TN 5th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.4 – இணைச்சொற்கள்

1.4 இணைச்சொற்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.4 – இணைச்சொற்கள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - inaisorkal

5th Std Tamil Text Book – Download

இணைச்சொற்கள்

நாம் பேசும்போதும் எழுதும்போதும் இயல்பாகவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்துகிறோம். நன்றாகக் கவனித்தீர்களேயானால், ஒவ்வொன்றும் இரண்டிரண்டு சொற்களாக இருப்தைக் காண்பீர்கள். எப்படி?

  • சிறிய + சிறிய – சின்னஞ்சிறிய
  • கண்ணும் + கருத்தும் – கண்ணுங்கருத்தும்
  • இரவு+ பகல் – இரவுபகல்
  • பச்சை + பச்சை – பச்சைப்பசேல்

இவைபோன்று இணையாகச் சொற்கள் வருகின்றன. ஆகையால், இவற்றை இணைமொழிகள் அல்லது இணைச்சொற்கள் என்று கூறுகிறோம். இவை, தொடர்களில் வரும்போது எப்போதும் சேர்ந்தே இருக்கும். நம்முடைய சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கு இவை துணைபுரிகின்றன.

இணைச்சொற்கள் மூவகையாக வருகின்றன. அவையாவன,

நேரிணை

கண்ணுங்கருத்தும், வாடிவதங்கி, ஈடும்எடுப்பும்

எதிரிணை

இரவும்பகலும், அங்கும்இங்கும், வெற்றியும் தோல்வியும்

செறியிணை

பச்சைப்பசேல், வெள்ளைவெளேர், சின்னஞ்சிறிய, அடுக்கடுக்காக

கற்பவை கற்றபின்

நீங்கள் படிக்கும் நூல்களிலிருந்து இணைமொழிகளைத் தொகுக்க.

  • கண்ணுங்கருத்தும்
  • வாடிவதங்கி
  • ஈடும்எடுப்பும்
  • இரவும்பகலும்
  • வெற்றியும் தோல்வியும்
  • அங்கும்இங்கும்
  • பச்சைப்பசேல்
  • அடுக்கடுக்காக
  • சின்னஞ்சிறிய
  • வெள்ளைவெளேர்

இணைமொழிகளைப் பயன்படுத்தி, சிறு உரையாடல் எழுதுக.

ராமு அக்கா! நீ இரவு பகல் பாராது தேர்வுக்குப் படிக்கிறாயா?
அமுதா அல்லும் பகலும் படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும்.
ராமு வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயற்கை தானே?
அமுதா பெயரும் புகழும் பெற வேண்டுமென்றால் கடினமாக உழைக்க வேண்டும்.
ராமு உன் முகம் வாடி வதங்கி போய் விட்டதே!
அமுதா நீ என் மீது கண்ணும் கருத்துமாக இருப்பதற்கு நன்றி.

இணைமொழிகள் வருமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.

1. கண்ணுங்கருத்தும்

  • சிறு குழந்தைகளை கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை

2. இரவும்பகலும்

  • வாழ்வில் வெற்றி பெற இரவுபகல் பாராது உழைக்க வேண்டும்

3. வெற்றியும் தோல்வியும்

  • வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு

4. அடுக்கடுக்காக

  • ராமு அடுக்கடுக்காக பொய் கூறினானன்

5. உயர்வு தாழ்வு

  • படிக்கும் மாணவர்களிடம் உயர்வு தாழ்வு இருத்தல் கூடாது.

மதிப்பீடு

அ. கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, கீரியும்பாம்பும், இன்பமும்துன்பமும்)

1. பானைகள் ___________ வைக்கப்பட்டிருந்தன.

  • அடுக்கடுக்காக

2. நேற்றுவரை ___________ போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.

  • கீரியும் பாம்பும்

3. தேர்வில் ___________ படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.

  • கண்ணுங்கருத்துமாக

4. வாழ்வில் ___________ உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.

  • இன்பமும் துன்பமும்

5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ___________ இருக்கும்.

  • ஈடும் எடுப்புமாக

எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக

  1. இன்பமும்துன்பமும் – துன்பமும்இன்பமும்
  2. அன்றும்இன்றும் இன்றும்அன்றும்
  3. அங்கும்இங்கும்இங்கும்அங்கும்
  4. உயர்வும்தாழ்வும்தாழ்வும்உயர்வும்
  5. 5. விண்ணும்மண்ணும்மண்ணும்விண்ணும்

மொழியை ஆள்வோம்

சொல்லக்கேட்டு எழுதுக.

  1. கண்ணுக்கு அழகு பிறருக்கு இரக்கம் காட்டல்
  2. கொல்லிமலையை வல்வில் ஓரி என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
  3. பாலன் அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. பொருளுதவி

விடை : ஏழைகளுக்கு பொருளுதவி செய்யலாம

2. திறமைசாலி

விடை : திறமை உள்ளவனை திறமைசாலிகள் என்பர்

3. நம்பிக்கை

விடை : வாழ்வின் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் முக்கியம்

4. ஆராய்ச்சி 

விடை : பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திய பின் தான் மருந்துகள் மனித பயன்பாட்டுக்கு வருகிறது.

5. வான்புகழ் 

விடை : வள்ளுவரை வான்புகழ் கொண்ட வள்ளுவர் என்ற பெயரும் உண்டு

பொருத்தமான சொற்களைக்கொண்டு, தொடரை முழுமையாக்குக.

[பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன், பாலன்]

1. கொடைத்திறத்தில் சிறந்தவர் _____________

  • வல்வில் ஓரி

2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர் _____________

  • பாலன்

3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர் _____________

  • பூவண்ணன்

4. இசைப் பாடல்களைப் பாடுபவர் _____________

  • பாணர்

5. மூதாட்டிபோல் வேடமிட்டவர் _____________

  • ஊர்த்தலைவர்

மொழியோடு விளையாடு

சரியான எழுத்தை தேர்ந்தெடுத்து எழுதுக

  1. வல்வில் ஓரி வாரித் தரும் வள்ல் (ள், ல், ழ்)
  2. பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
  3. களிறும் கொடையாய் நல்கும் வான்புகழ்வல்வில் ஓரி (ன், ண்/ல், ள், ழ் )
  4. மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது (ற்/ர்)
  5. பூவண்ணன் மூதாட்டிக்கு உவு வாங்கிக் கொடுத்தான் (ண, ன, ந)

சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்கு

1. விடுகதை – மரத்திற்கு ஆதாரம் __________

  • விதை

2. திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் __________

  • வேலி

3. நகர்ப்புறம் – விரலின் மணிமகுடம் __________

  • நகம்

4. இமயமலை – உண்கலம் __________

  • இலை

5. உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று __________

  • உடை

புதிய தொடர்களை உருவாக்குக.

1. மதிவாணன் பலம் மிக்கவன்

  • காற்றடித்ததால் மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)

2. இந்த மரம் உயரமாக உள்ளது.

  • படைவீரகள் மறம் (வீரம்) கொண்டவர்கள். (மறம்)

3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.

  • மீனவன் மீன் பிடிக்க வலை அவசியம். (வலை)

4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.

  • இடி சத்தமாக ஒலித்தது (ஒலி)

5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.

  • ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது (வெள்ளம்)

குறுக்கெழுத்துப் புதிர்

5th Standard - Kurukeluthu Puthir

இடமிருந்து வலம்

1. அறிவியல் அறிஞர்கள் செய்வது ____________________

விடை : ஆராய்ச்சி

2. இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம் ____________________

விடை : பரிவு

வலமிருந்து இடம்

1. உலகின் மற்றொரு பெயர் ____________________

  • தரணி

2. மக்களைக் காப்பவர் _______________

  • வேந்தன்

3. நவதானிய வகைகளுள் ஒன்று _____________

  • கம்பு

மேலிருந்து கீழ்

1. அரசரின் ஆலோசகர் ________________

  • அமைச்சர்

2. கொல்லிமலை நாட்டின் அரசன் ________________

  • வல்வில்

கீழிருந்து மேல்

1. இது வந்திட பத்தும் பறக்கும் ____________________

  • பசி

2. விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________________

  • மெதுவாக

3. இதைக் கேட்டால் மனம் மயங்கும் ___________________

  • இசை

வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

  1. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
  2. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
  3. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்
  4. பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
  5. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.

விடை :

  1. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
  2. பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
  3. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
  4. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
  5. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்

அறிந்து கொள்வோம்

பிற நாட்டு நாணயங்களை அறிவோமா?

  • இந்தியா – ரூபாய்
  • அமெரிக்கா – டாலர்
  • இங்கிலாந்து – பவுண்டு
  • மலேசியா – ரங்கிட்

செயல் திட்டம்

நமது நாட்டுச் சின்னங்களின் படங்களைத் தொகுத்து அவற்றைப் பற்றி எழுதித் தொகுப்பேடு உருவாக்குக.

சாரநாத் கல்தூண்

5th Standard - inaisorkal

  • அசோகத்தூணில் இருந்து எடுக்கப்பட்டது.
  • நான்முகச் சிங்கமும் வலது பக்கம் காளையும், இது பக்கம் குதிரையும் இருக்கும்.
  • பீடத்தின் கீழே “சத்ய மேவ ஜயதே” (வாய்மையே வெல்லும்) என்றும் வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும்.

தேசியக்கொடி

5th Standard - inaisorkal

கடும்காவி, கடும்பச்சை மத்தியல் தூய வெண்மை, வெண்மை பட்டையின் நடுவே கடல் நீல வண்ம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம்.

  • காவி – தியாகம், தைரியம்
  • வெண்மை – அமைதி, உண்மை
  • பச்சை – நம்பிக்கை, வீரம், பசுமை

பிங்கனி வெங்கையா அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

புலி (தேசிய விலங்கு)

5th Standard - inaisorkal

  • பூனைக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய இனம்.
  • வங்கப் புலிகள் புகழ் பெற்றவை.
  • 1972-ம் ஆண்டு முதல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

புலி (தேசிய பறவை)

5th Standard - inaisorkal

  • ஆண் மயில்கள் அழகிய பளப்பான நீலம் கலந்த பச்சை நிறம் உடையவை. இதன் தோகையில் வரிசையாகக் கண் வடிவங்கள் உள்ளன.
  • மயிலிறகு தெய்வீகத் தன்மை பொருந்தியதாகப் பார்க்கப்படுகிறது.

கடையெழு வள்ளல்களைப் பற்றிச் செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.

பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னன் தான் சென்ற வழியில் தன் தேரைத் தடுத்த முல்லைக் கொடு தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்கு தேரையே தந்தவர்.

பேகன்

பழநி மலைக்கு தலைவன், காட்டில் ஒரு மயில் குளிரால் நடுங்கி அகவியதாக எண்ணி அருள் உணர்ச்சி பொங்க தம் போர்வையை மயிலுக்கு தந்தவன்.

அதியமான்

தகடூரைத் தலைநகராமாக கொண்டு ஆண்ட அதியமான் அருநெல்லி மரத்தில் அருங்கனி ஒன்றைப் பெற்றான். அக்கனியை உண்டவர் நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாட்கள் வாழலாம். அக்கனியை தன்னைக் காண வந்த ஒளவையாருக்கு தந்து அழியாப்ப புகழ் பெற்றவன்.

வல்வில் ஓரி

நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கிய நல்ல மலர்களும் உடைய இளமையும், முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் கொண்ட நாட்டை கூத்தாடும் பாணர்க்கு பரிசாக கொடுத்தவன்.

ஆய்

திருக்கோயிலூரைத் தலைநகராமாக் கொண்டு மலாட்டை ஆட்சி செய்தவன் தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் அணி   ந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்று சொல்லாது அளித்தவர்.

நள்ளி

நளிமலை நாடன் என்னும் கம்பீர நாட்டினன். தன் பால் வந்தவர் நலியாதவாறும், வேறுறொருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும்  வாரி வழங்கும் வள்ளல்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment