TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 9.5 – அணியிலக்கணம்

9.5 அணியிலக்கணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 9.5 – அணியிலக்கணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - anni ilakkanam

9th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

பலவுள் தெரிக

கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

  1. சொல் பின்வரு நிலையணி
  2. பொருள் பின்வரு நிலையணி
  3. சொற்பொருள் பின்வரு நிலையணி
  4. வஞ்சப் புழச்சி அணி

விடை : பொருள் பின்வரு நிலையணி

குறு வினா

நினைத்தேன், கவித்தேன், படைத்தேன், சுவைத்தேன் இத்தொடரில் அமைந்துள் உருவகத்தைக் கண்டறிக

இத்தொடரில் அமைந்துள்ள உருவகம் ‘கவித்தேன்’ என்பது . கவிதை, தேனாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.

சிறு வினா

உருவக அணியை சான்றுடன் எழுதுக

இலக்கணம்:-

உவமையின் தன்மையைப் பொருள் மீது ஏற்றிக் கூறுவது உருவக அணி ஆகும்.

சான்று:-

“இன்சொல் விளைமா ஈதலே வித்தாக”

விளக்கம்:-

இன்சொல் – நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வடி உருவ அணியாயிற்று.

கூடுதல் வினாக்கள்

1. சொல் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது சொல் பின்வருநிலையணி அணியாகும்.

சான்று:-

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இக்குறளில் “துப்பு” எனற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத் தருகிறது.

2. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – இப்பாடலில் பயின்று வரும் அணியினை விளக்குக

அணி விளக்கம்

செய்யுளில் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலை அணி ஆகும்.

பொருள் விளக்கம்:-

இக்குறட்பாவில் “செல்வம்” “மாடு” இரண்டு சொற்களுமே செல்வத்தையே குறிப்பதால் இப்பாடலில் வந்துள்ள அணி பொருள் பின் வருநிலை அணியாகும்.

3. சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.

செய்யுளில் முன் வந்த பொருளும், சொல்லும் பின்னர் பல இடங்களில் வருவது சொற்பொருள் பின் வருநிலையணி அணியாகும்.

சான்று:-

எல்லா விளக்கும் விளக்கல்ல் சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

இக்குறட்பாவில் “விளக்கு” என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

4. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழக லான் – இப்பாடலில் பயின்ற வரும் அணியினை விளக்குக

இப்பாடலில் பயின்ற வரும் அணி – வஞ்சப்புகழ்ச்சி அணி

அணி விளக்கம்

புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்

பொருள் விளக்கம்:-

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர் என்று புகழப்படுவது போலத் தோன்றிலாலும் கயவர்கள் இழிநத் செயல்களையே செய்வர் என்னும் பொருளை குறிப்பால் உணர்த்துகிறது. எனவே இது புகழ்வது போல் பழிப்பது ஆகம்

கற்பவை கற்றபின்

கீழ்க்காணும் குறட்பாக்களில் அமைந்துள்ள அணி வகையை கண்டறிக

அ) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
      ஆழி என்படு வார்

சான்றாண்மை மிக்கவர் கடலுக்கு கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று

ஆ) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
       அறம் நாணத் தக்கது உடைத்து

“நாண்” என்னும் சொல் “வெட்கம்” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

இ) தீயவை தீய பயத்தால் தீயவை
      தீயினும் அஞ்சப் படும்

“தீய” என்னும் சொல் “தீமை” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

2. உவமையணி அமைந்துள் பாடல் அடிகளை எழுதுக

“மறுவிலா தெழுந்த முழுமதி போல

முகம்மது நபிபிறந் தனேர” – சீறாப்புராணம்

“ஆறுகிடந் தன்ன அகனேடுத் தெருவிற்” – நெடுநெல்வாடை

3. கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக

விருட்சங்கள்

மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கம்
பச்சைக் குடைகள்

விடை : உருவக அணி

மொழியை ஆள்வோம்

ஒப்பிட்டுச் சுவைக்க.

