப் போதுன்ன எனக்குத் தெரியல!
அழகு மழையில்ல தண்ணியில வீடு கட்டி நூறு ஜனங்க பொழக்கட்டுமே! வயல் வரப்ப வச்சிருந்த என்ன பண்ணப் போறீங்க? வித்தா மகளுக்கு கல்யாணம்; மகனைப் படிக்க வைக்க… எல்லாம் உன் நன்மைக்கே சொல்றேன்.
ஏழை விவசாயி பால்தர்ற பசுமாட்ட மடி அறுத்துப் பால் குடிக்கிறதா? விளைநிலத்தைப் பூரா விலை நிலமாக ஆக்கிட்டீங்க அழகு.
அழகு இனி வரப்போற நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?
ஏழை விவசாயி உங்க மாதிரி ஆளகளால தான் கொசு தொந்தரவு நிறைய ஆகிருச்சு. குளங்குட்டையெல்லா பிரிச்சிப் போட்டு வித்தாச்சு தவளை இருந்தா கொசுவப் பிடிக்கும் இப்ப அதுக்கும் வழியில்ல
அழகு ஒன்னும் வேணாங்க உங்க புள்ளங்க இந்தக் குடிசையில இருக்குமா? கேட்டுக் சொல்லுங்க…
ஏழை விவசாயி உனக்குப் பணம் முக்கியம் எனக்கு பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுறவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுறவன் பணக்காரனாகிறான்.

2. பட்டமரம், புதிதாக முளைத்த குருத்து ஆகிய இரண்டும் பேசிக் கொள்வதாய்க் கற்பனை உரையாடல் நிகழ்த்துக

பட்டமரம் பேரனே! நலமா? தேடாதே! நான் தான் உன் தாத்தா பட்டமரம்
புதிதாக முளைவிட்ட குருத்து ஐயோ, நீங்களா இப்படி ஆகிவிட்டீர்கள்!
பட்டமரம் ஆமாம், பேராண்டி மனிதர்கள் செயற்கை உரம், நெகிழியை பயன்படுத்தி என்னை இப்படி ஆக்கி விட்டார்கள். நம்ம வம்சமே பட்டுபோய் விட்டது. உன்னை மட்டும் தான் காப்பாற்ற முடிந்து. நீ எப்படியோ பிழைத்துக் கொள்!
புதிதாக முளைவிட்ட குருத்து தாத்தா கவலைப்படாதீர்கள். நம் வம்சத்தைக் காப்பாற்ற மனிதர்களிடம் புரிய வைக்கிறேன்.
பட்டமரம் சரிப்பா. நான் ஓய்வெடுக்கின்றேன். மனிதர்களுக்கு நன்கு புரியவை
புதிதாக முளைவிட்ட குருத்து இதோ செல்கிறேன் தாத்தா.

3. ‘பட்டணத்துப் பறவைகளும்’ ‘ஊர்ப் பறவைகளும்’ பேசுவது போலச் சிறு சிறு கவிதைகள் படைக்க

பட்டணத்துப் பறவைகள்

“பயந்து பயந்து பறக்கின்றோம்
பட்டணத்துக் காரன் பிடிச்சிடுவான்
பார்த்து பார்த்து உண்கின்றோம்
உணேவ நஞ்சு பட்டணத்தில்
உண்டு தினமும் அழிகின்றோம்”

ஊர்ப் பறவைகள்

“சுதந்திரமாய்ப் பறக்கின்றோம்
சுகமாய் தினமும் வாழ்கின்றோம்
பார்க்காமல் உண்டாலும்
உணேவ மருந்து கிராமத்தில்
உண்டு தினமும் வாழ்கின்றோம்”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் _______________

  1. தமிழ் ஒளி
  2. தமிழன்பன்
  3. சேக்கிழார்
  4. திருவள்ளுவர்

விடை : தமிழ் ஒளி

2. ‘பட்டமரம்’ கவிதை இடம் பெறும் நூல்  ___________

  1. நிலைபெற்ற சிலை
  2. வீராயி
  3. தமிழ் ஒளியின் கவிதைகள்
  4. மாதவி

விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்

3. குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்த இலை – இவ்வடியில் “மணம்” என்னும் பொருள் தரும் சொல் எது?

  1. குந்த
  2. கந்தம்
  3. கூரை
  4. விரித்த

விடை : கந்தம்

4. குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்த இலை – இவ்வடியில் உள்ள அடிஎதுகையைக்  கண்டறிக?

  1. குந்த – கூரை
  2. குந்த – கந்த
  3. மலர் – நிழல்
  4. நிழல் – விரித்த

விடை : குந்த – கந்த

5. பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்ததுவும் – இவ்வடியில் உள்ள அடிமோனையைக் எழுதுக

  1. பாடும் – கூடி
  2. பாடும் – பாடல்
  3. பறவைகள் – உனக்கொரு
  4. கூடி – உனக்கொரு

விடை : பாடும் – பாடல்

பொருத்துக

1. குந்த அ. மணம்
2. கந்தம் ஆ. உட்கார
3. மிசை இ. கவலை
4. விசனம் ஈ. மேல்
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. நம் முன்னோரின் வாழ்க்கை எதனோடு இயைந்தது?

நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.

2. நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் போற்றி காத்தனர்?

நம் முன்னோர்கள் மரம், செடி, கொடிகளையும் பாேற்றிக் காத்தனர்.

3. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல், அதன் ஆசிரியர் யார்?

  • நூல் – தமிழ் ஒளியின் கவிதைகள்
  • ஆசிரியர் – தமிழ் ஒளி (விஜயரங்கம்

4. மரம் எதைப்போல் எய்தி உழன்றது?

காலமாகிய பயுல் தாக்கம்போது அழுது கை நீட்டிக் கதறும் மனிதன் போல மரம் உழன்றது.

5. நமக்கு உயிர்வளி எவ்வாறு கிடைக்கிறது?

நமக்கு உயிர்வளி மரங்கள் வழியாக கிடைக்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment