4.4 விண்ணையும் சாடுவோம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 4.4 – விண்ணையும் சாடுவோம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.
- நேவிக், சித்தாரா
- நேவிக், வானூர்தி
- வானூர்தி, சித்தாரா
- சித்தாரா, நேவிக்
விடை : சித்தாரா, நேவிக்
குறு வினா
செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலிையப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?
- சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.
- வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கலாம்.
- கல்லைத் தூக்கி வீசும் போகு, அது விழும் திசை, கோணம், நேரம், அழுத்தம் ஆகியவற்றை தெரிவிப்பது சித்தாராவின் பணி எனலாம்.
சிறு வினா
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?
- ஆண்டு விவசாயம் மூலம் விளைச்சலைக் கண்டுபிடித்தல், நிலத்திற்கு ஏற்ற நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டறிதல்.
- கடலில் மீனவர்களுக்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைச் சொல்கின்றது.
- திறன்பேசி, தானியக்கப் பண இயந்திரம், அட்டைப் பயன்படுத்ம் இயந்திரம் ஆகியவற்றிகுச் செயற்கைக்கோள் பயன்படுகிறது.
நெடு வினா
இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க
இந்திய விண்வெளித்துறை
முன்னுரை:-
இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.
இஸ்ரோ:-
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,
- குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.
- இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
சாதனைகள்:-
- 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்
- 1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.
- சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.
- நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.
இஸ்ரோ:-
நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு
கற்பவை கற்றபின்
1. பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்திகளைத் திரட்டி விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ சார்பில் பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
தகவல் தொடர்புக்கு பயன்படும் ‘ஜசாட் 6 ஏ’ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மாலை, 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி., ‘எப் 8’ என்ற, ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஆறாவது ‘கிரயோஜெனிக் இன்ஜின்’ உதவியுடன் விண்ணில் செலத்தப்பட்ட ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோள் ஏவப்பட்ட, 17.50 நிமிடங்களில், பூமியில் இருந்து 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது செலுத்தப்பட்ட ராக்கெட். ஜி.எஸ்.எல்.வி ரகத்தில் 12வது ராக்கெட் ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் இதில் மொபைல் போன் தகவல் தொடர்புக்குப் பயன்படும் சக்தி வாய்ந்த ‘எஸ் மற்றும் சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன
2) வகுப்புத் தோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் கற்பனையாக நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.
நேர்காண்பவர் | அறிவுடையார் எல்லாம் உடையர் என்பது வள்ளுவன் வாக்கு. ஆம் பேரறிவுடைய அறிவியல் அறிஞரை இன்று நாம் நேர்காணல் செய்கின்றோம் ஐயா! வணக்கம்! |
அறிவியலறிஞர் | வணக்கம். அன்பரே! என்னை நேர்காணல் செய்ய வந்தமைக்கு நன்றி. |
நேர்காண்பவர் | ஐயா! தாங்கள் கண்டுபிடித்த புதிய கருவி பற்றிக் கூறுங்கள். |
அறிவியலறிஞர் | நான் கண்டுபிடித்த புதிய கருவி வாகனங்களை விபத்துக்கு உள்ளாகாமல் காப்பாற்றும் கருவி. |
நேர்காண்பவர் | அதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள் |
அறிவியலறிஞர் | சிப் போன்ற சிறு கருவி இது. இதனை வண்டிகளில் பொருத்தினால் இதன் காந்த அலைகள் மூலம் எதிர் வரும் வண்டி மோதுகின்ற போது, மோதாமல் விலக்கி விடும். |
நேர்காண்பவர் | நன்றி ஐயா! |
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. இந்திய வானியல் அறிவியல் துறையில் பங்கு ஆற்றிய தமிழர்கள் யார்?
- அப்துல் கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- வளர்மதி
- சிவன்
2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் யார்?
சிவன்
3. ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என போற்றப்படுபவர் யார்?
ஏ.பி.ஜே. அப்துகலாம்
4. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்?
வளர்மதி
5. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
6. அப்துல்கலாம் பற்றிய குறிப்பு வரைக
- இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்.
- தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்.
- ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார் .
- இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர்.
- இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. வளர்மதி பற்றிய குறிப்பு வரைக
- அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
- 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
- இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.
8. மயில்சாமி அண்ணாதுரை பற்றிய குறிப்பு வரைக
- பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
- 11ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்.
- இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்.
- 1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார்.
- நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
- சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார்.
- சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- தமது அறிவியல் அனுபவங்களை, கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…