2.1 மூதுரை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.1 – மூதுரை We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
5th Std Tamil Text Book – Download
மூதுரை
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
– ஔவையார்
சொல் பொருள்
|
|
பாடல் பொருள்
- மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க, கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
- அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள்.
- அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டாம்.
ஆசிரியர் குறிப்பு
- ஓளவையார் பெயரில் மூவர் வாந்திருந்தனர். சங்ககால ஒளவையார். பக்தி இலக்கியம் பாடிய ஒளவையார், குழந்தைப் பாடல்கள் பாடிய ஒளவையார்.
- குழந்தைகள் பாடிய ஒளவையாரே, மூதுரை ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் இயற்றியுள்ளார்.
நூற் குறிப்பு
- மூதுரையினை இயற்றியவர் ஔவையார்.
- முதுமையான அறிவுரைகளைக் கொண்டது.
- இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.
- இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன.
கற்பவை கற்றபின்
1. கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – ஆனந்தக்
கல்வி படிப்போம் என்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
இனிமைக் கல்வி – என்றும்
அமுதென சுவைத்திடுவோம் என்று
பாடுவோமே ஆடுவோமே (ஆடுவோமே)
வாழ்வில் உயர்ந்நதிடவே – என்றும்
சுற்றிடுவோம் தினம் என்று
பாடுவோமே ஆடுவோமே (ஆடுவோமே)
2.மூதுரைப் பாடலுடன் தொடர்புடைய திருக்குறள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்துகொள்க.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
குறளின் பொருள்
ஒரு கொக்கு இரைக்காக காலங்கருதி சிறுது அசைவில்லாமல் வாடியிருப்பது போல இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தவுடன் அந்கக் கொக்கு நறுக்கென்று பெரிய மீன் வந்தவுடன் கொத்திக் கொள்வது போல செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.
மதிப்பீடு
சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “என்றெண்ணி” என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
- என் + றெண்ணி
- என்று + எண்ணி
- என்றெ + எண்ணி
- என்று + றெண்ணி
விடை : என்று + எண்ணி
2. “மடை + தலை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- மடைதலை
- மடைத்தலை
- மடத்தலை
- மடதலை
விடை : மடைத்தலை
3. “வரும் + அளவும்” என்ப தனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- வருமளவும்
- வருஅளவும்
- வரும்மளவும்
- வரும்அளவும்
விடை : வருமளவும்
4. “அறிவிலர்” என்பதன் எதிர்ச்சொல் ………………….
- அறிவில்லாதவர்
- படிக்காதவர்
- அறியாதார்
- அறிவுடையவர்
விடை : அறிவுடையவர்
5. “எண்ணுதல்” – இச்சொல்லுக்குரிய பொருள் ………………………..
- வாடுதல்
- வருந்துதல்
- நனைத்தல்
- நினைத்தல்
விடை : நினைத்தல்
இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
|
‘மடைத்தலை ’ இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
மடைத்தலை
- மடை
- தலை
- மலை
- தடை
பொருத்துக.
1. உறுமீன் | நீர் பாயும் வழி |
2. கருதவும் | பணிவு |
3. அறிவிலர் | நினைக்கவும் |
4. மடைத்தலை | பெரிய மீன் |
5. அடக்கம் | அறிவு இல்லாதவர் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
வினாக்களுக்கு விடையளிக்க.
1. கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
2. யாரை அறிவில்லாதவராக எண்ணக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?
தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டாம் என ஒளவையார் குறிப்பிடுகிறார்.
சிந்தனை வினா
அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது. ஏன்? கலந்துரையாடுக.
அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்க கூடாது. ஏனென்றால் அடக்கமாக இருப்பவர்கள் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை பொறுமையாக இருப்பர். தனக்கு ஏற்ற நேரம் வந்தவுடன் விரைவாக செயலை முடித்து வெற்றி பெறுவார். எனவே, அத்தகைய அடக்கமானவரை அறிவில்லாதவராக எண்ணுதல் கூடாது.
கூடுதல் வினாக்கள்
சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. மூதுரை நூலின் ஆசிரியர் ………………..
- திருவள்ளுவர்
- ஒளவையார்
- பாரதியார்
- பாரதிதாசன்
விடை : ஒளவையார்
2. மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்றவை ………………
- வாத்து
- கொக்கு
- பெரியமீன்கள்
- சிறுமீன்கள்
விடை : சிறுமீன்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. மூதுரை குறிப்பு வரைக
- மூதுரையின் ஆசிரியர் ஔவையார்.
- முதுமையான அறிவுரைகளைக் கொண்ட நூல் மூதுரை
- இந்நூலுக்கு “வாக்குண்டாம்” என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.
2. ஔவையார் இயற்றியுள்ள நூல்கள் யாவை?
மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…