8.2 ஒளியின் அழைப்பு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.2 – ஒளியின் அழைப்பு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
சாெல்லும் பாெருளும்
- விண் – வானம்
- ரவி – கதிரவன்
- கமுகு – பாக்கு
இலக்கணக் குறிப்பு
- பிறவி இருள் – உருவகம்
- ஒளியமுது – உருவகம்
- வாழ்க்கைப்போர் – உருவகம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. வேண்டி – வேண்டு + இ
- வேண்டு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
2. போகிறது – போ + கிறு + அ +து
- போ – பகுதி
- கிறு – நிகழ்கால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
3. மலர்ச்சி – மலர் + ச் + சி
- மலர் – பகுதி
- ச் – இடைநிலை
- சி – தொழிற்பெயர் விகுதி
நூல் வெளி
- புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
- பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.
- புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
- ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
- ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்
- புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும்
- இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும்
- 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
- பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
முண்டி மோதும் துணிவே இன்பம் இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
- மகிழ்ச்சி
- வியப்பு
- துணிவு
- மருட்சி
விடை : துணிவு
குறு வினா
கமுகு மரம் எதனைத் தேடியது?
கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது
சிறு வினா
அது வாழ்க்கைப் போர் – எது?
- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்.
நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக
- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்
- கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.
- பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.
- அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.
கற்பவை வினாக்கள்
1. முயற்சி, நம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை உணர்த்தும் அறிஞர் பொன்மொழிகளைத் தேடி தொகுக்க
எ.கா.
- உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள் ஏனெனில் வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது.
- எட்டிவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை! அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை!
- வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற்படிதான்!
சர்ச்சில் : தன்னம்பிக்கையைத் தவிர வேறு எதுவுமே எனக்கு உபயோகமாக இருந்ததில்லை.
சுவாமி விவேகானந்தர் : விழுது தவறில்லை; விழுந்து கிடப்பது தான் தவறு எழு!
பெர்னாட்ஷா : உழைப்பு, கடின உழைப்பு, மிகமிகக் கடின உழைப்பு… இவையே வெற்றிக்கு மூன்று படிகள்.
2. ‘தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்து வகுப்பறையில் படித்துக்காட்டுக
தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்
மலரின் தன்னம்பிக்கை மணம்
கதிரவனின் தன்னம்பிக்கை ஒளி
மேகத்தின் தன்னம்பிக்கை மழை
எறும்பின் தன்னம்பிக்கை சுறுசுறுப்பு
தேனீயின் தன்னம்பிக்கை தேன்
விதையின் தன்னம்பிக்கை விருட்சம்
அந்தத் தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்… மனம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ந,பிச்சமூர்த்தி ___________ என போற்றப்படுபவர்
- உரைநடையின் தந்தை
- புதுக்கவிதையின் தந்தை
- இலக்கணத்தின் தந்தை
- இலக்கியத்தின் தந்தை
விடை : புதுக்கவிதையின் தந்தை
2. பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர் ___________
- வல்லிக்கண்ணன்
- ந,பிச்சமூர்த்தி
- பாரதிதாசன்
- பாரதியார்
விடை : ந,பிச்சமூர்த்தி
3. ந,பிச்சமூர்த்தி துணையாசிரியராக இருந்த இதழ்களில் பொருந்தாதது ___________
- குடியரசு, ஹனுமான்
- உண்மை, நவஇந்தியா
- குடியரசு, நவஇந்தியா
- ஹனுமான், நவஇந்தியா
விடை : ஹனுமான், நவஇந்தியா
4. பெருமரத்துடன் சிறு கழுகு போட்டியிருகின்றது – இதில் “கமுகு” என்பதன் பொருள்
- பாக்கு மரம்
- ஆல மரம்
- புளிய மரம்
- பலா மரம்
விடை : பாக்கு மரம்
5. கழுகு மரம் போட்டியிட காரணம் ___________
- பெருமரத்தின் நிழல்
- வாழ்க்கைப்போர்
- கதிரவன் ஒளி
- நம்பிக்கை
விடை : கதிரவன் ஒளி
6. முண்டி மோதும் துணிவே ___________
- வாழ்க்கைப்போர்
- நம்பிக்கை
- துணை
- இன்பம்
விடை : இன்பம்
பொருத்துக
1. துளைத்து | அ. கதிரவன் உயிர்ப்பு |
2. தேடியது | ஆ. பெருமரத்தின் நிழல் |
3. வெறுத்து | இ. வாழ்க்கைப்போர் |
4. பெருமரத்துடன் போட்டி | ஈ. பெருமரத்தின் நிழல் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
பொருத்துக
1. விண் | அ. கதிரவன் |
2. ரவி | ஆ. வானம் |
3. கமுகு | இ. முட்டி |
4. முண்டி | ஈ. பாக்கு |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் ___________ உயிர்ப்பைத் தேடியது.
விடை : கதிரவன் உயிர்ப்பைத்
2. கமுகு மரம் ___________ நிழலை வெறுத்து, உச்சிக் கிளையை மேலே உயர்த்தியது.
விடை : பெருமரத்தின்
3. அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டிபோடக் காரணம் ஆகும். இதுவே ___________ போர்
விடை : வாழ்க்கைப்
4. கமுகு மரம் பெருமரத்தின் முட்டி மோதி ___________, ___________, ___________ கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராடி வென்றது.
விடை : துணிச்சல், முயற்சி, நம்பிக்கை
5. பெருமரத்தை விஞ்சி ___________ நடைபோடுகிறது.
விடை : வளர்ச்சி
குறு வினா
1. கமுகு மரம் எதனைத் துளைத்து நின்றது?
கமுகு மரம் தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
2. கமுகு மரம் வென்றதற்குக் காரணம் யாது?
துணிச்சல், முயற்சி, நம்பிக்கை
3. புதுக்கவிதைகள் என்றால் என்ன?
புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
4. புதுக்கவிதைகளின் தந்தையென போற்றப்பட்டவர் யார்?
புதுக்கவிதைகளின் தந்தையென போற்றப்பட்டவர் ந.பிச்சமூர்த்தி
5. ந.பிச்சமூர்த்தி எந்த இதழ்களின் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
ஹனுமான், நவ இந்தியா
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…