நூல் மதிப்புரை அன்றும் இன்றும்

பாஞ்சாலி சபதம் நூல் மதிப்புரை
இது மிக அழகிய வர்ணனைகள் நிறைந்த ஒரு காவியம், பிரஹ்ம ஸ்ரீ ஸி. சுப்பிரமணிய பாரதியவர்களால் இயற்றப் பெற்றது. தர்மங்கள் நிறைந்த, ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தில் பொறாமையே உருவாக வந்த துரியோதனன் தனது தாய் மாமனாகிய சகுனியைக் கொண்டு பஞ்ச பாண்டவர்களில் மூத்தோனாகிய தர்மபுத்திரருடன், அவருடைய ராஜ்யத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அவரையும் அவரது சகோதரர்களையும் காட்டுக்குத் துரத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், சூதாடும்படி செய்விக்கின்ற பாகத்தை பிரஹ்ம ஸ்ரீ பாரதி அவர்கள் செய்யுள் எழுதியுள்ளார்.

பாரதியவர்களின் தமிழ் நடையைப் பற்றியும் செய்யுள் விசேஷத்தைப் பற்றியும் தமிழ் நாட்டினரில் பெரும்பான்மையோரும் அறிவர் என நம்புகிறோம் . ஆசிரியர் இப்புஸ்தகத்தின் ஒரு பிரதியை சென்னை கவர்னர் அவர்களுக்கு அனுப்பியிருந்ததாகவும் அவர் அதைவந்த னத்துடன் ஏற்றுக் கொண்டதாக ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதாகவும் கேள்விப்படுகிறோம்.

பாஷாபிமானிகளும் தேசாபிமானிகளும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. இதன் விலை அணா எட்டு, தபாற் செலவு வேறு. வேண்டியவர்கள் நமது ஆபீசுக்கேனும் அல்லது பிரஹ்ம ஸ்ரீ ஸி. சுப்பிரமணிய பாரதியவர்கள், புதுச்சேரி யென்ற விலாசத்திற்கேனும் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.

‘ஞான பாநு‘ மாதப்பத்திரிகை,
ஆசிரியர் எஸ். சுப்பிரமணிய சிவா,
சென்னை, நவம்பர் 1913

இருபதாம் நூற்றாண்டுச் சூழலில்தான் கம்பரின் இராமாயணம் இலக்கியம் எனத் தகுதி பெற்றதோடு ஆய்வுக்குரிய பெருநூலாகவும் கருதப்படுகிறது. இலக்கிய நோக்கில் கம்பர் நூல், எவ்வாறு காவியம் எனச் சிறக்கிறது? என்பதைப் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் மிக விரிவாக ஆராய்கிறார். வால் மீகியிலிருந்து கம்பர் வேறுபடும் இடங்களை விரிவாகத் தொகுத்து உரைக்கிறார். தண்டியின் பாவிகம் என்ற கருத்தாக்கத்தின் மூலம் இக்காப்பியத்தின் உள்ளுறையை, கவிக்குரலை நுட்பமாக எடுத்துரைக்கிறார். அரிஸ்டாட்டில் முதல் ஆபர்கிராம்பி வரையிலான காவியம் பற்றிய மேற்கத்தியர் கோட்பாடுகளையும் தண்டி முதல் வ.சுப. மாணிக்கம் வரையிலான நம்மவர்களின் கோட்பாடுகளையும் தக்க முறையில் பயன்படுத்திக் கம்பர் காவியத்தின் கட்டமைப்பு, பாத்திரப் படைப்பு, கவிக்குரல் முதலியவற்றைத் தெளிவுபடுத்துகிறார். இம்முறையில் சிறப்பான ஆய்வுநூல் என இந்நூலை மதிப்பிடலாம்.

கவித்துவ இயக்கத்தினுள் பக்தியும், ராணிகமும் பகுதிகளாவதைத் தவிர்க்க இயலுமா என்ற கேள்வியோடு கம்பர் காவிய ஆய்வை ஆழமாகத் தொடர்வதற்கு இடம் இருக்கிறது. வரலாற்றுச் சூழலிலிருந்து, இலக்கிய இரசனை ஆய்வை விலக்கிச் செய்ய முடியுமா என்பதும் கேள்வி. இந்தத் திசைகளில், கம்பர் காவிய ஆய்வை ஆசிரியர் தொடரவேண்டும்.

‘நிகழ்’ – நூல் திறனாய்வுகள்
100; ஞானி, அறிவன்;
டிசம்பர் 2001

மாெழி பெயர்க்க.

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

விடை :-

ஒரு மான், ஆமை, ஒரு காகம் மற்றும் எலி நண்பர்கள். ஒரு நாள் மான் ஒரு வேட்டைக்காரனின் வலையில் சிக்கியது. நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் படி, மான் இறந்ததைப் போல அசையாமல் கிடந்தது. காகம் மானின் மீது அமர்ந்து குத்த ஆரம்பித்தது. ஆமை அவரை திசைதிருப்ப வேட்டைக்காரனின் பாதையை கடந்தது. வேட்டைக்காரன் மானை விட்டுவிட்டு, இறந்து விட்டதாகக் கருதி, ஆமைக்குப் பின் சென்றான். இதற்கிடையில், எலி மெல்லும் மானை விடுவிக்க வலையைத் திறக்கிறது. காகம் ஆமை எடுத்து விரைவாக வேட்டைக்காரனிடமிருந்து எடுத்துச் சென்றது. இந்த பஞ்சதந்திர கதையிலிருந்து, குழுப்பணி சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை அறிகிறோம்.

பொருத்தமான நிறுத்த குறியிடுக

ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று கூறினார்

பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
முதலிய

அடடா என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறத

விடை :-

ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.

பிள்ளைத் தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாப்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.

“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுரபரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச் சிறந்தாகத் திகழ்கிறது.

சொற்றொடர் அமைக்க

1. செந்தமிழும் சுவையும் போல

விடை : பெரியோர்கள் மணமக்களை செந்தமிழும் சுவையும் போல வாழ வேண்டும் என வாழ்த்தினர்.

2. பசுமரத்தாணிபோல

விடை : ஒருவன் நமக்கு செய்த தீங்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும்.

3. உள்ளங்கை நெல்லிக்கனி போல –

விடை : இச்செய்யுளின் பொருள், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக புலனாகிறது.

4. அத்தி பூத்தாற் போல

விடை : என் தோழியின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழும்.

5. மழைமுகம் காணாப் பயிர் போல

விடை : வெளிநாட்டிற்கு சென்ற சோமு மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வாக காணப்பட்டான்.

பாடலில் காணும் இலக்கிய  வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்ஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
அலாதொருவர் பகர ஒணாதே

இலக்கிய வடிவம் புகழ் பெற்றோர்
வெண்பா புகழேந்தி
பரணி சயங்கொண்டான்
விருத்தம் கம்பன்
கோவை, உலா, அந்தாதி ஒட்டக்கூத்தர்
கலம்பகம் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இரட்டையர்கள்
வசைக்கவி காளமேகம்
சந்தம் படிக்காசுப்புலவர்

நூல் மதிப்புரை எழுதுக.

நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக.

நூலின் பெயர் பாதை எங்கும் பாடல்கள்
நூலாசிரியர் பேராசிரியர் க. இராமச் சந்திரன்
வெளியீடு நர்மதாப் பதிப்பகம், சென்னை

இந்நூற்றாண்டில் சிறந்த தன்னம்பிக்கை நூலான இந்நூலை அழகாக எழுதியவர் பேராசிரியர் க. இராமச்சந்திரன் 26 தலைப்பின் கீழ் 160 பக்கங்களில் தன்னம்பிக்கைத் தழுவல்கள் மிகுந்து கிடக்கும் நூல் இது.

மாணக்கர்களுக்குப் பயன்படும் வகையில் இனிய, எளிய நடையில் ஆசிரியர் தித்திக்கும் தேன் சுவையில் எழுதியுள்ளார்.

இந்நூலினை கற்பதால் அன்பு அருள், அறம், வாய்மை, தன்னலம் கருதாமை, பிறர்கென வாழும் தன்மை, ஊக்கம் முதலிய நற்பண்புகளை நன்கு அறிவதற்கு காரணமாகின்றது.

இந்நூல் தலை சிறந்த சான்றோர்களின் வாழ்க்கைப் பாடங்களையும், இயற்கை நமக்குக் கற்றுத் தருகின்ற பாடங்களையும் ஒரு சேர இதில் காணலாம்.

இன்றைய தலைமுறை அவசிம் படிக்க வேண்டிய அழகான நூல்.

நயம் பாராட்டுக.

”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உள்ளம்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலே”

– வள்ளலார்

திரண்ட கருத்து

எந்த ஒரு வேறுபாட்டையும் வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி, தன் உள்ளதுள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உவந்து ஏற்கிறார் அத்தகைய உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடனம் புரியும் இடம் ஆகும். எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தை மிக இருந்தால் எவ்வுயிரிடத்தும் அன்புடன் வாழ விழைந்தேன்.

மோனைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • த்துணையும் – வ்வுயிரும்
  • டையவராய் – வக்கின்றார்

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • த்துணையும் – ஒத்துரிமை
  • சித்துரு – வித்தகர்

சந்தம்

“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.

அணி

“எவ்வுயிரும் தம்முயிர் போல” என்னும் வரியில் “போல்” என்னும் உவம உருபு இருப்பதால் உவமையணி இடம் பெற்று பாடலுக்கு மெருகூட்டுகிறது.

மொழியோடு விளையாடு

எழுத்துக்களை முறைப்படுத்திச் சொற்களை கண்டுபிடிக்க

  1. புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை
  2. யனிநேம்தம – மனித நேயம்
  3. கச்வப்ஞ்புசிழ்வ – வஞ்சப்புகழ்ச்சி
  4. தைக்விதுகபு – புதுக்கவிதை
  5. டுசிப்காட்ஞ்ப – காஞ்சிப்பட்டு

அகராதியில் காண்க

1. குரிசல்

  • பெருமையில் சிறந்தேன்
  • உபகாரி
  • தலைவன்

2. தலையளி

  • முகமலர்ந்து
  • கூறுதல்
  • அன்பு
  • அருள்

3. நயம்

  • நன்மை
  • விருப்பம்
  • போற்றுகை
  • மிகுதி
  • பயன்
  • நுன்மை
  • அருள்

4. உய்த்தல்

  • செலுத்துதல்
  • நடத்துதல்
  • நுகர்தல்
  • அனுப்புதல்
  • அறிவித்தல்

5. இருசு

  • நேர்மை
  • வண்டியச்சு
  • மூங்கில்

தொகைச் சொற்களை கொண்டு பத்தியை சுருக்குதல்

சேர, சாேழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்பலை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் எள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

விடை:-

மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்கள் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.

பூங்கொடி நேற்றுப் பள்ளிக்குச் ………………… (செல்), தன் தோழிகளைக் ………………… (காண்), மகிழ்ச்சியுடன் ………………… (உரை); பின்னர் வங்கிக்குப் ………………… (போ) தான் கூடுதலாகச் ………………… (செலுத்து) தொகையைத் திரும் ………………… (பெறு) ………………… (கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு ………………… (வேண்டு) பொருள்களை ………………… (வா). அங்கு ………………… (நில்) பேருந்தில் ………………… (ஏறு) வீடு ………………… (திரும்பு).

விடை:-

பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள் (செல்) தன் தோழிகளைக் கண்டு (காண்) மகிழ்ச்சியுடன் உரையாடினாள் (உரை). பின்னர் வங்கிக்குப் போய் (போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று (பெரு)க் கொண்டு (கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற (நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள் (திரும்பு).

தமிழ் எண்களால் நிரப்புக

தமிழிலுள்ள மொத்த எழுத்துக்கள் உசஎ

இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்ற பிரிவாக பிரிக்கப்படும், கஉ உயிரெழுத்து கஅ மெய்எழுத்துகள் ஆகிய ங0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துக்கள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

9th Standard - anni ilakkanam - Katchiyai Kandu kavinuru eluthuga உயிர்களிடதது அன்பு வேண்டும்
என்று சொன்ன பாரதியும் இன்றில்லை
வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலாரும் இன்றில்லை
ஆனால்
உன் உருவத்தில்
அவர்களைப் பார்க்கிறேன்

நிற்க அதற்குத் தக

நான் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் …

  1.  அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்.
  2. இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
  3. பெரியோர்களின் அறிவுைரகளைக் கேட்டு நடப்பேன்.
  4. மக்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பேன்

கலைச் சாெல்லாக்கம்

  • மனிதம் = Humane
  • கட்டிலாக் கவிதை = Free verse
  • ஆளுமை = Personality
  • உருவக அணி = Metaphor
  • பண்பாட்டுக் கழகம் = Cultural Academy
  • உவமையணி = Simile

அறிவை விரிவு செய்

  • சிற்பியின் மகள் – பூவண்ணன்
  • அப்ப சிறுவனாக இருந்தபோது – அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா. முகமது செரீபு)

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment