TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 8.3 – தாவோ தே ஜிங்

8.3 தாவோ தே ஜிங்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.3 – தாவோ தே ஜிங்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - thavo thejing

9th Std Tamil Text Book – Download

இலக்கணக் குறிப்பு

  • பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
  • வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

இணைகின்றன – இணை + கின்று + அன் + அ

  • இணை – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

நூல்வெளி

  • லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  • கன்பூசியஸ் இவரது சம காலத்தவர். அக்காலம், சீன சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
  • லாவேட்சு “தாவோவியம்” என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  • ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
  • லாவோட்சுவாே இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.
  • தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

விடைக்கேற்ற வினாவைத் தேர்க

விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது

  1. பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?
  2. பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
  3. பானை எதனால் பயன்படுகிறது
  4. பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது

விடை : பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?

குறு வினா

தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று எதைக் குறிப்பிடுகிறார்?

தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொள்வதை (வெற்றிடமே பயன்படுகிறது) குறிப்பிடுகிறார்.

கற்பவை கற்றபின்

1. நீங்கள் அறிந்த அயல்நாட்டுத் தத்துவ அறிஞர்களின் பெயர்களைத் தொகுக்குக

  • சாக்ரடீஸ்
  • பிளேட்டோ
  • அரிஸ்டாட்டில்
  • கன்பூசியஸ்
  • டார்வின்
  • உமர்கய்யாம்
  • கலீல் கிப்ரான்

2. ஜென் தத்துவக் கதை ஒன்றைப் படித்து அது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களுக்கு “வாழ்க்கை என்றால் என்ன?” என்பதைச் சொல்லிக் கொடுக்க, பட்டாம்பூச்சிக் கூட்டைக் காட்டினார். இன்னும் சில நேரங்களில் இந்தப் பட்டாம்பூச்சி மிகுந்த பேராட்டத்திற்கு இடையில் வெளியில் வந்துவிடும். யாரும் இதற்கு உதவக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். சீடன் ஒருவன் கூட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதைப் பார்த்து, கூட்டை உடைத்து வழியைப் பெரிதாக்குகின்றான். அந்தப் பட்டாம்பூச்சி வெளியில் வந்து இறந்துவிடுகின்றன. சீடனோ மிகவும் கவலைப்பட்டான். பின் ஜென்துறவி வந்தார். சீடன் அழும் காரணத்தைக் கேட்க, நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டான். சிறகுகள வலுப்படவும், நன்கு வளர்வதற்கும் முன்பே பறக்கத்துடித்தன் விளைவுதான். அது இத்தகைய துன்பத்தை அனுபவித்து இறந்தது. அதேபோலத் தான் மனிதர்களும் பல போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். மனவலிமை, துணிச்சல் கொண்டு பேராடி வெற்றி காண வேண்டும் என்றார் ஜென் துறவி.

3. மண்பாண்டங்கள் செய்வோரைச் சந்தித்து அதன் உருவாக்கம் குறித்து த் தெரிந்து கொள்க.

நீர், தூர்வையாக்கப்பட்ட மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணை சக்கரத்தில் இட்டுப் பக்குவமாக வேண்டிய உருவத்தில் செய்து, அதனைச் சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுதல்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.தாவோ தே ஜிங் நூலை இயற்றியவர் __________

  1. பாரதியார்
  2. லாவோர்ட்சு
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : லாவோர்ட்சு

2. லாவோர்ட்சு __________ மொழிக்கவிஞர்

  1. தமிழ்
  2. ஜப்பான்
  3. அரபி
  4. சீன

விடை : சீனம்

3. பாண்டம் என்று லாவோட்சு குறிப்பிடுவது

  1. பானை
  2. வீடு
  3. சுவர்
  4. பொருள்

விடை : பானை

4. பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக்க

  1. லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  2. கன்பூசியஸ் இவரது சம காலத்தவர். அக்காலம், சீன சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
  3. லாவேட்சு “தாவோவியம்” என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  4. வெற்றிடம் இல்லாததே பயன்படுகின்றது என்பதை வலியுறுத்துவத தாவோ தே ஜிங்

விடை : வெற்றிடம் இல்லாததே பயன்படுகின்றது என்பதை வலியுறுத்துவத தாவோ தே ஜிங்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. சக்கரம் பல ஆரங்களைக் கொண்டது. __________ நடுவே வைத்து சுழல்கிறது

விடை : வெற்றிடத்தை

2. அழகிய __________ ஆனாலும் வெற்றிடமே பயன்படுகிறது.

விடை : பானையே

3. __________, __________ கூட வெற்றிடமே. அதுவே நமக்கு பயன்படுகிறது.

விடை : சன்னலும், கதவும்

4. சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடமே __________ பயன்படுகிறது.

விடை : அறையாக

5. __________ உண்மையானாலும் வெற்றிடமே பயன்படுகிறது.

விடை : உருப்பொருள்

குறு வினா

1. வாழ்க்கை என்பது யாது?

இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை.

2. வாழ்க்கை உருவத்தை வரைந்து வைப்பது எது?

ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன.

3. எதனை சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார்?

உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார்.

4. வெற்றிடம் பயன்டும் பொருட்கள் என தாவோ ஜிங் கூறும் பொருட்கள் யாவை?

சக்கரம், சன்னல், பானை, சுவர்

5. தாவோவியம் எதைக் கூறுகின்றார்?

வாழ்க்கையை வாழ்வதன் மூலம் தான் யார் என்பதை அறிந்து கொள்ளுதல், வாழ்க்கையின் போக்கோடு செல்லுதல் ஆகிய அடிப்படைகளைத் தாவோவியம் கூறுகின்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment