TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 9.4 – தாய்மைக்கு வறட்சி இல்லை

9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 9.4 – தாய்மைக்கு வறட்சி இல்லை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Thaimaikku varachi illai

9th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்.
  • தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்.
  • முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
  • “வேரில் பழுத்த பலா” புதினம் சாகித்திய அகாதெமி விருதையும், “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.

பாட நூல் மதிப்பீட்டு வினா

“தாய்மைக்கு வறட்சி இல்லை” என்னும் சிறுதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக

முன்னுரை:-

தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையை எழுதியவர் சு.சமுத்திரம். தாய்மை உள்ளத்தை விளக்குவதாய் இக்கதை அமைகிறது.

ஏழைக் குடும்பம்:-

கர்நாரித்தில் குல்பர்கா நகரைத் தாண்டிய நெடுஞ்சாலை அருகே ஒரு தோட்டம். அங்கு உள்ள குடிசையில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்று. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், இரண்டு நாய்க்குட்டிகள் ஆகியவை குடும்ப உறுப்பினர்கள்

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:-

ஜீப்பில் இருந்து இறங்கிய அதிகாரியும் மற்றவர்களும் இலையில் பிரியாணியும் முட்டையும் சாப்பிட்டனர். கஷ்டப்பட்டு கொண்டு வந்த தண்ணீரை அவர்களுக்கு அந்த ஏழை கொடுக்கின்றான். அந்த அதிகாரி மீதி பிரியாணி, முட்டை, மற்ற உணவுகளை இலையில் வைத்துக் கொடுத்தான். அதை வாங்கி தன் குடும்பத்தை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவன் மனைவி மீதியை வாங்கி வருவதை பார்த்து முறைத்தாள்.

தாய்மை உணர்வு:-

கணவனைக் கோபமாக பேசி விட்டு பார்த்தாள். உணவு தீர்ந்துவிடக் கூடாது என மெதுவாக சுவைத்தார்கள். இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று நினைக்கையில் ஒரு உருண்டை உணவைக் கூட அவள் தொண்டை வாங்க மறுத்தது. கத்திய நாய்க் குட்டிகளுக்கு உணவிட்டுத் தடவிக் கொடுத்தாள். மடியில் வைத்து சிறு உருண்டையை ஊட்டினாள். உணவு குறைய குறைய தாய்மை உணர்வும் கூடிக் கொண்டிருந்தது.

முடிவுரை:-

கருவைச் சுமந்திருந்தாலும் கருணையைச் சுமந்திருந்தால், தனது வயிரைக் காயப்போட்டு மற்றவர்களுக்கு உணவிட்டாள் தாய், கருணை உள்ளம் கடவுள் இல்லம்

கற்பவை கற்றபின்

1. ’பிறர்க்கு உதவி செய்வதற்கு மொழி தேவையில்லை’ என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு வகுப்பறை மேடையில் நடித்துக காட்டுக.

நாடக மாந்தர் : கண்ணன், தாமரை, வெளிநாட்டவர், வணிகர்

(கண்ணனும் தாமலையும் நண்பர்கள் வெளிநாட்டவர் ஒருவரிடம் வணிகர் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர்)

கண்ணன் தாமரை நலமா? நான் கடை வீதிக்குச் செல்கின்றேன். நீயும் வருகிறாயா?
தாமரை நலம். எனக்கும் கடைவீதியில் வேலையிருக்கின்றது. வருகின்றேன்.
கண்ணன் போகலமா?
தாமரை சரி

(வெளிநாட்டவரும் வணிகரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். மொழி புரியாமல் வணிகர் திட்டிக் கொண்டு இருக்கின்றார்)

வெளிநாட்டவர் ஹாய்! கவ் மச் ருபி திஸ். ப்ளீஸ் டெல்.
வணிகர் அடப் போயா? உன்னும் புரியல. காலையில் உசரி வாங்குற.
கண்ணன் ஐயா வணிகரே! ஏன் கோபப்படுகீறீர்?
வணிகர் போப்பா.
தாமரை ஐயா மொழி புரியவில்லை என்பதற்காக அவரிடம் வெறுப்பு காட்டலாமா?
கண்ணன் தாமரை நீ சொல்வது சரி.
வணிகர் அப்பறம் என்ன பண்ண?
தாமரை
அன்பாக அவரிடம் செய்கையில் கூடச் சொல்லலாம். அவர் புரிந்து கொள்வார்.

(கண்ணன் வெளிநாட்டவரிடம் செய்கையில் பேசுகின்றனான்)

வெளிநாட்டவர் தேங்க்யூ
வணிகர் நன்றி பசங்களா? உதவ மொழி தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

2. கதையைத் தொடர்ந்து எழுதித் தலைப்பிடுக

சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளம் இரண்டு, மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. அவை மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.

பிறகு ஒரு சின்னச் சுண்டெலி சொன்னது.

பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். பூனை எப்போது நம்மை பிடிக்க வருகிறது என்று நமக்கு தெரிவதில்லை. கட்டாயம் நாம் அதைச் செய்தாக வேண்டும்…

நாம் வழி இல்லாததால் தான் நம்மை பூனை பிடித்துத் தின்றுவிடுகிறது. பூனை பதுங்குவதில் வல்லது. அதனால் அது வருவது தெரிவதில்லை என்றது ஒரு சுண்டெலி. இப்படியே சென்றால் நம் இனமே அழிந்து விடுமே என்று கவலைப்பட்டது.

மற்றொரு சுண்டெலி புத்திசாலி சுண்டெலி ஒன்று. ‘பூனைக்கு மணி’ கட்டி விடலாம் என்றது. ஆனால், அந்த மணியை கண்டுவது யார் என்று தான் தெரியவில்லை என்றது அறிவாளி சுண்டெலி.

அச்சமில்லை, அச்சமில்லை என்று பாரதியார் கூறியிருக்கிறார். அதனால் நாம் அச்சப்படாமல் பூனையிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்றுச் சொல்லி குரு சுண்டெலி, பூனையிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று சொல்லி குரு சுண்டெலி, பூனையிடம் சென்று உன்னைக் குறவர்களிடமிருந்து பாதுகாக்கின்றோம். நீ எங்களுக்கு ராஜாவாகி பாதுகாப்பு கொடு என்றது. அதுவும் உடன்பட்ட சுண்டெலிகளைக் கொல்லாமல் பாதுகாப்பு கொடுத்தது. பூனையும் பாதுகாப்பாக இருந்தது.

கூடுதல் வினாக்கள்

1. சு.சமுத்திரம் எழுதிய சிறுகதை தொகுப்புகள் யாவை?

வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு, வளத்தம்மா

2. சு.சமுத்திரம் பெற்ற விருதுகள் யாவை?

  • “வேரில் பழுத்த பலா” புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதும்
  • “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதிக்காக தமிழக அரசின் பரிசையையும் பெற்றார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment