TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 5.5 – இடைச்சொல் – உரிச்சொல்

5.5 இடைச்சொல் – உரிச்சொல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 5.5 – இடைச்சொல் – உரிச்சொல்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - idaisol urisol

9th Std Tamil Text Book – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக.

1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.

  1. கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
  2. கடி, உறு, கூர், கழி
  3. வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
  4. இன், கூட, கிறு, அம்பு

விடை : இன், கூட, கிறு, அம்பு

2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

  1. சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
  2. இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
  3. என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
  4.  வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.

விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

  1. ஆ, இ சரி; அ தவறு
  2. அ, இ, சரி; ஆ தவறு
  3. மூன்றும் சரி
  4. மூன்றும் தவறு

விடை : மூன்றும் சரி

கூடுதல் வினாக்கள்

1. இடைச்சொற்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை?

இடைச் சொற்கள் , பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கு  இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.

2. இடைச்சொற்கள் சிலவற்றை கூறுக.

இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன்

3. தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படும் இடைச்சொற்கள் யாவை?

உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்

4. உரிச்சொற்கள் நன்னூலார் கூறுவன யாவை?

உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதா ய் வரும். உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.

கற்பவை கற்றபின்…

பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

அ) பெண்ணடிமை போக வேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.

ஆ) நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததை விட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித் தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.

பழத்தான் தான் – (தான்) இருந்ததை விட – (விட)
வீடும் நாடும் – (உம்) வசதிகள் – (கள்)
சமுதாயத்தின் – (இன்) அவர்களின் – (இன்)
பெண்களுக்கும் – (உம்) பாடசாலைக்கு – (கு)
உரிமைகளும் – (உம்) வீட்டுக்கு – (கு)
ஆடவியில், ஆற்றோரத்தில் – (இல்)

உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம், ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

1. உம் தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
2. ஓ அவனோ இவனோ இதைச் செய்தது
3. ஏ அவன் படித்தே முன்னேறினான்
4. தான் அவன் தான் பார்த்தான்
5. மட்டும் உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்
6. ஆவது என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
7. கூட ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
8. ஆ அவன் படித்தானா?
9. ஆம் தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
10. ஆகிய தேனாகிய அமுது மொழி தமிழ்

பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.

1. மணற்கேணியைப்போல் விளங்கும் நூல்தான் உறுதுணை என இருக்கிறது.

2. பெண்களைப் படிக்க வைக்காத காலத்திலும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கும்படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள் .

3. மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.

இணைத்து எழுதிப் பாருங்கள்.

அவன் தான்

உம்

மனிதன்
இயற்கை அழகு
  1. அவன் தான் மனிதன்
  2. அவனும் மனிதன்
  3. அவனே மனிதன்
  4. அவனா மனிதன்
  5. இயற்கை தான் அழகு
  6. இயற்கையும் அழகு
  7. இயற்கையே அழகு
  8. இயற்கையா அழகு
உனக்கு மட்டும்

கூட

ஆவது

தெரியுமா?
தெரியும்
  • உனக்கு மட்டும் தெரியுமா?
  • உனக்கு கூட தெரியுமா?
  • உனக்காவது தெரியுமா?
  • உனக்கு மட்டும் தெரியும்
  • உனக்குக் கூட தெரியும்
  • உனக்காவது தெரியும்
வீடு. நாடு உம்

நமேத
காற்று, வெளிச்சம் தேவை
அன்பு, அமைதி வேண்டும்
வான்மதி, பானு வாருங்கள்
  • வீடும், நாடும் நமதே
  • வீடோ, நாடோ நமதே
  • காற்றும், வெளிச்சமும் தேவை
  • காற்றொ, வெளிச்சமோ தேவை
  • அன்பும், அமைதியும் வேண்டும்
  • அன்போ, அமைதியோ வேண்டம்
  • வான்மதியும், பானுவும் வாருங்கள்
  • வான்மதியோ, பானுவோ வாருங்கள்

பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.

1. ______பெரும் பொதுக் கூட்டம் (கடி, மா)

  • மா

2. ______ விடுதும் (உறு, கடி)

  • கடி

3. ______ நுதல் (வாள் , தவ)

  • வாள்

4. ______ சிறந்தது ( சால , மழ)

  • வாள்

5. ______ மனை (கடி, தட)

  • கடி

சிந்தனை வினா

1) “தான்” என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

’தான்’ என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்

எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைபப்படுத்தும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம்.

சான்று : நிர்மலாதான் பாடினாள்

2. அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொட ரில் “ஆ” என்னும் இடைச்சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.

  • அவர்களுக்கா பரிசு தருவேன்?
  • அவர்களுக்குப் பரிசு தருவேனா?

3) செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?

  • உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
  • ஒரு சொல் பல பொருளுக்கு உரியது
  • பல சொல் ஒரு பொருளுக்கு உரிது என இடம் பெறும்

4) தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காண ப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக.

  • மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகினற் உரிச்சொற்கள்
  • மேலும்  மழ, குழு, விழுமம், செழுமை என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.

5) ’ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக

“ஆ” என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.

சான்று : அவனா பேசினான்

6. இடைச் சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க் காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.

அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?

  • வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.

ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.

  • இந்தச் சூழ்நிலையை மாற்றிதான் ஆகவேண்டும்.

இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.

  • வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாம்.

ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?

  • சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?

உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.

  • பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.

ஊ) வாளால் வெட்டினான்.

  • வாளால் தான் வெட்டினான்.

மொழியை ஆள்வோம்

ஒப்பிட்டுச் சுவைப்போம்.

பாப்பா பாட்டு Child’s Song
ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
Run about and play my sweet little Child
And idle not sweet little child;
In game and sport have many mates
And revile not any one child.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
Rise at dawn to learn your lesson,
Then sing such airs that are soothing,
To games devote the whole evening,
Get habituated thus, oh child!

மொழிபெயர்க்க.

Akbar said, “How many crows are there in this city?”

Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.

Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.

Akbar was pleased very much by Birbal’s wit

பீர்பாலின் நகைச்சவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரம் ஐநூற்று என்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார். எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரேச எனறார். இதைவிட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதை விடக் குறைவாக இருந்தால். வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தாம் என்றார் பீர்பால். பீர்பாலுடைய நகைச்சுவையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

பிழை நீக்கி எழுதுக.

1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.

  • மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்

2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்

  • நல்ல தமிழில் எழுதுவோம்

3. பவளவிழிதான் பரிசு உரியவள்

  • பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்

4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.

  • துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்

5. குழலியும் பாடத் தெரியும்.

  • குழலிக்கும் பாடத் தெரியும்

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

1. பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

  • பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

2. அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

  • அலுவலர் வந்ததும் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

3. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

  • சுடர்க்கொடி பாடியதால் மாலனும் பாடினான்

4. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.

  • பழனிமலை பெரியது; இமயமலையோ மிகப் பெரியது

5. கவலையற்ற எதிர்காலத்திறகுக் கல்வியே நிகழ் காலம்.

  • கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.

தஞ்சையில் புத்தகத் திருவிழா

9th Standard - idaisol urisol - Seithiyaga Maatri eluthuga

செப்டம்பர் 19 முதல் 28 வரை தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தில் அறிவுக் களஞ்சியமான புத்தகங்களின் சங்கமமாம் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் கால 8 மணி முதல் 6 மணி வரை அறிவுப் புதையலை அள்ளிச் செல்லலாம். சிந்தைக்குப் பெருவிருந்தாய் மாலை 6 மணிக்குப் புதிய நூல் வெளியீடும். தலை சிறந்தப் பேச்சாளர்களின் பேச்சும் இடம்பெறும்

வினாக்களுக்கு விடையளிக்க.

அண்ணாவின் வாழ்க்கையில்…

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே திறந்துகாட்டச் செய்தார்.

மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,” தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார்.

அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாக கெஞ்சினார். உடனே, அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?

மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது  அண்ணா என அந்த அலுவலர் தெரிந்து கொண்டார்

2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?

முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தைத் திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்

3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?

“ சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது.  உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.

4. பத்தியில் இடம்பெ றும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.

  • தான்  – தான் முன்னேற்ற கன்னிமாரோ நூலகேம காரணம் என்றார் பேரறிஞர் அண்ணா
  • இன் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

நேர்மை (அல்லது) துணிவு

மொழியோடு விளையாடு 

சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக

மாணவர்கள் ஆசிரியர்
கரும்பலகை புத்தகம்
அழிப்பான் வழிபாட்டுக் கூட்டம்
கல்லூரி உயர்நிலை
மடிக்கணினி சீருடை
பாடவேளை எழுதுகோல்
அறை

1. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.

2. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்

3. “மாணவர்களே! எழுதுகோலும், அழிப்பானும் கொண்டு வாருங்கள்” என்றார் ஆசிரியர்,

4. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்

5. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டு வரவில்லை

6. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழஙகப்பட்டது

அகராதியில் காண்க.

1. ஒட்பம்

  • அறிவு
  • அழகு
  • நன்மை
  • மேன்மை

2. கான்

  • காடு
  • மனம்
  • வாய்க்கால்
  • இசை
  • மணம்
  • பூ
  • வீட்டறை
  • நெசவு

3. நசை

  • ஆசை
  • குற்றம்
  • எள்ளல்
  • ஈரம்
  • அன்பு
  • ஒழுக்கம்
  • பரிகாசம்
  • விருப்பம்

4. பொருநர்

  • படைவீரன்
  • தலைவன்
  • அரசர்
  • நாடகர்
  • புகழ்வோர்

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

ஒரு கிராமத்து நதி கிழவனும் கடலும்
கருப்பு மலர்கள் தண்ணீர்தண்ணீர்
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

1. நா. காமராசனின் கவிதை நூல்

9th Standard - idaisol urisol - Padangalai inaithu Noolgalin Peyarai Thernthu edu

விடை : கருப்பு மலர்கள்

2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமி நாதனின் நாடக நூல்.

9th Standard - idaisol urisol - Padangalai inaithu Noolgalin Peyarai Thernthu edu

விடை : தண்ணீர்தண்ணீர்

3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்

9th Standard - idaisol urisol - Padangalai inaithu Noolgalin Peyarai Thernthu edu

விடை : கிழவனும் கடலும்

4. சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்

9th Standard - idaisol urisol - Padangalai inaithu Noolgalin Peyarai Thernthu edu

விடை : ஒரு கிராமத்து நதி

5. எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல்.

9th Standard - idaisol urisol - Padangalai inaithu Noolgalin Peyarai Thernthu edu

விடை : சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

9th Standard - idaisol urisol - Katchiyai Kandu Kavinura eluthuga

பெண்ணுக்கு எதற்குப் படிப்பு என்ற
மூடர் பேச்சை மிதித்து விட்டு
சரித்திரம் படைக்கும்
சாதனைப் பெண்ணாய் மாற
கல்விப்படி ஒவ்வொன்றும்
சாதனைப்படி என்னுள்ளே
தன்னம்பிக்கையுடன் நான் படித்தே
பட்டம் பெற்று நாடாள்வேன்.

கடிதம் எழுதுக.

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

அ.சங்கர லிங்கம்,
9ஆம் வகுப்பு,
கிராம கமிடடி உயர்நிலைப்பள்ளி,
வெங்கடேஸ்வரபுரம் – 627 854.

பெறுநர்

நெய்தல் பதிப்பகம்
சென்னை – 600 017

ஐயா

பொருள் – தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதி அனுப்புதல் தொடர்பாக

வணக்கம், எங்களக்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் கையடக்க அகராதி இருபது படிகள் தேவைப்படுகின்றன. நூல் மற்றும் பதிவஞ்சல் தொகையாக 900 ரூபாய் கேட்பு வரைவோலையை இத்துடன் அனுப்பியுள்ளோம். மேற்கண்ட முகவரிக்குப் பதிவஞ்சல் மூலம் அகராதியை அனுப்புமாறு கேட்டக் கொள்கிறோம். நன்றி.

 

இடம் : வெங்கடேஸ்வரபுரம்
நாள் : 20.06.2019

இப்படிக்கு
அ.சங்கரலிங்கம்

 

உறைமேல் முகவரி

பெறுநர்

நெய்தல் பதிப்பகம்
சென்னை – 600 017

நிற்க அதற்குத் தக

எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.

எவரையும் காயப்படுத்தாமல் நடந்துகொள்வது, குறைகூறாமல் பேசுவது என் பொறுப்பு.

2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.

பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு.

கலைச்சொல் அறிவோம்

  • சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
  • களர்நிலம் – Saline Soil
  • தன்னார்வலர் – Volunteer
  • சொற்றொடர் – Sentence

அறிவை விரிவு செய்

  • ஓய்ந்திருக்கலாகாது – கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி -ஆதிவள்ளியப்பன்)
  • முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
  • கல்வியில் நாடகம் – பிரளயன்
  • மலாலா – கரும்பலகை யுத்தம்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment