TN 5th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.2 – கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.2 – கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - Kalviselvamum Porutselvamum

5th Std Tamil Text Book – Download

கற்பவை கற்றபின்

1. கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எது அவசியம் என்று நீ நினைக்கிறாய்? ஏன்?

கல்விச் செல்வத்தையே அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பொருளால் புகழ் அடைந்தவர் மக்கள் மனதில் இருப்பதில்லை. கல்வியால் புகழ் அடைந்தவர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பர்.

2. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – இது பற்றி உன் கருத்து என்ன?

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன் எனென்றால், இறைவன் மனிதனைப் படைக்குமு் போது எந்த ஒரு பணத்தையும் படைக்கவில்லை. அவன் ஒவ்வொன்றாகக் கற்று தான் பணத்தை உண்டாக்கினான். பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற மாயயை உருவாக்கியவன் மனிதன். எனவே இக்கூற்றை நான் ஏற்கமாட்டேன்.

3.  கல்வியால் சிறந்தவர்கள், பொருளால் சிறந்தவர்கள் – யாரால் நம் நாடு முன்னேற்றம் அடையும்? வகுப்பறையில் விவாதம் செய்க.

கல்வியால் சிறந்தவர்களால் நம்நாடு முன்னேற்றம் அடையும் ;

கல்வி ஒரு மனிதனை முழுமையானவனாக்கும். நற்பண்புள்ளவன் ஆக்கும், நல்லறிவு உடையவனாக ஆக்கும். பாரதியும் கூட கல்வி சிறந்த தமிழ்நாடு என பாடியிருக்கின்றார். பொருளால் ஒன்றை வாங்க முடியுமே தவிர, அதனை உருவாக்க கல்வி தான் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டம். கணித மேதையாலும், அறிவியல் மேதையாலும் தொழில்நுட்ப வல்லுநர்களாலும் என்று எத்தனையோ கற்றறிந்த சான்றோரால் தான் இன்று நம்நாடு வளர்ச்சியின் முன்னிலையில் உலகில் உள்ளது. கல்வியால் சிறந்தவர்களால் தான் நாடு வளர்ச்சிய அடையும்.

பொருளால் சிறந்தவர்களால் நம்நாடு முன்னேற்றம் அடையும் ;

ஆயிரம் அறிவாளிகளை வேலைக்கு அமர்த்தி அவனிடம் வேலை வாங்குபவன் பொருள் படைத்தவன். வள்ளுவரும் கூட பொருளில்லார்கு இவ்வுலகம் இல்லை என்கிறார். பொருள் இல்லை என்றால் ஒரு சிறு துரும்பும் கூட அசையாது. பல தலைவர்கள் வாழ்ந்து நம் நாட்டை உயர்த்தி இருந்தாலும் பல தலைவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களே! பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொருள் படைத்தவர்கள். பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும்.

மதிப்பீடு

சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “இம்மை” என்ற சொல் குறிக்கும் பொருள் _______________________

  1. இப்பிறப்பு
  2. மறுபிறப்பு
  3. பிறப்பு
  4. முற்பிறப்பு

விடை : இப்பிறப்பு

2. “காரணமாகின்றது” என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது __________________

  1. காரண + மாகின்றது
  2. காரண + ஆகின்றது
  3. காரணம் + மாகின்றது
  4. காரணம் + ஆகின்றது

விடை : காரணம் + ஆகின்றது

3. “வறுமை” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் __________________

  1. செழுமை
  2. இன்மை
  3. செம்மை
  4. ஏழ்மை

விடை : ஏழ்மை

4. “பொருள் + செல்வம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. பொருள்செல்வம்
  2. பொருள்ச்செல்வம்
  3. பொருட்செல்வம்
  4. பொருட்ச்செல்வம்

விடை : பொருட்செல்வம்

5. “பொருள் + இல்லார்க்கு” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பொருளில்லார்க்கு
  2. பொருள்ளில்லார்க்கு
  3. பொருலில்லார்க்கு
  4. பொருள்இல்லார்க்கு

விடை : பொருளில்லார்க்கு

கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  • பழைமை + மொழி = பழமொழி
  • நன்மை + வழி = நல்வழி

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  • பணமென்றால் = பணம் + என்றால்
  • தொலைக்காட்சி = தொலை + காட்சி

தொடரை முழுமை ஆக்குக

(பத்தும், வளம், கல்வி)

1. பசி வந்திடப் __________ போகும்.

விடை : பத்தும்

2. கேடில் விழுச்செல்வம் __________

விடை : கல்வி

3. பொருளால் நம் வாழ்வு __________ பெறும்.

விடை : வளம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. களர்நிலத்துக்கு ஒப்பாவர் – யார்?

கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பானவர் ஆவார்.

2. கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?

பொருட்செல்வம் கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது ஆகும்.

3. ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்‘ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்தநடையில் எழுதுக.

  • கல்வி கற்காதவன் ”களர்நிலத்திற்கு ஒப்பாவான்
  • கல்வி கற்றவருக்கு மட்டுமே பாதிப்பு கிடைக்கும்.
  • பொருட்செல்வம் கொடுத்தால்குறையும். கள்வர்களால் கவர்ந்து செல்லக் கூடியது. ஆனால் கல்விச் செல்வம் குறையாது. திருடவும் முடியாது.
  • கல்விச் செல்வமே ‘இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது’

ஆகியவை கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்‘ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

4. பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக

  • திருவள்ளுவர் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றே கூறியிருக்கிறார்.
  • கல்வி கற்க பணம் தேவை
  • பணமில்லாதவன் பிணம்’, ‘பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்’

ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.

சிந்தனை வினாக்கள்

1. கல்விச் செல்வம் அல்லது பொருட்செல்வம் இரண்டில் ஒன்றுதான் உனக்கு வழங்கப்படும் எனில், நீ எதைத் தெரிவு செய்வாய்? ஏன்?

நான் கல்விச்செல்வத்தைத் தான் வாங்குவேன். ஏன் என்றால், கல்வியால் பொருட்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

2. ‘நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ – இதைப் பற்றி உன் சொந்த நடையில் பேசு.

வணக்கம் “நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி” என்னும் சில நிமிடங்கள் பேசுகின்றேன். இப்பிறப்பில் நாம் கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் பயன்டும் என்கிறார். வள்ளுவர். இருட்டில் விளக்கில்லாமல் எப்படி வாழ முடியாதோ? அப்படிக் கல்வி இல்லாமல் உலக அறியாமை இருளில் வாழ முடியாது. பணத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் உரிய காலத்தல் கலவியை இழந்தால் அதைத் திரும்ப பெற இயலாது. சுவாசிக்கமாமல் எப்படி வாழ முடியாதோ, அதைப் போல வாசிக்காமல் வாழ்வது வீண். காந்தி, நேரு, தாகூர், அப்துல்கலாம் ஆகியோர் சிறக்கக் காரணம் கல்வி தான். கல்வி ஒன்று மட்டுமே ஒருவனை நல்லவனாகவும். அறிவுள்ளவனாகவும் ஆக்கும் எனவே “நம்மை மேன்னமைப்படுத்துவது கல்வி” என்றுச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி

எதிர்ச் சொற்களைத் கண்டறிந்து எழுதுக

5th Standard - Kalviselvamum Porutselvamum - ethir sorkalai kandarinthu eluthuga

  • இம்மை x மறுமை
  • புதுமை x பழைமை
  • நன்மை x தீமை
  • வறுமை x செழுமை
  • வருத்தம் x மகிழ்ச்சி
  • நேற்று x இன்று
  • நல்வழி x தீயவழி

கூடுதல் வினாக்கள்

சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “கல்வி கற்காதவன் களர்நிலத்திற்கு ஒப்பானவன்” என்று கூறியவர் …………………..

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

2. “கேடில் விழுச்செல்வம் கல்வி” என்று கூறுபவர்” ………………

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : திருவள்ளுவர்

3. “நல்வழி” என்ற சொல்லை பிரிதெழுதக் கிடைப்பது ………………

  1. நல் + வழி
  2. நல்ல + வழி
  3. நன் + வழி
  4. நன்மை + வழி

விடை : நன்மை + வழி

வினாக்களுக்கு விடையளிக்க.

1. இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருவது எது?

இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருவது கல்வி ஆகும்.

2. நிலையில்லாத செல்வம் எது?

நிலையில்லாத செல்வம் பொருட்செல்வம் ஆகும்.

3. பாரதிதாசன் கல்வி கற்காதவனை எதற்கு ஒப்பிடுகின்றார்?

பாரதிதாசன் கல்வி கற்காதவனை களர்நிலத்திற்கு ஒப்பிடுகிறார்.

4. பொருளில்லார்க்கு எது இல்லை?

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

5. யார் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுவர்?

கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுவர்.

6. பணம் பற்றிய பழமொழிகள் யாவை?

  • பணமில்லாதவன் பிணம்.
  • பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்.

7. கல்வி எதற்கு வழி செய்கின்றது?

கல்வி நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுகின்றது.

8. கல்விச்செல்வம் பற்றி வள்ளுவர் கூறுவது என்ன?

பொருட் செல்வம் நிலையில்லாதது, கல்விச் செல்வமே ‘இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது’ என்றும் அழியாதது. பொருட்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையக் கூடியது. கள்வர்களால் கவர்ந்து செல்லக் கூடியது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment