TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 4.1 – இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 4.1 – இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - iyanthirangalum inaiyavali payanpadum

9th Std Tamil Text Book – Download

பாட நூல் மதிப்பீட்டு வினாக்கள்

பலவுள் தெரிக

1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்

அ. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

ஆ. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

  1. அ, ஆ ஆகியன சரி; இ தவறு
  2. அ, இ ஆகியன சரி; ஆ தவறு
  3. அ தவறு; ஆ, இ ஆகியன சரி
  4. மூன்றும் சரி

விடை : அ, இ ஆகியன சரி; ஆ தவறு

2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

  1. தேசியத் திறனாய்வுத் தேர்வு
  2. ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  3. தேசியத் திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
  4. மூன்றும் சரி

விடை : ஊரகத் திறனாய்வுத் தேர்வு

குறு வினா

இணைய வழியில் இயங்கும் மின்னனு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

  • தொலைநகல் இயந்திரம்
  • தானியக்கப் பண இயந்திரம்
  • அட்டைப் பயன்படுத்தும் இயந்திரம்
  • திறனட்டைக் கருவி
  • ஆளறி சோதனைக் கருவி

சிறு வினா

பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக

வகுப்பு கல்வி உதவித் தொகை தேர்வு
10-ம் வகுப்பு மாணவர்கள் தேசியத்திறனாய்வுத் தேர்வு (NTSE)
8-ம் வகுப்பு மாணவர்கள் தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
9-ம் வகுப்பு கிராமப் பள்ளி மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)

இத்தேர்வுகளை இணையம் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம்

  • 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள், அவர்கள் பள்ளியிலேயே அரசு வேலை வாய்ப்பகப் பதிவினைச் செய்யலாம்
  • விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி பெற்றவர்களின் விவரங்கள் இணையம் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

நெடு வினா

அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-

  • கையில் பணம் இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிக பரிமாற்றங்களுக்கும் இந்தக் கருவி பயன்படுகிறது.
  • இந்த இயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை இருக்கும் பகுதியைத் தேய்க்கும் போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத் தொடர்பின் மூலம் வங்கி கணினிக்கு செல்கிறது.
  • கணினியால் அட்டை ஆராயப்பட்டு கடவுச்சொல் சரிபார்க்கப்பட்டு பண பரிவர்த்தனைக்கு வங்கி ஒப்புதல் அளிக்கின்றது.

திறன் அட்டைக் கருவி:-

  • தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.
  • குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
  • நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.
  • அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தமிழகத்தில் குடும்ப அட்டை ____________ அட்டையாக மாற்றப்பட்டுள்ளது.

  1. ஆதார்
  2. திறன்
  3. பான்
  4. கடன்

விடை : திறன்

2. கடிதப் போக்குவரத்து குறையவும் தந்திப் பயன்பாடு விடைபெறவும் காரணம்

  1. மின்னஞ்சல்
  2. தொலைநகர்
  3. தூதஞ்சல்
  4. எதுவுமில்லை

விடை : மின்னஞ்சல்

3. “சீமோகிராஃபி” என்பதன் பொருள் ____________

  1. ஈர எழுத்து முறை
  2. வண்ண எழுத்து முறை
  3. உலர் எழுத்து முறை
  4. எதுவுமில்லை

விடை : உலர் எழுத்து முறை

4. செஸ்டர்ன் கால்சன் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்த ஆண்டு ____________

  1. 1934
  2. 1935
  3. 1937
  4. 1936

விடை : 1936

5. பான்டெலி கிராஃப் என்ற தொலைநகல் கருவியை கண்டுபிடித்தவர் ____________

  1. மைக்கேல் ஆல்ட்ரிச்
  2. ஜான் செப்பட்டு பாரன்
  3. ஜியோவான்னி காசில்லி
  4. செஸ்டர்ன் கால்சன்

விடை : ஜியோவான்னி காசில்லி

6. இங்கிலாந்து பொறியாளர் ____________

  1. மைக்கேல் ஆல்ட்ரிச்
  2. ஜான் செப்பட்டு பாரன்
  3. ஜியோவான்னி காசில்லி
  4. செஸ்டர்ன் கால்சன்

விடை : ஜியோவான்னி காசில்லி

7. தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு ____________

  1. 1965
  2. 1865
  3. 1975
  4. 1875

விடை : 1865

8. கையில் பணம் இல்லாமல் கடைக்கு சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிக பரிமாற்றங்களுக்கும் பயன்டும் கருவி ____________

  1. திறன் அட்டை
  2. தானியங்கிப் பண இயந்திரம்
  3. அட்டை தேயப்பி இயந்திரம்
  4. ஆதார்

விடை : அட்டை தேயப்பி இயந்திரம்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. அறிவியல் முன்னேற்றமே, மனிதனின் ____________ குறையக் காரணம் ஆகும்.

விடை : பயண நேரம்

2. கிரேக்க மொழியில் ____________ என்றால் உலர் எழுத்துமுறை என்று பொருள்.

விடை : சீரோகிராஃபி

3. கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பயன்படும் கருவி ____________

விடை : தொலைநகல் இயந்திரம்

4. நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநர் ____________

விடை : செஸ்டர் காரல்சன்

5. ஜியோவான்னி காசில்வி வடிவமைத்த தொலைநகல் கருவி ____________

விடை : பான்டெலிகிராஃப்

6. ஹாங்க் மாக்னஸ்கி கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த ஆண்டு ___________

விடை : 1985

7. கரும்பு முதல் கணினி வரை ___________ வழியில் விற்கப்படுகின்றது

விடை : இணையம்

8. 1865-ல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்குத் …………………. தொடங்கப்பட்டது.

விடை :  தொலைநகல் சேவை

குறு வினா

1. ஆளறி சோதனைக் கருவியின் பயனைப் பற்றி கூறு

அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவுக்காகவும் இக்கருவி
பயன்படுகி்றது.

2. கடிதப்போக்குவரத்து குறையவும் தந்திப்பயன்பாடு விடைபெறவும் காரணம் யாது?

  • மின்னஞ்சல் மூலமாக கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளது.
  • குறுஞ்செய்தி வருகைக்குபின் தந்திப் பயன்பாடு விடை பெற்றது.

3. தொலைநகல் இயந்திரத்தின் பயன் யாது?

தொலைநகல் இயந்திரம் கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பயன்படுகிறது.

4. இன்று வாழ்க்கை எதில் உருள்கின்றது?

வங்கிகள் தரும் அட்டைகளில் இன்று வாழ்க்கை உருள்கின்றது.

5. கிரேக்க மொழியில் சீமோகிராஃபி என்பதன் பொருள் யாது?

சீமோகிராஃபி என்பதன் பொருள் – உலர் எழுத்து முறை

6. ஒளிப்படி இயந்திரம் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது?

1959 – செஸ்டர் கார்ல்சன்

7. மனிதனின் பயண நேரம் குறையக் காரணம் யாது?

அறிவியல் முன்னேற்றமே மனிதனின் பயண நேரம் குறையக் காரணம் ஆகும்.

8. தொலைநகல் இயந்திரத்தின் பயன் யாது?

கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பயன்படுகிறது.

9. தொலைநகல் சேவை எப்போது எங்கு தொடங்கப்பட்டது?

1865-ல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்திற்கு தொடங்கப்பட்டது.

10. அட்டைத்தேப்பி இயந்திரத்தின் வேறு பெயர்கள் எவை?

கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி

11. திறனட்டையில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் யாவை?

ஆதார் எண், அலைபேசி எண், முகவரி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment