TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 4.5 – வல்லினம் மிகா இடங்கள்

4.5 வல்லினம் மிகா இடங்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 4.5 – வல்லினம் மிகா இடங்கள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - vallinam miga idangal

9th Std Tamil Text Book – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

சிறு வினா

தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு.

வல்லினம் மிகா இடங்கள்

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

சான்று : அது செய், இது காண்

2. எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

சான்று : எது கண்டாய்? எவை தவறுகள்?

3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

சான்று : குதிரை தாண்டியது, கிளி பேசும்.

4. மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.

சான்று : அண்ணனோடு போ, எனது சட்டை.

5. விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.

சான்று : தந்தையே பாருங்கள், மகளே தா.

6. பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

சான்று : வந்த சிரிப்பு, பார்த்த பையன்

7. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

சான்று : நாடு கண்டான், கூடு கட்டு

8. படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

சான்று : வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார்.

9. வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

சான்று : வாழ்க தமிழ், வருக தலைவா!

10. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

சான்று : குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்

கற்பவை கற்றபின்…

வல்லினம் வருமா?

அ) தோழி __ கூற்று

விடை : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.

ஆ) பெரிய __தம்பி

விடை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.

இ) சிறிய __ பறவை

விடை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.

ஈ) பழகு __தமிழ்

விடை : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

உ) இது __கேள்

விடை :  இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.

ஊ) எலி __ கடிக்கும்

விடை : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.

எ) ஓடிய __ குதிரை

விடை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.

ஏ) தரும்படி __ சொன்னார்

விடை : “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

ஐ) வாழ்க __ தலைவர்

விடை : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

ஒ) கார் __ காலம்

விடை : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.

வல்லினம் இடலாமா?

அ) வாழ்த்து __கள்

விடை : “கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.

ஆ) எழுத்து__ கள்

விடை : “கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.

இ) திருநிறை __ செல்வன்

விடை : “திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.

ஈ) திருவளர் __ செல்வி

விடை : “வளர்செல்வி” வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.

எது சரி? எது தவறு? காரணம் கூறுக.

அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சரி)

காரணம் :-

“அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து” வல்லினம் இடுதல் கூடாது. “இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்” வல்லினம் மிகும்.

எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே

ஆ) அத்தனைச் சிறிய (தவறு)

அத்தனை சிறிய என்பதுதான் சரி

காரணம் :-

“அத்தனை என்ற சொல்லின் பின்” வல்லினம் இடுதல் கூடாது.

இ) ஆத்திச்சூடி (சரி)

காரணம் :-

“அத்தி – அகர ஈறு, இகர ஈறு புணரும் போது” வல்லினம் மிகும்.

ஈ) எடுத்துக்காட்டுகள் (சரி)

காரணம் :-

“வன்தொடர் குற்றியலுகரத்தில்” பின் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.

உ) கீழ்பக்கம் (தவறு)

கீழ்ப்பக்கம் என்பது தான் சரி

காரணம் :- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.

ஊ) சான்றோர் பேரவை (சரி)

காரணம் :-

“நிலை மொழியில் உயர்திணை வரும்போது” வல்லினம் இடுதல் கூடாது.

ஒ) சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)

காரணம் :-

“இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.

ஓ) தயிர்ச்சோறு  (சரி)

காரணம் :-

“இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.

கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.

அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்)

வங்கிக்கடன்

காரணம் :-

“இகர ஈற்றில்” வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)

ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) – 

பழங்களைப் பறிக்காதீர்கள்

காரணம் :-

“ஐ” என்னும் “இரணடாம் வேற்றுமை உருபபு வெளிப்படும் தொடர்” அதனால் வல்லினம் மிகும்.

இ) திட்ட குழு (வல்லினம் மிகாது)

காரணம் :-

“பெயரச்சத்தில்” வல்லினம் மிகாது.

