1.3 தலைமைப் பண்பு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.3 – தலைமைப் பண்பு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
கற்பவை கற்றபின்
இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.
செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த் தலைவர் அவ்வூரை முன்னேற்ற சிறந்த நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார். அவ்வூரைச் சேர்ந்த பாலன், பூவண்ணன் இருவரும் அப்பொறுப்பை ஏற்க விரும்பினர். யாருக்கு உண்மையான திறமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஊர்த் தலைவர் மூற்று போட்டிகளை வைத்தார்.
முதல் போட்டி, மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். இரண்டாவது போட்டியானது, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தைமேம்படுத்தவேண்டும். மூன்றாவது போட்டி மக்களிடம் பரிவு காட்டவேண்டும் என்பதாகும்.
பாலன் தம் சொத்துக்களை எல்லாம் ஊர்மக்களுக்கே செலவு செய்தான். பூவண்ணன் இளைஞர்களை படிப்பிலும் தொழிற்கல்வியிலும் ஈடுபடுத்தி எதிர்கால முன்னேறத்திற்கு உதவினானர். அதோடு மட்டும் இல்லாமல் மூதாட்டிக்கும் உதவினான்.
எனவே, ஊர்த்தலைவர் பூவண்ணனே கிராம நிருவாகத்திற்கு ஏற்றவர் எனக் கூறி அவனையே தேர்ந்தெடுத்தார்.
உமக்கு மிகவும் பிடித்த போட்டி எது? அதில் பங்கேற்றிருப்பின் அந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுக..
- எனக்கு மிகவும் பிடித்த போட்டி “விளையாட்டு போட்டி”
- நான் நான்காம் வகுப்பு படித்தபோது முதல்முதலாக எங்கள் பள்ளி விளையாட்டு விழாவில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.
- இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. வேம்பன் எதற்காகப் பலரை நாடிச் சென்று பொருளுதவி பெற்றார்?
செந்தூரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பலரை நாடிச்சென்று பொருளுதவி பெற்றார்.
2. ஊர்த்தலைவர் அறிவித்த இரண்டாவது போட்டி என்ன?
இரண்டாவது போட்டியானது, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார
முன்னேற்றத்தைமேம்படுத்தவேண்டும் என்பதாகும்.
3. செந்தூர் மக்களுக்குப் பாலன் மீது நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன?
பாலன் தம்மிடமிருந்த செல்வங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் தொடங்கினார். இதனால், மக்களுக்குப் பாலன்மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது.
4. சிறந்த நிருவாகி என ஊர்த்தலைவர் யாரை அறிவித்தார்?
சிறந்த நிருவாகி என ஊர்த்தலைவர் பூவண்ணன் அறிவித்தார்
5. பூவண்ணன் மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ததாகக் கூறினார்?
திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து கல்வியுடன் தொழில் செய்து, பொருளாதரத்தை மேம்படுத்தவும், பயிற்சிகள் கொடுத்ததோடு மட்டுமல்லமல் மற்றக் கலைகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்ததாகப் பூவண்ணன் கூறினான்
சிந்தனை வினாக்கள்.
1. உங்கள் ஊரை முன்னேற்றம் பெறச்செய்ய நீங்கள் எந்த வகையில் உதவுவீர்கள்?
- கல்வியறிவு இல்லா மக்களுக்கு எழுதுப் படிக்கச் சொல்லித் தருவேன்.
- தூய காற்றும், மழையும் பெற்றிட மரங்களை நட்டு வளர்ப்பேன்.
- நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடுப்பேன். மற்றவர்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வைத் தருவேன்.
2. உங்களுக்குத் தலைமைப் பண்பு கிடைக்கிறது எனில், என்னவெல்லாம் செய்ய நினைப்பீர்கள்? பட்டியலிடுக.
- ஊருக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதி கொடுப்பேன்.
- ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளத் தூய்மைப்படுத்தி பராமரிப்பேன்.
- மரங்களை வளர்க்கவும், குப்பைகள் இல்லாத கிராமமாக மாற்றிடவும் உதவுவேன்.
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. செந்தூர் நிர்வாகப் பதவிக்கு யாரெல்லாம் விருப்பம் தெரிவித்தனர்?
செந்தூர் நிர்வாகப் பதவிக்கு பாலனும், பூவண்ணனும் விருப்பம் தெரிவித்தனர்
2. ஊர்த்தலைவர் அறிவித்த முதல் போட்டி யாது?
ஊர்த்தலைவர் அறிவித்த முதல் போட்டி, மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும்.
3. தன்னைத் தூக்கி விடுமாறு கூறிய மூதாட்டியிடம் பாலனும், பூவண்ணனும் எவ்வாறு நடந்து கொண்டனர்?
தன்னைத் தூக்கி விடுமாறு கூறிய மூதாட்டியிடம் பாலன் ”எனக்கு அவசர வேலை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே வேகமாகச் சென்றுவிட்டான்.
பூவண்ணன் தூக்கி வைத்து, மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…