1.2 வயலும் வாழ்வும்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.2 – வயலும் வாழ்வும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர் | கிருஷ்ணாராயபுரம் வாசுதேவ ஜெகந்நாதன் |
காலம் | 11.04.1906 – 04.11.1988 |
சிறப்பு | உ.வே.சாவின் மாணவர், 1967-ல் “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகதெமி விருது. |
படைப்புகள் | அதியமான் நெடுமான் அஞ்சி, அதிசியப் பெண், அறுந்ததந்தி, ஜோதி உட்பட 134 நூல்கள் என்கதை, சங்கொலி |
சொல்லும் பொருளும்
- குழி – நில அளவைப்பெயர்
- சீலை – புடவை
- சாண் – நீட்டல் அளவைப்பெயர்
- மடை – வயலுக்கு நீர் வரும் வழி
- மணி – முற்றிய நெல்
- கழலுதல் – உதிர்தல்
- சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
பாடலின் பொருள்
உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் 0பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
நூல் வெளி
- நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
- இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
- பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
தெரிந்து தெளிவோம்
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாதுசெந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை
(நாட்டுப்புறப்பாடல்)
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உழவர் சேற்று வயலில் ________ நடுவர்.
- செடி
- பயிர்
- மரம்
- நாற்று
விடை : நாற்று
2. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ________ செய்வர்.
- அறுவடை
- உழவு
- நடவு
- விற்பனை
விடை : அறுவடை
3. ‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- தேர் + எடுத்து
- தேர்ந்து + தெடுத்து
- தேர்ந்தது + அடுத்து
- தேர்ந்து + எடுத்து
விடை : தேர்ந்து + எடுத்து
4. ‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- ஓடைஎல்லாம்
- ஓடையெல்லாம்
- ஓட்டையெல்லாம்
- ஓடெல்லாம்
விடை : ஓடையெல்லாம்
பொருத்துக.
1. நாற்று | அ. பறித்தல் |
2. நீர் | ஆ. அறுத்தல் |
3. கதிர் | இ. நடுதல் |
4. களை | ஈ. பாய்ச்சுதல் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
“வயலும் வாழ்வும்” பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக.
மோனைச் சொற்கள்
- ஓடை – ஓடியோடி
- நாத்தெல்லாம் – நாலுநாலா
- மணிபோல – மனதையெல்லாம்
- மடமன்னு – மண்குளிரத்
- சும்மாடும் – சுறுசுறுப்பும்
எதுகைச் சொற்கள்
- சாலுசாலத் – நாலுநாலா
- நண்டும் – தண்ணீர்பாய
- ஏலேலங்கடி – ஏலேலோ
- ஒண்ணரைக் குழி – மண்குளிர
- சேத்துக்குள்ளே – நாத்தெல்லாம்
- கிழக்கத்தி – கழலுதையா
பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.
பேச்சு வழக்கு | எழுத்து வழக்கு |
போயி | போய் |
பிடிக்கிறாங்க | பிடிக்கிறார்கள் |
வளருது | வளர்கிறது |
இறங்குறாங்க | இறங்கிறார்கள் |
வாரான் | வரமாட்டான் |
குறு வினா
1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்
2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிர்ப்பர்
சிறு வினா
உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக
- ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
- நடவு நட்ட வயிலின் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சினர்.
- நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.
- பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன.
- அறுவடை செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுத்தனர்.
- அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுக் கட்டுகளாக கட்டி தலைக்கு சும்மாடு வைத்து தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.
- கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
- மாடுகள் மதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
சிந்தனை வினா
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர் பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளை பயன்படுத்தி இயற்கை எருக்களை கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொலி, செயற்கை உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.
கற்பவை கற்றபின்
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
ஏர் | மண்வெட்டி |
விதைக்கலப்பை | களைவெட்டும் இயந்திரம் |
ஊசலாடும் கூடை | வேளாண் வானூர்தி |
கதிரடி இயந்திரம் | களம் |
உமி நீக்கி | இணை அறுவடை இயந்திரம் |
உழவு இயந்திரம் | தாள்க்கத்தி |
நீர் பாசன இயந்திரம் | படல் |
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் __________ தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
- களைப்பு
- உழைப்பு
- துன்பம்
- வறுமை
விடை : களைப்பு
2. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை ……………….. என்னும் நூலில் கி.வா.ஜெகந்நாதன் தொகுத்துள்ளார்.
- சிலை அருவி
- அலை அருவி
- மலை அருவி
- கலை அருவி
விடை : மலை அருவி
3. “சீலையெல்லாம்” பிரித்தெழுதக் கிடைப்பது
- சீலை + எலாம்
- சீலை + எல்ம்
- சீலை + எல்லாம்
- சீலை + யெல்லாம்
விடை : சீலை + எல்லாம்
பொருத்துக
1. மணி | அ. உதிர்தல் |
2. சீலை | ஆ. முற்றிய நெல் |
3. கழலுதல் | இ. புடவை |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ |
குறு வினா
1. உழவுத்தொழிலின் செயல்பாடுகள் எழுதுக?
- நிலத்தைத் தெரிவு செய்தல்
- நாற்றுப் பறித்தல்
- நாற்று நடுதல்
- நீர் பாய்ச்சுதல்
- அறுவடை செய்தல்
- போரடித்தல்
- நெல் பெறுதல்
2. போரடித்தல் என்றால் என்ன?
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்கச்செய்வர். இதற்கு போரடித்தல் என்று பெயர்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…