ஈ) அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது)

காரணம் :-

ஆணை பிற்ப்பித்தது என்பது “இரண்டாம் வேற்றுமை தொகை” எனவே வல்லினம் மிகாது

உ) மருந்து கடை (வல்லினம் மிகும்)

மருந்துக்கடை

காரணம்:-

  • “மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும்” வல்லினம் மிகும்.
  • “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
  • குறிப்பு:- “மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால்” வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்

ஊ) வேலையில்லா பட்டதாரி (வல்லினம் மிகும்) –

வேலையில்லாப் பட்டதாரி

காரணம்:-

“ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்தில்” வல்லினம் மிகும்

எ) சிறப்பு பரிசு (வல்லினம் மிகும்)

சிறப்புப்பரிசு

காரணம் :-

“வன்தொடர் குற்றியலுகரத்தில்” வல்லினம் மிகும்

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க

யில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம்
மணிபல்லவத் தீவிற்குப் பறந்து சென்றோம்
குயில்மொழியாம் கண்ணகியை அழைத்துச் செல்லக்
குன்றுக்கு வானவூர்தி வந்த தென்றே
உயில்போன்று நம்முன்னோர் எழுதி வைத்த
உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தைப்
பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம்
பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம்!

பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்

நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரை யின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம்.

குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம்.

மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. ( ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)

சொற்கள் தமிழாக்கம்
ரொம்ப வீக்கு நிரம்ப சபலம்
ஆதார ருசிகள் அடிப்படைச் சுவைகள்
காபி குழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர்
ஸேவரி காரசுவையுண்டி
டேஸ்ட் சுவை
ருசிகள் சுவைகள்
சராசரி ஏறத்தாழ
அலட்டல் அளத்தல்
எக்ஸ்பிரஷன் விளைவுகள்
வாசனை நறுமணம்
பாதாம் அல்வா பாதாம இன்களி
ஐஸ்க்ரீம் பனிக்குழைவு
ரசிக்க களிக்க
ஜில்லென்று குளிர்ச்சி என்று
கற்பூர வாசனை சூடம் நறுமணம்
பெப்பர்மிண்ட் வாசனை புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள்
மஸ்க் அரபுசேக் செண்ட் ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம்
ஈத்தர் தீப்பற்றக் கூடிய பொருள்
பெட்ரோல் வாசனை கலெநல் (கன்னெய்)
அமில வாசனை காடிப்புளியம்

கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே’. ‘ஏன்? என்னாச்சு? ’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.

‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி. ’ இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, ‘ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்’ என்றது உற்சாகமாக.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது– ‘உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித் தரும். ’

விடை 

(கடற்கரையோரம் அலையிலிருந்து மீண்டு வந்தன இரண்டு சிப்பிகள்)

சிப்பி 1 வலி தாங்க முடியவில்லையே? என்ன செய்வது என்று தெரியவில்லையே
சிப்பி 2 ஏன்? என்ன ஆச்சு; நேற்ற நன்றாகத் தானே இருந்தாய்;  இன்றைக்கு என்ன ஆனது?
சிப்பி 1 என் வயிற்றுக்குள் ஏதோ கனமான உருண்டை பந்து உருளுவது போல இருக்கிறது. அதனால் தாங்க முடியாத வலி….
சிப்பி 2 எனக்கு எந்த வலியும் இல்லை! நல்ல வேளை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

(அடுத்த அலையிலிருந்து கரையில் மீண்ட நின்றது ஒரு நண்டு)

நண்டு (2வது சிப்பியிடம்) அந்த சிப்பி வலியால் துடிக்கிறது. உனக்கும் எந்த வலியும் இல்லை, “நன்றாக இருக்கிறேன்” என்ற சொல்கிறாய்? வலியை தாங்க விருப்பமில்லை என்கிறாய். வலியைத் தாங்கத் தயராக இல்லை என்கிறாய்? அப்படி என்றால் நீ வெறமையாகக் கிடக்க வேண்டியது தான்.
சிப்பி 2 ஏன் வலி வந்தால் என்னவாகும்? எனக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.
நண்டு அந்த நண்டுக்கு வலி சிரமப்படுத்தும். ஆனால் சில நாள்களில் அதன் வயிற்றிலிருந்து ஒரு அழகான முத்தாக வெளிவரும். அந்த முத்து எல்லோருக்கும் பெருமை தேடி தரும்.

