TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 7.1 – இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 7.1 – இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - indiya thesiya ranuvathil tamilar pangu

9th Std Tamil Text Book – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1. இந்திய தேசிய இராணுவம் ____________ இன் தலைமையில் ____________ உருவாக்கினர்.

  1. சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
  2. சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியனர்
  3. மோகன் சிங், ஜப்பானியர்
  4. மோகன் சிங், இந்தியர்

விடை : மோகன் சிங், ஜப்பானியர்

2. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்தான்” என்றார்.

காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.

  1. கூற்றும், காரணமும் சரி
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்றும், காரணமும் தவறு

விடை : கூற்றும், காரணமும் சரி

குறு வினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழர்கள் யாவர்?

  • பசும்பொன் முத்துராமலிங்கனார்
  • ஜானகி
  • இராஜமணி
  • கேப்டன் லட்சுமி
  • சிதம்பரம் லோகநாதன்

2. தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.

காரணம் –  என் தாய்நாட்டையும், தாய்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக.

3. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்ற முழுக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பு ஏற்க வந்தபோது 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் செய்யப்பட்டது.

சிறு வினா

குறிப்பு வரைக – “டோக்கியோ கேடட்ஸ்”

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ்.

2. பனியிலும், மலையிலும் எல்லைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக

இந்திய இராணுவ வீரர்களின் தியாகம்

  • நாட்டையும் தன் நாட்டு மக்களையும் காக்க தன் குடும்பம் மறந்து பணி செய்வோர் இராணுவ வீரர்கள்.
  • கடும் வெயில், கடுங்குளிர், புயல் மழை, சூறாவளி, சுனாமி, பூகம்பம் என எது வந்தாலும் தாய்நாட்டு மக்களைக் காக்கும் தகைசால் மாமனிதர்கள் இராணுவ வீரர்கள்.
  • குண்டு மழை பொழியும் போர்களத்தில் நெஞ்சம் நிமிர்த்திப் பேராடும் பண்பாளர்கள் அவர். தன்  நாட்டுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கும் தியாக வள்ளல்கள்.
  • மெழுகுவர்த்தி போல தன்னைத் தன் நாட்டிற்காக உருக்கிக் கொள்பவர்கள். அவர்கள் பணிக்கு எங்கள் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

நெடு வினா

இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை கட்டுரை வழி நிறுவுக.

முன்னுரை:-

இந்திய விடுதலைப்போரில் இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்தவர்கள் தமிழர்கள். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.

பசும்பொன் முத்துராமலிங்கனார்:-

1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார். அதனால், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் என்றால் தில்லான்.

இரண்டாம் உலகப்போர்:-

தமிழர் துணையுடன் போராடிய நேதாஜியை, ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் அடைந்து, “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்றார். அதற்கு நேதாஜி ” தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும்” என்றார்.

மகளிர்ப்படை:-

ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி. இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர். தலைசிறந்தவர்களாக ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினார். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பர லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக விளங்கினர்.

வான் படை:-

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதில் சிறந்து விளங்கியவர் கேப்டன் தாசன். இவர் இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.

முடிவுரை:-

நாட்டிற்காக உயிர் கொடுத்த முகம் தெரியாத தமிழர்களின் உணர்வைப் போற்றி வழிபடுவோம் அவர்தம் உன்னத செயல்களை உலகறிய செய்வோம்.

கற்பவை கற்றபின்

1. நீங்கள் நாட்டிற்கு உங்கள் பங்கினை அளிக்க விரும்புகிறீர்களா? இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கான தகுதி அவற்றுக்கான பணிகள் குறித்த கருத்தக்களைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக

ஆசிரியர் கண்ணா! எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்.
கண்ணன் ஐயா, நான் இராணுவ வீரர் ஆகப் போகின்றேன்
ஆசிரியர் அதற்குரிய தகுதிகள் பற்றி உனக்குத் தெரியுமா?
கண்ணன் தெரியாது ஐயா.
ஆசிரியர் சரி கூறுகின்றேன். இராணுவத்தில் சேர பல பிரிவுகள் உள்ளன சிலவற்றைக் கூறுகின்றேன்.

பொதவாக வீரராக 10ம் வகுப்பு முடித்து வயத 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும் 163 செ.மீ உயரம் இருக்க வே்ண்டும். 48கிலோ எடை இருக்க வேண்டும். இத மண்டலத்திற்கு ஏற்ப சிறிது மாறுபடும். எழுத்தர், தொழில்நுட்ப வல்லுனர், மருத்துவம் என பல பிரிவுகளில் இராணுவத்தில் வேலைக்கு சேரலாம்.

கண்ணன் நன்றி ஐயா!

2. எனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர் என்ற தலைப்பில் அவர்தம் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலகோட்டில் உருவாக்குக

9th Standard - indiya thesiya ranuvathil tamilar pangu

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இந்திய தேசிய இராணுவம் என்ற படை உருவாக்கிய போது  தலைமை ஏற்றவர் ___________

  1. நேதாஜி
  2. மோகன் சிங்
  3. கேப்டன் லட்சுமி
  4. பசும்பொன் முத்துராமலிங்கனார்

விடை : மோகன் சிங்

2. மோகன் சிங்கிற்குப் பிறகு இந்திய இராணுவத்திற்கு பொறுப்பேற்றவர் ___________

  1. மோகன் சிங்
  2. நேதாஜி
  3. கேப்டன் லட்சுமி
  4. பசும்பொன் முத்துராமலிங்கனார்

விடை : நேதாஜி

3. “டெல்லி நோக்கிச் செல்லுங்கள்” என்ற முழக்கம் எழுப்பியவர்

  1. மோகன் சிங்
  2. கேப்டன் லட்சுமி
  3. பசும்பொன் முத்துராமலிங்கனார்
  4. நேதாஜி

விடை : நேதாஜி

4. நேதாஜி இந்திய இராணுவத் தலைமையேற்ற ஆண்டு ___________

  1. 1943
  2. 1942
  3. 1941
  4. 1940

விடை : 1943

5. தமிழகத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்திற்குப் பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் என்ற பெருமைக்குரியவர் ___________

  1. மோகன் சிங்
  2. கேப்டன் லட்சுமி
  3. நேதாஜி
  4. பசும்பொன் முத்துராமலிங்கனார்

விடை : பசும்பொன் முத்துராமலிங்கனார்

6. இந்திய தேசிய இராணுவத்தில் ___________ பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

  1. டாக்டர் லட்சுமி
  2. இராஜாமணி
  3. ஜான்சிராணி
  4. வேலு நாச்சியார்

விடை : ஜான்சிராணி

7. சுதந்திர இந்தியாவில் ___________ நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர் கேப்டன் தாசன்

  1. அமெரிக்க
  2. செசல்ஸ்
  3. இங்கிலாந்து
  4. இலங்கை

விடை : செசல்ஸ்

8. தமிழ் மக்களை வைத்துப் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமர் ___________

  1. லோகநாதன்
  2. கேப்டன் தாசன்
  3. சர்ச்சில்
  4. தில்லான்

விடை : சர்ச்சில்

பொருத்துக

1. இந்திய தேசிய இராணுவ தலைவர்கள் அ, டாக்டர் லட்சுமி, ஜானகி, இராஜாமணி
2. பெண்கள் படைத்தலைவர்கள் ஆ. மோகன்சிங், நேதாஜி, தில்லான்
3. அமைச்சர்கள் இ. இராமு, அப்பதுல்காதர்
4. இராணுவ வீரர்கள் ஈ. கேப்டன் லட்சுமி, சிதம்பர லோகநாதன்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____________ அமைப்பின் தூண்களாக திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்

விடை : இந்திய தேசிய இராணுவ

2. இந்திய தேசிய இராணுவம் – தமிழர்பங்கு என்னும் நூலை எழுதியவர் _____________

விடை : மா.சு. அண்ணாமலை

3. நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் பொறப்பேற்க வந்த இடம் _____________

விடை : சிங்கப்பூர்

4. இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் _____________ தான்

விடை : தமிழர்

5. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் _____________, _____________ முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்

விடை : கேப்டன் லட்சுமி, சிதம்பரலோகநாகன்

6. _____________ பெயரில் உருவாக்கப்பட்ட பெண்கள் படையின் தலைவர் டாக்டர் லட்சுமி

விடை : ஜான்சிராணி

7. இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேயரை வென்று மூவர்ணக்கொடி இயற்றிய இடம் _____________

விடை : மணிப்பூர் பகுதியில் மொய்ரா

குறு வினா

1. ஐ.என்.ஏ (அல்லது) இந்திய தேசிய இராணுவம் – குறிப்பு வரைக

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேயப் படைகள் ஜப்பானியரிடம் சரணடைந்தன். இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர். அவ்வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள். மோகன்சிங்க என்பவர் தலைமையில் உருவாகியதே இந்திய தேசிய இராணுவம் ஆகும்.

2. தமிழர்கள் குறித்து தில்லானின் கருத்து யாது?

இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்” என்றார்.

3. ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் அடைந்து கூறிய செய்தி யாது?

தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ’ என்று சர்ச்சில் கூறினார்.

4. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் யாவர்?

நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்.

5. நேதாஜி தமிழக வீரர்களைப் பற்றி என்ன கூறியதாக பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்?

நேதாஜி தமிழக வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நேதாஜி கூறியதாகப் பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்

சிறு வினா

1. நேதாஜியின் பொன் மொழி கூறிய பொன்மொழி பற்றி எழுதுக

  • அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
  • மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.

2. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கிய மகளிர் படை குறித்து எழுதுக.

  • ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.
  • இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர்.
  • தலைசிறந்தவர்களா ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment