8.1 பெரியாரின் சிந்தனைகள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.1 – பெரியாரின் சிந்தனைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் ஐ என்பதனை அய் எனவும், ஒள என்பதை அவ் எனவும் சீரமைத்தார்
காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
விடை : கூற்று, காரணம் இரண்டும் சரி
குறு வினா
‘பகுத்தறிவு’ என்றால் என்ன?
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
சிறு வினா
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
- விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
- திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
- விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
- பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.
நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக
- இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.
- மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
- மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.
- திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.
- இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.
- தமிழில் “ஐ” என்பதை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
கற்பவை கற்றபின்
1. ‘இன்று பெரியார் இருந்திருந்தால்’ என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக
முத்தமிழே! வணக்கம்! முழுநிலவுச் சான்றோரே வணக்கம்!
வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், பெண்ணினப் போர்முரசு, புத்துலகத் தொலைநோக்காளர் என்ற பெருமைக்கெல்லாம் உரிய பெருந்தலைவர் தந்தை பெரியார்.
அவர் இன்ற இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி சில மணித்துளிகள் பேசுகிறேன். தெருவுக்கு தெரு சாதிக் கட்சி. ஊருக்கு ஊர் மதக்கட்சி இவையெல்லாம் இன்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்ற அவலநிலை சாதி, மதம் வேண்டாம் என்ற பெரியார் இன்று இருந்திருந்தால் சாதி, மதக்கட்சிகளை நறுக்கியிருப்பார்.
இன்று ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பெரியார் இருந்திருந்தால் பொங்கி எழுந்து உரிமைகளை நிலைநாட்டியிருப்பார். ஆடம்பரத் திருமணங்களும், மணக்கொடையும் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. பெரியார் இன்று இருந்திருந்தால் அதனை பொசுக்கியிருப்பார்.
நிறைவாகச் சிலவற்றைச் சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். “நேற்று என்பது மலர்ந்த மலர்கள், நாளை என்பது நம்பிக்கை மொட்டுகள், இன்று என்பது நறுமணமலர்கள்.” இன்றைய நறுமண மலர்களாகிய நாம் பெரியார் இன்று இருந்திருந்தால் என்ன செய்வாரோ, அதனை நாம் சமுதாயம் முன்னேற நாம் செய்ய வேண்டும். நன்றி! வணக்கம்.
2. பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாப்பட்டியலை உருவாக்குக
நேர்காணல் வினாக்கள்
- வணக்கம் ஐயா! இன்றைய இளைஞர்கள் பகுத்தறிவின் பக்கம் வர என்ன செய்யலாம்?
- இன்றைய இலக்கியங்கள் குறித்து தங்களின் கருத்து யாது?
- இன்றைய தலைமுறைக்குத் தாங்கள் கூறும் அறிவுரை யாது?
- வேலையில்லாத் திண்டாட்டம் போக்கத் தக்க வழி கூறுங்கள்?
- வருங்காலத் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்?
3. இன்றைய சமுதாயம் பெரியார் பாதையில் நடக்கிறதா? நடக்கவில்லையா?
இன்றைய சமுதாயம் பெரியார் பாதையில் நடக்கிறதா?
வணக்கம் தோழர்களே!
எங்கும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை. கலப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள், நவீன முறைக் கல்வி, கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இன்றைய சமுதாயம் பெரியார் பாதையில் நடக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இன்றைய சமுதாயம் பெரியார் பாதையில் நடக்கவில்லை?
அவைக்கு முதற்கண் வணக்கம்
சாதிக்கட்சிள், மதக்கட்சிகள் எல்லாம் பெருகிவிட்டன. பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் நடக்கின்றன. இன்றும் குடும்பங்களில் பெண்ணுரிமை மறுக்கப்படுகின்றன. அதையெல்லாம் விடுங்கள். சாதிச்சான்றிதழ் என்ற ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய சமுதாயம் பெரியார் பாதையில் நடக்கவில்லை என்பதற்கு அதுவே சான்றாகும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பகுத்தறிவு, தன்மதிப்பு ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் ______________
- நேரு
- பாரதியார்
- காந்தியடிகள்
- தந்தை பெரியார்
விடை : தந்தை பெரியார்
2. தந்தை பெரியார் என்று புகழப்பட்ட விதம் ______________
- ஆண்ணினப் போர்முரசு
- பெண்ணினப் போர்முரசு
- பெரியவர்களின் போர்முரசு
- வாலிபர்களின் போர்முரசு
விடை : பெண்ணினப் போர்முரசு
3. புத்துலகத் தொலைநோக்காளர் என்று புகழப்பட்டவர் ______________
- தந்தை பெரியார்
- நேரு
- பாரதியார்
- காந்தியடிகள்
விடை : தந்தை பெரியார்
4. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக்க
பெரியார் விதைத்த விதைகள்
- கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கான சொத்துரிமை
- குழந்தைத் திருமணம்
விடை : குழந்தைத் திருமணம்
5. 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் ______________
- பெரியார்
- வைக்கம் வீரர்
- வெண்தாடி வேந்தர்
- பகுத்தறிவு பகலவன்
விடை : பெரியார்
6. யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்குத் கொடுத்த பட்டம் ______________
- கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
- மேற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
- வடக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
- தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
விடை : தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
7. பெரியார் எதிர்த்தவை அல்லாத ஒன்று
- குலக்கல்வித் திட்டம்
- விதவைத்திருமணம்
- தேவதாசி முறை
- இந்தித் திணிப்பு
விடை : விதவைத்திருமணம்
8. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்த உயிரெழுத்துகள்
- அ, ஆ
- இ, ஈ
- ஏ, எ
- ஐ, ஓள
விடை : ஐ, ஓள
9. பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு _________
- 1976
- 1977
- 1978
- 1979
விடை : 1978
10. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் கொடுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டாகப் பெரியார் கூறுவது _________
- 30%
- 40%
- 50%
- 60%
விடை : 50%
11. ரிவோல்ட் என்னும் ஆங்கில இதழை நடத்தியவர் ___________
- பெரியார்
- வ.உ.சி
- இரா.பி.சேதுபிள்ளை
- பாரதிதாசன்
விடை : பெரியார்
12.சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தோற்றுவித்த ஆண்டு
- 1923
- 1925
- 1927
- 1929
விடை : 1925
13. கூற்றினை ஆராய்க
கூற்று : மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மதத்தின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
காரணம் : மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்கா மனிதர்களா? மதம் என்பது மனிதர்கள் ஒற்றுமைபடுத்துவதற்காகவா? பிரித்தது வைப்பதற்காகவா? எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை வைக்கிறார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று காரணம் சரி
- கூற்று காரணம் தவறு
- கூற்று தவற, காரணம் சரி
விடை : கூற்று காரணம் சரி
14. கூற்றினை ஆராய்க
கூற்று : கல்வி மக்களிடம் பகுத்தறிவு, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்
காரணம் : மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ப தொழில், அலுவல் பார்க்க கல்வி பயன்பட வேண்டும்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று காரணம் தவறு
- கூற்று காரணம் சரி
- கூற்று தவற, காரணம் சரி
விடை : கூற்று காரணம் சரி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ____________ சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை
விடை : பெரியாரின்
3. பெரியார் தோற்றுவித்த இயக்கம் ____________
விடை : சுயமரியாதை இயக்கம்
4. பெரியார் நடத்திய தமிழ் இதழ்கள் ____________, ____________, ____________
விடை : விடுதலை, குடியரசு, உண்மை
5. ____________ அழைப்பு மணி தந்தை பெரியார்
விடை : மனித நேயத்தின்
6. நாட்டு விடுதலையை விட ____________ விடுதலைதான் முதன்மையானது என்று பெயரியார் கூறினார்
விடை : பெண்
7. பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் குறிப்பிடும் நூல் ____________
விடை : திருக்குறள்
8. திருக்குறள் ஊன்றிப் படிப்பவர்கள் ____________ உணர்ச்சி பெறுவார்கள்.
விடை : சுயமரியாதை
குறு வினா
1. பெரியாரின் தன் சிந்தனையால் புரட்சியை ஏற்படுத்திய துறைகள் எவை?
சமூகம், பண்பாடு, மொழி, கல்வி, பொருளாதாரம்
2. தந்தை பெரியார் எதிர்த்தவை எவை?
|
|
3. பெரியார் எந்தெந்த இதழ்களை நடத்தினார்?
குடியரசு, உண்மை, விடுதலை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
4. மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேர்வு முறையை எதிர்த்தவர் யார்?
பெரியார்
5. பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதியது எதனை? ஏன்?
- திருக்குறளை பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதினார்.
- இந்நூலில் அறிவியலில் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம்.
6. ஈ.வெ.ராவுக்குப் பெரியார் பட்டம் எப்போது கொடுக்கப்பட்டது?
13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்குக் “பெரியார்” பட்டம் கொடுக்கப்பட்டது
7. யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாருக்கு அளித்த பட்டம் யாது?
யுனெஸ்கோ நிறுவனம் 1970-ஆம் ஆண்டு தந்தை பெரியாரைத் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டிப் பட்டம் வழங்கியது.
8. பெரியார் சீரமைத்த எழுத்துக்கள் யாவை?
“ஐ” என்பதை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
9. பெரியார் விதைத்த விதைகள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிடலாம்?
- கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு சொத்துரிமை
- குடும்ப நலத் திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்திருத்தத் திருமணச் சட்டம்
10. மதம் குறித்து பெரியார் எழுப்பிய பகுத்தறிவு வினாக்கள் யாவை?
- மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மதத்தின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
- மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்கா மனிதர்களா? மதம் என்பது மனிதர்கள் ஒற்றுமைபடுத்துவதற்காகவா? பிரித்தது வைப்பதற்காகவா? எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை வைக்கிறார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…