செய்து கற்க.

1) செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள ஒரு வாரத்திற்குரிய அறிவியல் செய்திகளைப் படித்துக் குறிப்பெடுக்க.

நாள் : 14.10.2022
வெள்ளிக்கிழமை

தினமணி

சமூகப் பொருளாதார வளர்சிக்கான திட்டங்கள் குறித்து புதிய செயலி உருவாக்கி திருநெல்வேலி மாணவர்களுக்கு முதல்பரிசு.

சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு செல்வதற்கான புதிய செயலி மற்றும் இணைய முகவரி உருவாக்கி இருக்கின்றனர் மாணவர்கள்.

நாள் : 14.10.2022
வெள்ளிக்கிழமை

தி இந்து
(மம்மி பூனை)

எகிப்தில் பூனை கடவுளின் ஒரு வடிவம். அரசர் குடும்பத்தைப் போலவே பூனைகளையும் பாடம் பண்ணிக் காத்து வந்தார். பிரமிடுகளிலுள்ள சுவற்றில் புனிதப் பூனைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது பற்றி பிரபல சூழலியல் எழுத்தாளர் சு. தியேடர் பாஸ்கரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

நாள் : 14.10.2022
வெள்ளிக்கிழமை

தினமணி

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் I-ஐ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம். செய்றைகைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்து அதன் தலைவர் சிவன் கூறினார்.

(இது போன்று, அன்றாடச் செய்தித்தாள்களில் வெளியாகும் அறிவியல் செய்திகளை தொடர்ந்து படித்துக் குறிப்பெடுத்துக் கொள்க)

2) அங்காடியில் வாங்கிய உணவுப் பொருளின் உருவாக்க நாள், கெடுநாள், உறையில் அச்சடிக்கப்பட்ட உணவுப்பொருளின் ஆற்றல், குறியீட்டுப் பட்டை (Barcode) ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டு உணவுப் பொருளின் உண்மைத்தன்மையை எவ்வாறு அறிவது?

நாம் அங்காடிக்கு சென்று, உணவுப்பொருள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது அதன் உறைகளிலோ அல்லது மேல் அட்டைப் பெட்டியிலோ குறியீட்டுப்பட்டை (Barcode) அமைந்திருக்கும். அதன் உண்மைத் தன்மையை ஆராயும் முறை, குறியீட்டு பட்டை இடம் பெற்றிருக்கும் பகுதியை கணினியுடன் கூடிய ஒளிக்கதிர் மூலம் வருடும் போது (Scannin) அப்பொருளின்

  • எடை
  • விலை
  • உற்பத்தி செய்த இடம்
  • நாள்
  • எந்த நாள் வரை பயன்படுத்தலாம் (முடிவு நாள்0
  • அப்பொருளில் அடங்கியிருக்கும் பிற பொருள்களின் அளவு, தன்மை, உற்பத்தி உரிமம் போன்ற அனைத்து விபரங்களும் திரையில் தெரியவரும். இம்முறையில் தான் ஒரு பொருளை வாங்கும்பொழுது ஆராய்ந்து வாங்குதல்  வேண்டும்.

நயம் பாராட்டுக.

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!

– பாரதிதாசன்

மைய கருத்து

கடலில் இருந்து வரும் சிங்கம் போல வருகின்றாய். வானத்து கொதிப் பிழம்பே! மாணிக்க மலையே! தங்கத் தட்டே! பெருவிளக்கே! கோடிக் கைகளை ஊன்றுகின்றாய்! வானத்த சுடர் கைகளை நீட்டகின்றாய்! காடு, மலை, இல்லம், பொய்கை, ஆறு என அனைத்திலும் உன் ஒளி கதிரவனே!

மோனை நயம்

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • பொங்கி – புதுப்பிடர்
  • ங்காத – மாணிக்க
  • ங்கத்தின் – களினயில்
  • டலிலே – திர்கைகள்

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • பொங்கி – சிங்கமே
  • டைப்படு – அங்கநின்

சுவை நயம்

இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றள்ளது

சந்த நயம்

நாட்டுப் பறச் சிந்து இராகத்தில் இப்பாடலைப் பாடலாம்

அணி நயம்

இப்பாடலில் சூரியனைத் தங்கத்தட்டு, மாணிக்கக் குன்ற என்று உருவகப்படுத்தவதால் உருவக அணி பயின்று வந்துள்ளது.

மொழியோடு விளையாடு

குழுவில் விளையாடுக

  • நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரிந்து கொள்க.
  • முதல் மாணவர் ஒரு சொல்லைத் தொடங்குக.
  • அதனோடு தொடர்புடைய ஒரு சொல்லை இரண்டாம் மாணவர் கூறுக.
  • இப்படியே நான்கு மாணவர்களும் கூறிய சொற்களைக் கொண்டு ஒரு தொடர் அமைக்க.

எ.கா.

மாணவர் 1 : கணினி மாணவர் 2 : அறிவியல்
மாணவர் 3 : தமிழ் மாணவர் 4 : மொழி

சொல்லப்பட்ட சொற்கள்: கணினி, அறிவியல், தமிழ், மொழி

தொடர்: அறிவியல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துத் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது.

அகராதியில் காண்க.

1. இமிழ்தல்

  • இனிதாதல்
  • ஒலித்தல்
  • கக்குதல்

2. இசைவு

  • இணக்கம்
  • சம்மதி
  • பொருத்து
  • தகுதி
  • ஏற்றது
  • உடன்பாடு
  • ஓட்டம்

3. துவனம்

அக்னி

நெருப்பு

4. சபலை

  • இலக்குமி
  • திப்பிலி
  • நா
  • மின்னல்
  • வேசி

5. துகலம்

  • பங்கு

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

விலங்கு எழுதி அகல் கால் அலை

1. எண்ணெய் ஊற்றி …………… விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ……………

விடை : அகல்

2. எனக்கு ……………. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் ………………. ஐ வை.

விடை : கால்

3. கைப்பொருளைக் கடல் …………யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி ………..ந்தால் கிடைக்குமா?

விடை : அலை

4. வீட்டு …………….. ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து ……………. உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.

விடை : விலங்கு

5. எழுத்தாணி கொண்டு ………….ய தமிழை, ஏவுகணையில் ………….. எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

விடை : எழுதி

ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

குவிந்து – குவித்து
பணிந்து – பணித்து
சேர்ந்து – சேர்த்து
மாறு – மாற்று
பொருந்து – பொருத்து

1. விரிந்தது – விரித்தது

  • மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.

2. குவிந்து – குவித்து

  • காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை குவித்து வைத்தோம்

3. சேர்ந்து – சேர்த்து

  • காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்

4. பணிந்து – பணித்து

  • தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்

5. பொருந்து – பொருத்து

  • மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்

6. மாறு – மாற்று

  • கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்

காட்சியைக் கண்டு கவினுறக் கருத்தளிக்க.

9th Standard - vallinam miga idangal - Katchiyai Kandu Kavinuru eluthuga

நடைபயிற்சி செய்ய
செல்லப் பிராணியுடன்
சென்ற காலம் போய்
இயந்திர மனிதன்
நடைபெயர்ச்சி செய்ய
இயந்திர மனிதனுக்கு
செல்லப் பிராணி ஆனாள் மானிடா!

நிற்க அதற்குத்தக…

என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது

  1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
  2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
  3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
  4. ………………………………………………………………………………………………………………………………………………………………………..
  5. ………………………………………………………………………………………………………………………………………………………………………..
  6. ………………………………………………………………………………………………………………………………………………………………………..

கலைச்சொல் அறிவோம்

  • ஏவு ஊர்தி – Launch Vehicle
  • ஏவுகணை – Missile
  • கடல்மைல் – Nautical Mile
  • பதிவிறக்கம் – Download
  • மின்னணுக் கருவிகள் – Electronic devices
  • காணொலிக் கூட்டம் – Video Conference
  • பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment