1.2 வாரித் தந்த வள்ளல்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.2 – வாரித் தந்த வள்ளல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
கற்பவை கற்றபின்
1. கல்விச் செல்வமே பிற செல்வங்களைவிட நிலையானது- இக்கூற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
- கல்விச் செல்வம் கொடுக்க கொடுக்க குறையாது.
- காவலுக்கோ மிக எளிது. கள்வரால் கவர முடியாது.
- இயற்கைச் சீற்றங்களாலும் அழிக்க முடியாது.
எனவே கல்விச் செல்வமே பிற செல்வங்களைவிட நிலையானது
2. வல்வில் ஓரி அன்பில் சிறந்தவன்-இக்கூற்றுக்கு விளக்கம் தருக.
வல்வில் ஓரி பண்பான ஆட்சியாளராகப் பாராட்டப்பட்டார். மேலும தன்னை நாடிவரும் கவிஞர்கள் மற்றும் இதர கைவினைக் கலைஞர்களையும் பாராட்டி வெகுமதி அளித்து சிறப்புச் செய்தால் – அவர் அன்பில் சிறந்தவர் அவர்.
3. கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பை அறிந்துகொண்டு வந்து பேசுக.
- பேகன்- மயிலுக்கு போர்வை போர்த்தியவன்.
- பாரி – முல்லைக்கு தன் தேரினைத் தந்தவன்.
- நெடுமுடிக்காரி – தொண்டை மண்டலப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன்
- ஆய் – பொதிகை மலையை ஆண்ட குறுநில மன்னன்
- அதியமான் – அரியவகை நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கி தமிழை வாழ வைத்தவன்.
- நள்ளி – தோட்டி மலையை (சோழ நாடு) ஆட்சி செய்தவன்.
- வல்வில் ஓரி – கலைஞர்களையும், வினைஞர்களையும் ஆதரித்த வள்ளல்
மதீப்பிடு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. “பொற்காசு” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
- பொற் + காசு
- பொல் + காசு
- பொன் + காசு
- பொ + காசு
விடை : பொன் + காசு
2. “கொடைத்திறம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
- கொடை + திறம்
- கோடை + திறம்
- கொட + திறம்
- கொடு + திறம்
விடை : கொடை + திறம்
3 “களிறு” என்பது ……………….. யைக்குறிக்கும்
- குதிரை
- கழுதை
- யானை
- ஒட்டகம்
விடை : யானை
4. “தரணி” – இச்சொல்லின் பொருள் …………………….
- மலை
- உலகம்
- காடு
- வானம்
விடை : உலகம்
5 ‘சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது …………………
- உணவு
- அமுது
- அன்னம்
- கல்
விடை : கல்
பொருத்துக
1. பேழை | அ. வாசல் |
2. மாரி | ஆ. கடன் |
3. வாயில் | இ. பெட்டி |
4. ஆணை | ஈ. மழை |
5. இரவல் | உ. கட்டளை |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 -ஆ |
வினாக்களுக்கு விடையளிக்க.
1. ‘சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது _______________
தானியங்களும், மாவும் தீர்ந்துபோய் விட்டதால் பாணனின் குழந்தைகள் பசியால் வாடின.
2. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
அள்ளிக் கொடுக்கும் வள்ளல் வல்வில் ஓரியின் வீரத்திலும் சிறந்தவனாக விளங்கினார்.
3. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
கற்ற கல்வி அறியாமை அகற்றுதல் அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே! உங்களின் குன்றாப் புகழ் கொடைப் பண்பு ஓங்குக! வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க! என் மன்னனைப் பார்த்து பாணன் வாழ்த்தினான்.
4. ‘’வாரித் தந்த வள்ளல்“- இப்படக்கதை மூலம் நீவிர் அறிந்து கொண்டதை எழுதுக.
தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் தன்மை கொண்டவனாக இருந்தவர் வல்வில் ஓரி ஆவார். அவரைப் போல் நாமும் வாழ வேண்டும்.
சிந்தனை வினா
வல்வில் ஓரியைப் போல் ஈகைக் குணம் உனக்கிருந்தால் நீ யாருக்கெல்லாம் உதவி செய்வாய்?
- ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வேன்.
- ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உதவுவேன்.
- பின் தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் (படிப்பில்) உதவி செய்வேன்.
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது“ எனக்கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது“ என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார் பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த ல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்“ என்று கூறினார்.
1. குப்பன் எந்த வகுப்பில் படிக்கிறான்?
குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்
2. பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை என்னவாயிற்று?
பட்டத்தின் நூல் அறுந்ததும் தடுமாறிக் கீழே விழுந்தது.
3. இக்கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?
நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கண்ணுக்கு அழகு பிறரிடம் ___________ காட்டல்.
விடை : இரக்கம்
2. சிறுபஞ்ச மூலம் ___________ என்பவரால் எழுதப்பட்டது.
விடை : காரியாசான்
3. வாரி கொடுக்கும் வள்ளல்___________
விடை : வல்வில் ஓரி
4. நாட்டு மக்களை வருத்தாமை___________ க்கு அழகு
விடை : அரசனுக்கு
பிறமொழிச் சொற்கள் கலவாமால் எழுதுக
1. என்னுடைய புக் டேபிளில் உள்ளது.
விடை : என்னுடைய புத்தகம் மேசையில் உள்ளது
2. நான் டிவியில் நீயூஸ் பார்த்தேன்
விடை : நான் தாெலைக்காட்சியில் செய்திகள் பார்த்தேன்
3. தை மாதம் பர்ஸ்ட் நாள் பொங்கல் பெஸ்டிவெல் கொண்டாடினான்
விடை : தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடினான்.
4. பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.
விடை : பாலன் சிற்றுண்டி சாப்பிட்டான்.
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. பாணன் மன்னனிடம் என்ன கூறினான்?
உணவின்றி என் இல்லாள் மெலிந்து கிடக்கிறாள். பிள்ளைகளோ காற்றை உண்டு கண்ணில் உயிரைத் தேக்கியபடி இருக்கின்றனர்.
2. பாணன் மன்னனைப் பார்த்த எவ்வாறு வணங்கினான்?
கொல்லி மலைக் கொற்றவா! கொடைத் திறத்தமின் கோமகேன! நீவிர் வாழ்க! உமது படை வாழ்க! என வாழ்த்தி வணங்கினான்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…