TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 2.3 – பெரியபுராணம்

2.3 பெரியபுராணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 2.3 – பெரியபுராணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Periyapuranam

8th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் சேக்கிழார்
இயற்பெயர் அருண்மொழித்தேவர்
காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டு
படைப்புகள் பெரியபுராணம், திருத்தொண்டர் புராணம், திருப்பதிகக் கோவை

சொல்லும் பொருளும்

  • மா – வண்டு
  • மது – தேன்
  • வாவி – பொய்கை
  • வளர் முதல் – நெற்பயிர்
  • தரளம் – முத்து
  • பணிலம் – சங்கு
  • வரம்பு – வரப்பு
  • கழை – கரும்பு
  • கா – சோலை
  • குழை – சிறு கிளை
  • அரும்பு – மலர் மொட்டு
  • மாடு – பக்கம்
  • நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்
  • கோடு – குளக்கரை
  • ஆடும் – நீராடும்
  • மேதி – எருமை
  • துதைந்து எழும் – கலக்கி எழும்
  • கன்னி வாளை – இளமையான வாளைமீன்.
  • சூடு – நெல் அரிக்கட்டு
  • சுரிவளை – சங்கு
  • வேரி – தேன்
  • பகடு – எருமைக்கடா
  • பாண்டில் – வட்டம்
  • சிமயம் – மலையுச்சி
  • நாளிகேரம் – தென்னை
  • நரந்தம் – நாரத்தை
  • கோளி – அரசமரம்
  • சாலம் – ஆச்சா மரம்
  • தமாலம் – பச்சிலை மரங்கள்
  • இரும்போந்து – பருத்த பனைமரம்
  • சந்து – சந்தன மரம்
  • நாகம் – நாகமரம்
  • காஞ்சி – ஆற்றுப்பூவரசு

இலக்கணக்குறிப்பு

  • விரிமலர் – வினைத்தொகை
  • தடவரை – உரிச்சொல் தொடர்
  • கருங்குவளை – பண்புத்தொகை
  •  செந்நெல் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

பகாய்வன – பகாய் + வ + அன் + அ

  • பகாய் – பகுதி
  • வ – எதிர்கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • சுந்தரின் திருத்தொண்டர் தொகை அடியவர் பெருமையை கூறுகிறது.
  • இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதி பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது.
  • இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொர் அடியராக அறுபத்து மூவரின்  சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம்.
  • இதன் பெருமை காரணம் இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
  • கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
  • “பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.

சிறு வினா

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லுக்கும் பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.

நெடு வினா

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

  • காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்து ஆரவாரம் செய்கின்றன. நாட்டுக்கு வளம் தரம் காவிரி கால்வாய்களில் எங்கும் ஓடுகின்றது.
  • நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.
  • காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.
  • சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.
  • பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.
  • வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
  • கரை எங்கும் இளைய அன்னங்கள் உள்ளன.
  • அதனால் நாடு நீர் நாடு என்ற சொல்லத்தக்கதாய் உள்ளது.
  • அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது
  • செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள், முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றை திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.
  • தென்னை, செருந்தி, நரந்தரம், அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரம், குராமரம், பனை, சந்தனம், நாகம், வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் வளர்ந்துள்ளன.
  • இவையே பெரியபுராணம் திருநாட்டுச் சிறப்பு ஆகும்.

கற்பவை கற்பின்

1. பள்ளி இலக்கிய மன்றத்தில் கவிதை படித்தல்

மூச்சுவிடும் மரம்

இழுத்து இழுத் மூச்சுவிடும்
எனக்கு சுவாசக் கோளாறாம்
கால மருத்தவர் சொன்னார் உயிர்க்காற்று
உருளைக்கு நான் எங்கு செல்வேன்.

புரட்டிப் போட்டப் புயல்

இயற்கை அன்னையை மறந்து
செயற்கை அன்னையைத் தேடியதால்
வந்த விளைவு
உன்னைப் புரட்டிப்போட்ட புயல்

இசை பாடும் பறவைகள்

பறவைகளுக்குத் தான்
என்ன ஆனது
இப்படி புரியாத மொழியல் பாடுகின்றதே!
நாகரிக மோகம் கொண்டு
நீயும் மேற்கத்திய இசையோ

2. பின்வரும் கவிதைகளின் விவரிப்பை உரைநடையில் எழுதுக

வானகமே,, இளவெயிலே, மரசெறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீராே? – வெறுங் காட்சிப் பிழைதானாே?
போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும்ஓர் கனவாே? – இ்ந்த
ஞாலமும் பொய்தானாே?

– பாரதியார்

உரைநடை விவரிப்பு

வானம், இளவெயில், மரக்கூடங்கள் ஆகிய நீங்கள் கானல் நீரன்று… இறைவனின் படைப்புகள், நீங்கள் காட்சிப் பிழையா? இல்லை. உண்மையின் உருவம். வாழ்வின் கனவு அழிவது போல் நானும் அழிந்து போகும் கனவோ? பூமியும் பொய்யோ?

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சேக்கிழார் இயற்றிய நூல் _____________

  1. கம்பராமாயணம்
  2. வள்ளித் திருமணம்
  3. திருமந்திரம்
  4. திருத்தொண்டர் புராணம்

விடை : திருத்தொண்டர் புராணம்

2. அருண்மொழித்தேவர் இயற்பெயர் கொண்டவர் _____________

  1. சுந்தரர்
  2. சேக்கிழார்
  3. நம்பியாண்டவர் நம்பி
  4. மீனாட்சி சுந்தரனார்

விடை : சேக்கிழார்

3. “மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு” – இவ்வடியில் ‘வண்டு’ என்னும் பொருள் தரும் சொல் எது?

  1. விரை
  2. வரை
  3. மா
  4. ஆர்ப்ப

விடை : மா

3. “வாவியற் பொலிநாடு” – இவ்வடியில் ‘வாவி’ என்னும் பொருள் தரும் சொல் எது?

  1. பொய்கை
  2. வண்டு
  3. தேன்
  4. நீர்

விடை : பொய்கை

5. களை பறிக்கும் பருவம் என்று உழவர் அறிய காரணமான செயல் _____________

  1. நாற்று நடல்
  2. நாற்றின் முதல் இலைச் சுருள் விரிதல்
  3. கதிர் முற்றல்
  4. கதிர் அறுத்தல்

விடை : நாற்றின் முதல் இலைச் சுருள் விரிதல்

6. நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டது _____________

  1. திருத்தொண்டர் திருவந்தாதி
  2. திருச்சாரம்
  3. திருப்பாவை
  4. திருக்கோதரம்

விடை : திருத்தொண்டர் திருவந்தாதி

7. சேக்கிழார் ………………….. சேர்ந்தவர்

  1. 10-ம் நூற்றாண்டை
  2. 11-ம் நூற்றாண்டை
  3. 12-ம் நூற்றாண்டை
  4. 13-ம் நூற்றாண்டை

விடை : 12-ம் நூற்றாண்டை

8. _____________ வளத்தை பெரியபுராணம் எடுத்துரைக்கிறது.

  1. சேர நாட்டு
  2. சோழ நாட்டு
  3. பாண்டிய நாட்டு
  4. பல்லவ நாட்டு

விடை : சோழ நாட்டு

9. வானத்தில் தோன்றி மறையும் வானவில் காட்சிக்கும காரணமானவை அமைந்த சரியானதைத் தேர்வு செய்க

  1. அன்னங்கள், எருமைகள், வாளைமீன்கள்
  2. அன்னங்கள், பசுக்கள், வாளைமீன்கள்
  3. கொக்குகள், எருமைகள், வாளைமீன்கள்
  4. அன்னங்கள், எருமைகள், பருந்துகள்

விடை : அன்னங்கள், எருமைகள், வாளைமீன்கள்

10. நிலையான வானத்தில் தோன்றி மறைவது ____________

  1. நிலா
  2. கதிரவன்
  3. வானவில்
  4. மேகம்

விடை : வானவில்

பொருத்துக

1. நாளிகேரம் அ. ஆற்றுப்பூவரசு
2. கோளி ஆ. பனைமரம்
3. போந்து இ. தென்னை
4. காஞ்சி ஈ. அரசமரம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ. 4 – அ

குறு வினா

1. உழவர்கள் களைபறிக்கும் பருவத்தை எப்படி அறிந்திருந்தனர்?

நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

2. திருநாட்டில் எவற்றையெல்லாம் குவித்து வைத்திருந்தனர்?

  • செந்நெல்லின் சூடுகள்
  • பலவகைப்பட்ட மீன்கள்
  • முத்துக்கள், மலர்த் தொகுதிகள்

2. திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவை எவை?

  • தென்னை, நரந்தரம், அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரம், குராமரம், பனை மரம், சந்தனமரம், நாகமரம், வஞ்சி – காஞ்சி நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.

குறு வினா

1. திருநாட்டு நீர் வளச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

  • காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.
  • சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.
  • பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.
  • வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
  • கரை எங்கும் இளைய அன்னங்கள் உள்ளன.
  • அதனால் நாடு நீர் நாடு என்ற சொல்லத்தக்கதாய் உள்ளது.

2. திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவையாக பெரியபுராணம் குறிப்பிடுவன எவை?

தென்னை, செருந்தி, நரந்தரம், அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரம், குராமரம், பனை, சந்தனம், நாகம், வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவையாக பெரியபுராணம் குறிப்பிடுவன

3. சேக்கிழார் – குறிப்பு வரைக

  • சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
  • சேக்கிழார் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • பெரியபுராணம், திருத்தொண்டர் புராணச்சாரம், திருப்பதிகக் கோவை இவரது படைப்புகளாகும்
  • இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்
  • பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.

4. பெரியபுராணம் – குறிப்பு வரைக

  • பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமாள் இயற்றினார்
  • சைவ அடிகளாரின் வாழக்கை வரலாற்றை கூறுவதால் இது சைவ காப்பியமாகும்
  • சேக்கிழார் இந்நூலுக்கு இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
  • சைவ அடியார்கள் வரலாறு கூறுவதனால் பெரியபுராணம் என ஆயிற்று
  • இருகாண்டங்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment