TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3 – கல்வி கண் போன்றது

கல்வி கண் போன்றது

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 3 – கல்வி கண் போன்றது. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Kalvi Kan Pondrathu

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

படிக்கத் தெரியாதவர் ஒருவர் பேருந்தில் ஊருக்குச் செல்கிறார். அவருக்கு ஏற்படும் சிக்கல்களைக் குழுவில் கலந்துரையாடுக.

குமார் கவிதா! இன்று நான் பேருந்தில் என் அத்தை வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது எனக்கு புதிய அனுபவம் கிடைத்தது.
கவிதா என்ன அது?
குமார்  பேருந்தில் என்னுடன் பயணம் செய்த தாத்தா ஒருவர் பேருந்து எங்கு செல்கிறது என்று தெரியாமல் நான் சென்ற பேருந்தில் ஏறிவிட்டார். பாவம்.
கவிதா  பிறகு என்ன ஆனது?
குமார்  என்னவாயிற்று? என்னிடம் அவர் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி, அந்த இடம் வரும்போது சொல்லச் சொன்னார். அப்போதுதான் நான் அவரிடம் நீங்கள் பேருந்தை மாறி ஏறிவிட்டீர்கள் அடுத்த பேருந்து நிறுத்த்தில் குறுக்காக கடந்து அங்கு நிற்கும் பேருந்தில் செல்லுங்கள்.
கவிதா  நல்லவேளை. நீண்ட தூரம் சென்றதற்குப் பின் கேட்காமல் முதலிலேயே கேட்டாரே.
குமார்  ஆமாம்!  ஆமாம்! அவர் என்னிடம் “தம்பி! என்னுடன் வந்து என்னைப் பேருந்தில் ஏற்றி விடப்பா.” என்றார். “எனக்கு வேலை இருக்கிறது நீங்களே செல்லுங்கள்” என்று கூறினேன். அவர் தனக்கு படிக்கத் தெரியததால் தான் என் அழைப்பதாக கூறினார்.
கவிதா நீ சென்றாயா?
குமார்  ஆமாம் சென்றேன். அவர் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு வேறு பேருந்தில் ஏற்றி, அவரை பத்திரமாக அனுப்பி வைத்தேன்.
கவிதா நல்லவேலை செய்தாய் குமாரு! படிக்கத் தெரியாதால் எவ்வளவு கஷ்டம் பார்தாயா? பேருந்து எண், ஊர்ப் பெயர் தெரியவில்லை. பேருந்து செல்லும் போது இறங்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை.
குமார்  அது மட்டுமா? முகவரி கையில் இருந்தால் கூட பெயர்ப் பலகையைப் பாரத்து அவரால் இடத்தைக் கண்டறிய முடியாது. இதுபோல் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன.
கவிதா  இனிமேல் நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது படிக்காமல் இருந்தால் படிப்பதற்குச் சொல்லி கொடுப்போம்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ‘துன்பம்’ இச்சொல்லின் எதிர்ச்சொல் _________

  1. இன்பம்
  2. துயரம்
  3. வருத்தம்
  4. கவலை

விடை : இன்பம்

2. ‘உதவித்தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. உதவ + தொகை
  2. உதவிய + தொகை
  3. உதவு + தொகை
  4. உதவி + தொகை

விடை : உதவி + தொகை

3. ‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. யாருக்கு எலாம்
  2. யாருக்குல்லாம்
  3. யாருக்கல்லாம்
  4. யாருக்கெல்லாம்

விடை : யாருக்கெல்லாம்

4. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது _________

  1. பணம்
  2. பொய்
  3. தீமை
  4. கல்வி

விடை : கல்வி

5. ‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல் _________

  1. முரசுஅறிவித்தல்
  2. தெரிவித்தல்
  3. கூறுதல்
  4. எழுதுதல்

விடை : எழுதுதல்

வினாக்களுக்கு விடையளி

1. ‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?

விரியூர் கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

2. தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?

சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் அரசின் திட்டம் குறித்து தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.

3. பொன்வண்ணனுக்கு உதவித்தொகை ஏன் கிடைக்கவில்லை?

படிக்கத் தெரியாததால் பொன்வண்ணனுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

1. ஆவல்

  • விருப்பம்
  • ஆசை

2. தபால்

  • அஞ்சல்

3. தண்டோரா

  • முரசறைந்து செய்தி தெரிவித்தல்

4. நெறிப்படுத்துதல்

  • வழிகாட்டுதல்

சரியான சொல்லால் நிரப்புக.

1. மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ____________ (களந்து/கலந்து) கொள்ள வேண்டும்.

விடை : கலந்து

2. கல்வி ___________ (கன்/கண்) போன்றது.

விடை : கண்

3. நான் மிதிவண்டி __________ (பளுதுபார்க்கும்/பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.

விடை : பழுதுபார்க்கும்

4. ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ___________ (அரிவுரை/அறிவுரை) கூறினார்.

விடை : அறிவுரை

உன்னை அறிந்துகொள்

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இதனை வலியுறுத்தும் விதமாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புநாள் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

எதனை, எங்கே செய்வோம்?

3rd Standard - Kalvi kan pondrathu - Ethanai Engu Seivom

1. கல்வி கற்கச் செல்வோம் பேருந்து நிலையம்
2. பாதுகாப்பு தேடிச் செல்வோம் மருத்துவமனை
3. மருத்துவம் பார்க்கச் செல்வோம் காவல் நிலையம்
4. அஞ்சல்தலை வாங்கச் செல்வோம் பள்ளிக்கூடம்
5. பயணம் செய்யச் செல்வோம் அஞ்சல் நிலையம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ

சொல் விளையாட்டு

மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

3rd Standard - Kalvi kan pondrathu - Sol Vilayattu

  • சுற்றம்
  • தோற்றம்
  • முற்றல்
  • மாற்றம்
  • முற்றம்
  • தோல்
  • மாசு
  • தோல்வி
  • ஏற்றம்
  • ஏர்
  • தோற்றல்
  • ஆற்றல்
  • வில்

பாடி மகிழ்வோம்

3rd Standard - Kalvi kan pondrathu - Paadi Magilvom

பப்பரப்பா வண்டி
பனங்காய் வண்டி
ஒத்தையடிப் பாதையிலும்
ஓரம் போகும் வண்டி
புகையில்லா வண்டி
புழுதி தரா வண்டி
எண்ணெய் இல்லா வண்டி
ஏறிக் கோடா பாண்டி

உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்

3rd Standard - Kalvi kan pondrathu - Unakku Sariya Vacha Uyarntha Kondu Uyarnthu Sel

  • நேர்மை
  • ஒழுக்கம்
  • பொறுமை
  • துணிவு
  • கடமை
  • பணிவு
  • கனிவு

சிந்திக்கலாமா?

வளர்மதியும் பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும் அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள்.

இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவதற்குக் காரணம், அவள் எழுதுவதற்கான பயிற்சியை மேற்கொள்ளவில்லை. வகுப்பில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் காட்டும்போது கவனிக்கவில்லை. ஒரு சில எழுத்துக்கள் கோட்டிற்குக் கீழேயும் சில எழுத்துக்கள் கோட்டைத் தொட்டும் எழுத வேண்டும். கெ, கே வரிசை எழுதும்போ கெ கே என்று எழுத வேண்டும். ஆனால் அவள் கெ கே என்று எழுதுவாள். இதுபோல் எழுத்துக்களின் வடிவமைப்பைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவாள். சொற்களுக்கிடையில் இடைவெளி விட்டு எழுத மாட்டாள். இவற்றையெல்லாம் அவள் திருத்திக் கொள்ள வேண்டும். இதுவே என் கருத்து.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment