1.4 மரபுச்சொற்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.4 – மரபுச்சொற்கள் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மரபுச்சொற்கள்
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
ஒலிமரபுச் சொற்கள்
|
|
விலங்குகளின் இளைமப்பெயர் மரபுச் சொற்கள்
|
|
வினைமரபுச் சொற்கள்
|
|
தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்
மா, பலா, வாழை | இலை |
ஈச்சம், தென்னை, பனை | ஓலை |
கம்பு, கேழ்வரகு, சோளம் | தட்டை |
நெல், புல், தினை | தாள் |
அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி | பிஞ்சு |
பூச்சிகள், பறவைகள், விலங்குகள் – இருப்பிட மரபுச் சொற்கள்
|
|
கற்பவை கற்றபின்
1. மரபு பற்றி நீ அறிந்து கொண்டதை உனது சொந்த நடையில் கூறு.
காலம் காலமாக வழங்கி வருவது மரபு. ஒலி மரபு, இளமைப்பெயர் மரபு என இரு வகையான மரபுச்சொற்கள் இருப்பதை அறிந்தேன்.
2. நாம் ஏன் மரபினைப் பின்பற்ற வேண்டும்? பின்பற்றவில்லையெனில் மொழி என்னவாகும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
மொழிப்பண்பாடு சிதையாமல் இருக்க மரபினைப் பின்பற்ற வேண்டும். பின்பற்றவில்லை எனில் மொழி சிதைந்து விடும்.
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது ________
- பழைமை
- புதுமை
- மரபு
- சிறப்பு
விடை : மரபு
2. யானை __________
- கத்தும்
- பிளிறும்
- கூவும்
- அலறும்
விடை : பிளிறும்
3. ‘ஆந்தை அலறும்’ – என்பது __________
- ஒலிமரபு
- வினை மரபு
- இளமைப் பெயர் மரபு
- இருப்பிடப் பெயர் மரபு
விடை : ஒலிமரபு
4. புலியின் இளமைப் பெயர் __________
- புலிப்பறழ்
- புலிக்குட்டி
- புலிக்கன்று
- புலிப்பிள்ளை
விடை : புலிப்பறழ்
5. ‘பூப்பறித்தாள்’ என்பது __________
- வினை மரபு
- பெயர் மரபு
- ஒலி மரபு
- இளமைப் பெயர் மரபு
விடை : வினை மரபு
ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் | அ. கூவும் |
2. அணில் | ஆ. அலப்பும் |
3. மயில் | இ. முழங்கும் |
4. குயில் | ஈ. கீச்சிடும் |
5. குரங்கு | உ. அகவும் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 -அ, 5 – ஆ |
இ. உயிரினங்களின் உரிய ஒலி மரபை வட்டமிடுக.
1. மயில் – கூவும், அகவும், பிளிறும், கத்தும்
விடை : அகவும்
2. கிளி – அலப்பும், பேசும், கூவும், கீச்சிடும்
விடை : பேசும்
3. குரங்கு – அகவும், கீச்சிடும், சீறும், அலப்பும்
விடை : அலப்பும்
4. ஆடு – பேசும், கத்தும், பிளிறும், கூவும்
விடை : கத்தும்
5. குயில் – அலப்பும், பிளிறும், அகவும், கூவும்
விடை : கூவும்
6. யானை – கத்தும், கர்ச்சிக்கும், உறுமும், பிளிறும்
விடை : பிளிறும்
ஈ வினை மரபுகளைப் பொருத்துக.
நீர் | பறித்தாள் |
முறுக்கு | எய்தான் |
உணவு | குடித்தான் |
அம்பு | தின்றான் |
பூ | உண்டான் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ |
ஒலிமரபுச் சொற்களை எழுதுக
சீறும் | |
கீச்சிடும் | |
கூவும் | |
கரையும் | |
குரைக்கும் | |
உரலும் |
வினாக்களுக்கு விடையளிக்க
1. மரபு என்றால் என்ன?
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
2. பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச்சொற்கள் இடம் பெற்றுள்ளன?
பாடப்பகுதியில் ஒலிமரபு, இளமைப்பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப்பெயர் மரபு, இருப்பிட மரபு என ஐந்து வகையான மரபுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
3. ஒலி மரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
- புலி உறுமும்
- குயில் கூவும்
- யானை பிளிறும்
- ஆடு கத்தும்
மொழியை ஆள்வோம்
சொல்லக்கேட்டு எழுதுக.
|
|
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. நல்லறிவு
விடை : ராமு நல்லறிவு கொண்டவனாய் விளங்கினான்.
2. தென்னை மரம்
விடை : தென்னை மரம் உயரமாக வளரும் மரம்.
3. கவியரங்கம்
விடை : எங்கள் பள்ளில் கவியரங்கம் “அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் நடைபெற்றது.
4. நன்றி
விடை : நாய் நன்றி உள்ள விலங்கு
கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
|
|
1. குழந்தை என்ன செய்தது?
விடை : குழந்தை சிரித்தது
2. மேரி என்ன செய்தாள் ?
விடை : மேரி ஆடினாள்
3. பாட்டி என்ன செய்தார்?
விடை : பாட்டி தும்மினார்
4. எது பறந்தது?
விடை : ஈ பறந்தது
5. தூங்கியது எது?
விடை : பூனை தூங்கியது
6. புலி என்ன செய்தது?
விடை : புலி உறுமியது
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்
2. “உறவினர்” என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது
4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. பிரித்து எழுதுக.
தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்
எடுத்துக்காட்டில் உள்ளது போல் மாற்றி எழுதுக.
எ.கா.
ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.
விடை : கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
1. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது
விடை : முதல் காலம் தமிழ் வகுப்பு நடந்தது.
2. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்
விடை : நான் ஓவிய நோட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க
|
|
1. ________ உடையவன் மாணவன் ________ அற்றவன் மாணவன்
விடை : பொறுமை / பொறாமை
2. _________ கற்பவன் மாணவன் _______ தவிர்ப்பவன் மாணவன்
விடை : கல்வி / கல்லாமை
3. _________ பெறுபவன் மாணவன் ________ செய்பவன் மாணவன்
விடை : பயிற்சி / முயற்சி
4. _________ பேசுபவன் மாணவன் _______ கொள்பவன் மாணவன்
விடை : உண்மை / ஊக்கம்
மொழியை ஆள்வோம்
பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
- பனிமலர்
- பாகிடை
- நனிபசு
- கனியிடை
- கழையிடை
கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.
கீழிருந்து மேல்
1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்
விடை : தொல்காப்பியம்
2. பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்
விடை : பாரதியார்
3. புதுவையில் தோன்றிய புதுமைப்
விடை : பாரதிதாசன்
மேலிருந்து கீழ்
1. பாரதிதாசனின் தந்தையின் பெயர்
விடை : கனகசபை
2. பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று
விடை : பாப்பா பாட்டு
3. முத்தமிழ் என்பது இயல், இசை
விடை : நாடகம்
இடமிருந்து வலம்
1. உடலுக்கு குளிர்ச்சி தருவது
விடை : இளநீர்
2. உலகின் முதன் மொழி மூத்த மொழி
விடை : தமிழ்
3. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்
விடை : இனிமை
குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி.
காந்தம் | பள்ளம் | பகிர்ந்து |
அன்னை | அச்சாணி | ஒளவையார் |
1. உருண்டோடும் பெரிய தேரைக் காப்பது அதன் சிறிய _______ ஆகும்.
அ | ச் | சா | ணி |
2. இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது.
கா | ந் | த | ம் |
3. அம்மா – வேறு சொல்
அ | ன் | னை |
4. ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர்.
ஒள | வை | யா | ர் |
5. எதிர்ச் சொல் தருக. “மேடு”
ப | ள் | ள | ம் |
6. காகம் தனக்குக் கிடைத்த உணவைப் பிற காகங்களோடு ________ உண்ணும்.
ப | கி | ர் | ந் | து |
7. உன் விடைகளின் மூன்றாவது எழுத்துகளை வரிசைப்படுத்தினால், எதிர்காலத்தில் நீ யாராக இருப்பாய் எனத் தெரியும். ________
விடை : சாதனையாளர்
சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்குக.
1. காஞ்சிபுரம்
- கா
- காஞ்சி
- புரம்
- காசி
- காரம்
- சிரம்
2. புதுக்கவிதை
- விதை
- கவிதை
- கவி
- புதை
3. நெல்லிக்கனி
- நெல்
- கனி
- கலி
- கல்
4. கற்குவியல்
- குவியல்
- குவி
- கவி
- கல்
- வில்
சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
(அகிலா – படித்தாள் – நான் – பாடம் – வீட்டிற்கு – சென்றாள் – படித்தேன் – சென்றேன் – வந்தாள் – பள்ளிக்கு) |
1. அகிலா பள்ளிக்கு வந்தாள்
2. அகிலா வீட்டிற்கு சென்றேன்
3. நான் பள்ளிக்கு சென்றேன்
4. நான் பாடம் படித்தேன்
5. அகிலா பாடம் படித்தாள்.
அறிந்து கொள்வோம்
எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள்
|
|
செயல் திட்டம்
1. மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
2. ‘உலகம்‘ என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
செகம், புவி, அகிலம், அண்டம், உலகு
3. உங்கள் ஊரிலுள்ள (அ), பள்ளியிலுள்ள நூலகத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசனின் புத்தகங்களைத் தேடிப் படித்து உனக்குப் பிடித்த செய்திகளை எழுதி வருக.
பாரதிதாசன் குடும்ப விளக்கைப் படித்தேன். அதில் பின்வரும் செய்திகளை அறிந்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. கல்வி அறிவில்லா பெண்கள் பண்படாது நிலத்தை போன்றவர்கள். அங்கு புல் விளையும். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வி அறிவுள் பெண்கள் நன்செய் நிலத்தை போன்றவர்கள். அவர்கள் மூலம் அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
4. பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, புரட்சிக்கவி, தமிழியக்கம்.
விண்ணப்பம் எழுதுதல்
அனுப்புநர்
அ.சங்கரலிங்கம் பெறுநர் வகுப்பு ஆசிரியர் ஐயா வணக்கம், நாளை என் அத்தையின் திருமணத்திற்குச் செல்வதால் (18.08.2021) ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் கீழ்படிதலுள்ள நாள் : 18.08.2021 |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…