TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 7.2 – சீவக சிந்தாமணி

7.2 சீவக சிந்தாமணி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 7.2 – சீவக சிந்தாமணி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Seevaga Sinthamani

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் திருத்தக்கத்தேவர்
சமயம் சமணம்
காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
படைப்புகள் நரிவிருத்தம், சீவகசிந்தாமணி

சொல்லும் பொருளும்

  • தெங்கு – தேங்காய்
  • இசை – புகழ்
  • வருக்கை – பலாப்பழம்
  • நெற்றி – உச்சி
  • மால்வரை – பெரியமலை
  • மடுத்து – பாய்ந்து
  • கொழுநிதி – திரண்ட நிதி
  • மருப்பு – கொம்பு
  • வெறி – மணம்
  • கழனி – வயல்
  • செறி – சிறந்த
  • இரிய – ஓட
  • அடிசில் – சோறு
  • மடிவு – சோம்பல்
  • கொடியன்னார் – மகளிர்
  • நற்றவம் – பெருந்தவம்
  • வட்டம் – எல்லை
  • வெற்றம் – வெற்றி

இலக்கணக் குறிப்பு

  • தேமாங்கனி, தண்டகல், நற்றவம் – பண்புத்தொகை
  • விளைக – வியங்கோள் வினைமுற்று
  • தேர்ந்த – பெயரச்சம்
  • இறைஞ்சி  – வினையெச்சம்
  • கொடியனால் – இடைக்குறை

பகுபத உறுப்பிலக்கணம்

1. இறைஞ்சி = இறைஞ்சு +இ

  • இறைஞ்சு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர்

  • ஓம்பு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – பலர் பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
  • மணநூல் என அழைக்கப்படுகிறது.
  • இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்டது.
  • 13 இலம்பகங்களை கொண்டது.
  • இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்
  • சமண மதத்தை சார்ந்தவர்
  • இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
  • இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
  • சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம்  என்னும் நூலை இயற்றியுள்ளார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?

  1. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  2. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  3. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
  4. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

2. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் இலக்கணக் குறிப்புத் தருக

  1. உருவகத்தொடர், வினைத்தொகை
  2. உவமைத்தாெடர், வினைத்தொகை
  3. வினைத்தொகை, பண்புத்தொகை
  4. வினைத்தொகை, உருவகத்தொடர்

விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை

குறு வினா

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது

சிறு வினா

ஏமாங்க நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

  • ஆயிரம் வகையான உணவுகள்
  • உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம்
  • மகளிர் ஒப்பனை செய்ய மணிமணிமாடம் ஆயிரம்
  • கம்மியர் ஆயிரம் பேர்
  • திருமணங்கள் ஆயிரம்

இப்படி ஆயிரம் நிகழ்வுகள் ஏமாங்க நாட்டில் குறைவின்றி நடக்கின்றன.

நெடு வினா

ஏமாங்க நாட்டு வருணணைகளை நும் ஊர் குறித்த வளங்களோடு ஒப்பிடுக

ஏமாங்க வருணணை எங்கள் ஊர் வளம்
தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய் தேனடையைக் கிழித்து பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, வாழைப்பழத்தை உதிரச்செய்தது தேங்காய்கள் வயல் ஓடைகளில் விழுந்து பூக்களை தழுவிச் செல்கிறது.
வள்ளல்களைப் போன்றது வெள்ளம். அது மலையில் இருந்து செல்வத்தை அடித்து வந்து ஊர் மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கின்றது. பூக்களையும், பழங்களையும் வெள்ளம் அடித்து வந்து ஊரினில் சேர்க்கும்.
எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அது கேட்டு வாரல் மீன்கள் ஓடுகின்றன. ஏர் மாடுகளின் சத்தம் வயல்களில் எங்கும் கேட்கும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ______________ விருத்தப்பா பாவால் ஆனது.

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. சீவக சிந்தாமணி

விடை : சீவக சிந்தாமணி

2. தொடை கீற வருக்கை போழ்ந்து – இத்தொடரில் “வருக்கை” என்பதன் பொருள் ______________

  1. பலாப்பழம்
  2. மாம்பழம்
  3. வாழைப்பழம்
  4. எலுமிச்சைபழம்

விடை : வருக்கை

3. “வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே” – இவ்வடியில் கழனி என்பதன் பொருள் ______________

  1. நீர்
  2. வயல்
  3. காற்று
  4. நெருப்பு

விடை : வயல்

4. ______________ எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி

  1. கலிப்பாவால்
  2. வஞ்சிப்பாவால்
  3. விருத்தப்பாவால்
  4. ஆசிரியப்பாவால்

விடை :  விருத்தப்பாவால்

5. நரிவிருத்தம் பாடியவர் ______________ 

  1. திருதக்கத்தேவர்
  2. இளங்கோவடிகள்
  3. சாத்தனார்
  4. நாகுத்தனார்

விடை : திருதக்கத்தேவர்

6. பாக்கு மரத்தின் உச்சியில் இருந்தது ______________ 

  1. மாம்பழம்
  2. தேனடை
  3. வாழைப்பழை
  4. தேங்காய்

விடை : தேனடை

7. மற்றநாடு வட்டமாக வைகும் – இவ்வடியில் வட்டம் என்பதன் பொருள்

  1. பெருந்தவம்
  2. சோம்பல்
  3. சுறுசுறுப்பு
  4. எல்லை

விடை : எல்லை

8. _________ தோற்றத்திற்கு கூறப்பட்ட உவமை பச்சைப்பாம்பு

  1. நெற்பயிர்
  2. கோதுமைபயிர்
  3. பருத்திபயிர்
  4. எள்பயிர்

விடை : நெற்பயிர்

9. நாட்டு வளம் இடம்பெறும் இலம்பகம் ……………….

  1. கேமசரியார் இலம்பகம்
  2. புதுமையார் இலம்பகம்
  3. நாமகள் இலம்பம்
  4. முக்தி இலம்பகம்

விடை : நாமகள் இலம்பம்

10. சீவக சிந்தாமணியில் உள்ள மொத்த இலம்பகம் ……………….

  1. 10
  2. 11
  3. 12
  4. 13

விடை : 13

பொருத்துக

1. மால்வரை அ. பாய்ந்து
2. மடுத்து ஆ. திரண்ட நிதி
3. கொழுநிதி இ. பெரிய மலை
4. மருப்பு ஈ. கொம்பு
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – ஈ

பொருத்துக

1. அடிசில் அ. சோம்பல்
2. மடிவு ஆ. சோறு
3. கொடியன்னார் இ. பெருந்தவம்
4. நறவம் ஈ. மகளிர்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி

2. பயிர்கள் முற்றியவுடன் சாய்ந்து இருப்பது எதைப் போன்றது?

பயிர்கள் முற்றியவுடன் சாய்ந்து இருப்பது நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.

3. ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எவை?

ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எருதுகள்.

4. ஏமாங்க நாட்டில் செழித்திருந்த மரங்கள் யாவை?

தென்னை, பாக்கு, பலா, மாங்கனி, வாழை

5. நிலையான பொருளைத் தேடுவோர்க்கும், நிலையில்லா பொருட்செல்வத்தைத் தேடுவோர்க்கும் உகந்த இடம் எது?

ஏமாங்க நாடு

6. சீவக சிந்தாமணி குறிப்பு வரைக

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்,
  • மணநூல் என அழைக்கப்படுகிறது.
  • 13 இலம்பகங்களை கொண்டது.
  • இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment