TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 5.2 – குடும்ப விளக்கு

5.2 குடும்ப விளக்கு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 5.2 – குடும்ப விளக்கு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - kudumbavilakku

9th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்:

  • களர்நிலம் – உவர்நிலம்
  • நவிலல் – சொல்
  • வையம் – உலகம்
  • மாக்கடல் – பெரிய கடல்
  • இயற்றுக – செய்க
  • மின்னாளை – மின்னலைப் போன்றவளை
  • மின்னாள் – ஒளிரமாட்டாள்
  • தணல் – நெருப்பு
  • தாழி – சமைக்கும் கலன்
  • அணித்து – அருகில்
  • தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
  • யாண்டும் – எப்பொழுதும்

இலக்கணக்குறிப்பு

  • மாக்கடல் – உரிச்சொல்தொடர்
  • ஆக்கல் – தொழில்பெயர்
  • பொன்னே போல் – உவம உருபு
  • மலர்க்கை, வில்வாள் – உம்மைத்தொகை
  • தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. விளைவது = விளை + வ் +அ + து

  • விளை – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை;
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

2. சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்

  • சமை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

நூல்வெளி

  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது
  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன்  பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும் நூல்
  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று குடும்ப விளக்கு
  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பொருத்துக

அ) சிறுபஞ்சமூலம் 1) காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு 2) சங்க இலக்கியம்
இ) சீவகசிந்தா மணி 3) அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை 4) தற்கால இலக்கியம்.
  1. அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
  2. அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
  3. அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
  4. அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3

விடை : அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3

குறு வினா

தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

பெண்கல்வி பெறுதலே தலைவியின் பேச்சில் வெளிப்படுகினற் பாடுபொருள் ஆகும்.

சிறு வினா

சமைப்பது தாழ்வா ? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?

உணவைச் சமைப்பவர் இன்பத்தையும் சமைப்பர்

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

பாவேந்தரின் கூற்றுப் படி சமைப்பது தாழ்வன்று

நெடு வினா

குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல் விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

  • கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.
  • இன்று கல்வி இல்லா பெண்களின் குழந்தைகளில் பலர் தீய பழக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
  • கல்வி அறிவுள்ள நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
  • இன்று கல்வி கற்ற பெண்களின் குழந்தைகளில் பலர் நல்ல பழக்கங்கள் கற்று உயர்ந்து இருக்கின்றனர்.
  • வானூர்தியைச் ஓட்டல், கடல் மற்றும் உலகினை அளத்தல் ஆகியன ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்று அன்று பாரதிதாசன் கூறியுள்ளவை இன்று நனவாகியுள்ளது.
  • சமைப்பது, வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமற்றது, அவை நமக்கும் உரியது என ஆண்கள் ஏற்றுக் கொள்ளும் எண்ணம் வர வேண்டும். அந்த நன்நாள் காண்போம் என்று பாரதிதாசன் கூறியது இன்று நனவாகிவிட்டது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதும் இன்று நடக்கின்றது.
  • வாழ்க்கை என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று. அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ள அன்போடு பரிமாறுதலில் தன் வாழ்வு நலம் பெறும். ஆனால் இன்று இவ்வாறு நடப்பதில்லை.
  • சமைக்கும் பணி பெண்களின் கடமை, அது அவர்க்கே உரியது என்ற தமிழக வழக்கத்தினை இமைப்பொழுதில் (கண்ணிமைக்கும் நேரத்தில்) நீக்க வேண்டும். இன்று ஓரளவு நீங்கிவிட்டது.

கற்பவை கற்றபின்

1. பெண்மையைப் போற்றும் கவிதை அடிகளைத் திரட்டுக

பெண்மையை தெய்வீகக் காட்சியடா?

பாரதியார்

பெண்மையை போற்றுவோம்

பாரதிதாசன்

“மலரிலே மென்மையும்
நதியிலே கருணையும்
கொடியிலே பணிவையும்
கொண்டதே பெண்மையே”

கண்ணதாசன்

பெண்ணே பேராற்றல்

சா

1. ஆணுக்கும் சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறிந்து கலந்துரையாடி தொகுக்க

கயல்விழி கந்தா! என்ன பதற்றமாக வருகிறாய்!
கந்தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. கடையில் போய் சிற்றுண்டி வாங்கி உண்டுவிட்டு வருகிறேன். அதனால் தாமதம் ஆகிவிட்டது.
கயல்விழி என் உனக்குச் சமைக்கத் தெரியாதா? கற்றுக் கொள்ளவில்லையா?
கந்தன் தெரியாது. நான் எப்படி?
கயல்விழி கந்தா! தவறு. சமைப்பது அனைவருக்கம் தான். அம்மா ஊருக்குச் செல்லும் போதும், உடல்நலக் குறைவின் போதும் கடையில் உண்டு சேராமல் போவதற்குச் சமையல் கற்றால் உனக்கும் நல்லது. அம்மாவிற்கு நல்லது.
கந்தன் அப்படியா? இனி நான் கற்றுக் கொள்கிறேன்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் ___________

  1. தமிழியக்கம்
  2. இருண்ட வீடு
  3. பிசிராந்தையர்
  4. அழகின் சிரிப்பு

விடை : பிசிராந்தையர்

2. களர்நிலத்திற்கு உவமையாக ___________-ஐ பாரதிதாசன் கூறுகிறார்

  1. கற்ற பெண்
  2. கல்வி இல்லாத பெண்
  3. கைத்தொழில் தெரியாத பெண்
  4. கைத்தொழில் தெரிந்த பெண்

விடை : கல்வி இல்லாத பெண்

3. கல்வி உடைய பெண்ணுக்கு கூறப்பட்ட உவமை ___________

  1. நெல்
  2. களர்நிலம்
  3. மின்னாள்
  4. திருந்திய கழனி

விடை : திருந்திய கழனி

4. குடும்ப விளக்கு ___________ இலக்கியம்.

  1. மறுமலர்ச்சி
  2. பல்சுவை
  3. காப்பியம்
  4. குறுங்காப்பியம்

விடை : மறுமலர்ச்சி

5. வயல் என பொருள் தரும் சொல் ___________

  1. வன்மை
  2. புரவி
  3. கழனி
  4. ஆறு

விடை : வயல்

11. கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ___________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதாசன்

விடை : பாரதிதாசன்

7. “பெரிய” என்னும் பொருள் தரும் சொல்

  1. மா
  2. வை
  3. வா
  4. ழுழு

விடை : மா

8. “கடல்” என்னும் பொருள் தரும் சொல் 

  1. வை
  2. வா
  3. வையம்
  4. ழுழு

விடை : வையம்

9. மின்னாளை என்பதன் பொருள் ____________

  1. மின்னலுக்கு இணையானவள்
  2. மின்னலைப் போன்றவள்
  3. இடிக்கு இணையானவள்
  4. இடிபோன்றவள்

விடை : மின்னலைப் போன்றவள்

10. பிசிராந்தையர் ____________ நூல்

  1. புதின
  2. நாடக
  3. கவிதை
  4. காப்பிய

விடை : நாடக

பொருத்துக

1. கழனி அ. உவர்
2. களர் ஆ. வயல்
3. மின்னாள் இ. உலகம்
4. வையம் ஈ. ஒளிரமாட்டாள்
விடை : 1 – ஆ. 2 – அ 3 -ஈ. 4 – இ

பொருத்துக

1. தணல் அ. அருகில்
2. அணித்து ஆ. சமைக்கும் கலன்
3. தாழி இ. செய்க
4. இயற்றுக ஈ. நெருப்பு
விடை : 1 – ஈ. 2 – அ, 3 -ஆ, 4 – இ

குறு வினா

1. வாழ்வு எப்போது நலம் பெறும் என்று பாதிதாசன் கூறுகிறார்?

“வாழ்க்கை“ என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று. அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில் தான் வாழ்வு நலம்பெறுகிறது.

2. இமைப்பொழுதில் (கண் இமைக்கும்) எதனை நீக்க வேண்டுமென பாரதிதாசன் கூறுகிறார்?

சமைக்கும் பணி, பெண்களின் கடமை. அது அவர்களுக்கே உரியது
என்ற தமிழக வழக்கதினை வழக்கத்தினைக் இமைப்பொழுதில் (கண் இமைக்கும்) எதனை நீக்க வேண்டுமென பாரதிதாசன் கூறுகிறார்.

3. மறுமலர்ச்சி இலக்கியங்கள் எ்பது யாவை?

புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்.

4. நானிலம் – தொகைச்சொற்களை விரித்து எழுதுக

குறிஞ்சி, முல்லை, முருதம், நெய்தல்

5. கல்வியறிவு இல்லாத பெண்களை பற்றி பாவேந்தர் கூறுவதென்ன?

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.

6. பாரதிதாசனின் படைப்புகள் யாவை?

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்

7. பாரதிதாசன் – சிறு குறிப்பு வரைக

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment