TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 2.4 – புயலிலே ஒரு தோணி

2.4 புயலிலே ஒரு தோணி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 2.4 – புயலிலே ஒரு தோணி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Puyalae oru thoni

10th Std Tamil Text Book – Download

பாட நூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்

  • தேனடையிலிருந்து விழும் தேன் துளியைப் போல மணித்துளிகளுக்கு ஒரு முறை நீர் “சொட் சொட்” என விழுந்தது.
  • விரும்பத்தக்க தென்றலைப் போலவும் மயிலிறகின் வருடல் போலவும் மெல்லிய குளிர் உடலில் ஓடும்.
  • நீர் உள்ள தடாகத்திலே பல வகையான மீன்களும், தவளைகளும் தாவிக்குதிக்கும் போது எற்படும் ஓசையை ஒத்த “சளப் தளப்” என்ற சத்தத்துடன் தேங்கி கிடந்த நீர்க் குட்டையில் குழந்தைகள் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
  • அமைதியான நீரோட்டம் கொண்ட நதியானது இழுத்து வரும் சிறுசிறு கட்டை மற்றும் இதர பொருட்கள் போல குழந்தைகள் ஓடும் நீரில் காகிதக் கப்பல்களை விட்டு மகிழ்ந்தனர்.


நெடு வினா

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

குறிப்புச்சட்டம்
  • முன்னுரை
  • புயல் வருணணை
  • அடுக்குத்தொடர்
  • ஒலிக்குறிப்பு
  • முடிவுரை

முன்னுரை:-

மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் “புயலில் ஒரு தோணி” என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணணை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.

புயல் வருணணை:-

கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்குமானது. இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்தன. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக் குதித்தது. வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை. கடல் வெறிக் கூத்தாட்டத்தால் தொங்கான் மூழ்கி சிப்பங்கள் கடலில் நீந்துகின்றன. வானம், கடல், காற்று, மழை ஒன்று சேர்ந்து கூக்குரலிட்டது. வானம் பிளந்து நெருப்பை கக்கியது.

அடுக்குத்தொடர்:-

தொங்கான் நடுங்கித் தாவி தாவி குதிகுதித்தது. பிறகு தொங்கான் குதித்து விழுந்தது நொறுநொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.

ஒலிக்குறிப்பு:-

தொங்கான் தாவி விழுந்தது. சுழல்கின்றது. கடலில் சிலுசிலு மரமரப்பு ஙொய்க் புய்வ், ஙொய்க் புய்வ் என இடி முழக்கம் செய்ய சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. பகல் இரவாகி உப்புக்காற்று உடலை வருடியது.

முடிவுரை:-

புயலுக்கப் பின்னால்  ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்தநாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். பிலவானிலிருந்து சும்தா வரை புயல் இப்படிப் பயமுறுத்தியது. இத்தகைய வருணனையோடு புயலில் தோணி படும்பாட்டை அழகாய் விவரிக்கின்றார் பா.சிங்காரம்

கற்பவை கற்றபின்

1. கடலில் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்து அடுக்குத் தொடர்களும் வருணனைகளும் எவ்வாறெல்லாம் பயன்பட்டுள்ளன என்பது குறித்து வகுப்பில்  பேசுக

  • புயிலின் சீற்றத்தினால் சிக்கித் தவித்தவர்கள் இருள் நீங்கி சூரிய வெளிச்சத்தைக் கண்டதும் ‘சூரியன் சூரியன் சூரியன்’ எனச் சற்று பதற்றம் நீங்க கூறினர்.
  • புயலில் சிக்கி ஐந்தாம் நாள் கரையைக் கண்டபோது “கரை கரை” எனச் சத்தமிட்டனர். மேற்கண்ட அடுக்குத் தொடர்கள் பதற்றத்தின் மத்தியில் காக்கப்படுவோம் என்றும் நம்பிக்கையில் கூறியதாகும்.
  • எண்ணெய் பூசியவைப் போல மொழுமொழுவென நெளிந்த அலைகள் என்ற வருணனை அலையின் தன்மையை எடுத்தக்காட்டுகிறது.
  • வானைப் பிளந்த பின்னல் கீற்றுக்ள், வானம் உடைந்து வெள்ளம் கொட்டியது என்ற வருணனைகள் மின்னிலின் அகோர ஒளி வீச்சையும், மழைப்பொழிவின் அளவு மற்றும் வேகத்தைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.
  • தலைக்கு மேல் வெள்ளம்; வானுடன் கடல் கலந்து வளியுடன் இணைந்து விட்டது என்னும் தொடர் மூலம் புயலில் தோணியின் நிலை என்னவாயிருக்குமு் என்பதை உணர்த்துகிறது.

2. நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடம் குறித்து விவரித்து எழுதுக

(மழை, வெள்ளம், புயல், வறட்சி)

மழை

தவறிப் பெய்த பருவமழையால் அறுவடைக்குத் தயாராய் இருந்த பயிர்கள் நீரில் நனைந்து நாசம் அடைந்தன. போக்குவரத்து பாதிப்புகளால் மக்கள் பல இன்னலுக்கு ஆளாயினர். மழைப் பொழிவின் காரணமாக மக்கள் பலர் வெளியே செல்ல முடியாததாலும், மின்சாரம் தடை செய்யப்ட்டதாலும் பல தொழில்கள் முடங்கின.

புயல்

சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த கஜா புயல், மேற்கு தென் மேற்குத் திசையில் நகர்ந்து கடலூர் பாம்பன் இடையே  நாகைக்கு அருகே மணிக்கு 111 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தத. புயலானது கரையைக் கடந்தபோதிலும் டெல்டா மற்றும் கரையோர பகுதி ம்ககளின் கவலை இன்னும் கடந்து போகவில்லை. ஏனெனனில் விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரமே அழந்தது.

வெள்ளம்

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளமானது அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டது. தென்மேற்கு பருவக்காற்றினால் ஏற்பட்ட மழைப்பொழிவே இதற்குக் காரணம். வெள்ளத்தினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதில் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு உட்பட 10 மாவட்டங்கள் பெருதும் பாதிக்கப்பட்டன.. மலைப்பாதையில் எற்பட்ட மண் சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வறட்சி

இந்திய வானிலைத் துறையின் கூற்றுப்படி 10 சதவீதத்டதிற்குறம் குறைவான மழைப்பொழிவு இருக்குமேயானால் அந்நாட்டை வறட்சியால் பாதிக்கபட்ட நாடு எனலாம். பற்றாக்குறையான மழைப் பொழிவே வறட்சிக்குக் காரணம் பருவகாலம் பொய்த்துப் போவதால் உருவாகும்.

மழைப் பொழிவின்மை, பருவகால மாறுபாடுகள், காடுகள் அழிவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிக அளவு ஆவியாதல், மோசமான நில மேலாண்மை, அதீத மேய்ச்சல், மண் அரிப்பு ஆகியன வறட்சி ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பா.சிங்காரம் எழுதிய புதினம் ________

  1. தோணி
  2. கடல்
  3. ஆற்றங்கரை
  4. புயலிலே ஒரு தோணி

விடை : புயலிலே ஒரு தோணி

2. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு ________

  1. 2000
  2. 1999
  3. 1998
  4. 1997

விடை : 2000

3. கஜா என்ற பெயரை புயலுக்கு அளித்த நாடு ________

  1. இந்தியா
  2. பாகிஸ்தான்
  3. இலங்கை
  4. தாய்லாந்து

விடை : இலங்கை

4. கப்பித்தான் என்பது ___________யை குறிக்கிறது.

  1. கப்பல்
  2. தலைமை மாலுமி
  3. புயல்
  4. பயணி

விடை : தலைமை மாலுமி

5. தொங்கான் என்பது ___________யை குறிக்கிறது.

  1. தலைமை மாலுமி
  2. கப்பல்
  3. புயல்
  4. பயணி

விடை : கப்பல்

6. புலம் பெயர்ந்த தமிழர்களை பற்றிய முதல் புதினம் ___________

  1. புயலிலே ஒரு தோணி
  2. தோணி வருகிறது
  3. கள்ளத் தோணி
  4. அகல்விளக்கு

விடை : புயலிலே ஒரு தோணி

7. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்று குறிப்பிடும் நூல் _________

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. கலித்தொகை
  4. நாலடியார்

விடை : அகநானூறு

8. புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தின் _________ என்னும் அத்தியாயத்தின் சுருக்கபட்ட பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

  1. காவியக்கூத்து
  2. கலைக்கூத்து
  3. கடற்கூத்து
  4. இசைக்கூத்து

விடை : கடற்கூத்து

9. கொடுங்கோற் கோவலர் இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?

  1. கலித்தொகை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. நாலடியார்

விடை : அகநானூறு

10. கொல்லிமலை அமைந்துள்ள மாவட்டம் ……………

  1. நாமக்கல்
  2. திண்டுக்கல்
  3. சேலம்
  4. தர்மபுரி

விடை : நாமக்கல்

11. புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலம் சிறப்பு வானிலை ஆய்வுமையம் 2004 செப்படம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க ……………. பெயர்களை பட்டியலிட்டுள்ளது.

  1. 61
  2. 63
  3. 64
  4. 66

விடை : 64

12. பெய்ட்டி புயலின் பெயரைத் தந்த நாடு ………….

  1. இந்தியா
  2. தாய்லாந்து
  3. இலங்கை
  4. ஓமன்

விடை : தாய்லாந்து

13. புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களை கண்டறி

  1. அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்
  2. மேக், ஆகாஷ், பிஜ்லி, ஜல்
  3. மேக், சாகர், பிஜ்லி, ஜல்
  4. மேக், சாகர், பிஜ்லி, கஜா

விடை : அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்

14. ப.சிங்காரம் இரண்டாம் உலகப்போர் நிகழந்தபோது இருந்த இடம் …………….., ……………..

  1. இலங்கை, மெபின் நகர்
  2. மலேசியா, கோலாம்பூர்
  3. இந்தோனிசியா, மெபின் நகர்
  4. சீனா, பெய்ஜிங்

விடை : இந்தோனிசியா, மெபின் நகர்

15. “ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்! என்று கத்தியவன் ___________

  1. பாண்டியன்
  2. கப்பித்தான்
  3. ஜப்பானிய அதிகாரி
  4. குஸ்டாவ்

விடை : கப்பித்தான்

16. ஜப்பானிய அதிகாரி ___________ என்று உறுமினார்

  1. அமிரோ
  2. சமிரோ
  3. கமிரோ
  4. தமிரோ

விடை : தமிரோ

17. வானிலை மாற்றத்தைக் கண்டு எழுந்து போய்ப் பார்த்தவன் ___________

  1. மாலுமி
  2. கப்பித்தான்
  3. பாண்டியன்
  4. சேரன்

விடை : பாண்டியன்

பொருத்துக

1. கப்பித்தான் அ. இந்தோனிசியாவிலுள்ள  இடம்
2. தொங்கன் ஆ. மீன் வகை
3. அவுலியா இ. கப்பல்
4. பிலவான் ஈ. தலைமை மாலுமி
விடை : 1- ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

சிறுவினா

1. இடம்புரிப் புயல்கள் தாக்கும் பகுதிகள் யாவை?

அமெரிக்கா, ஜப்பான், சீனா

2. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார்.

3. கொரியாலிஸ் விளைவு என்பது என்ன?

புயலின் வலம்புரிப் புயல்கள், இடம்புரிப் புயல்கள் என்ற இருவகை சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

4. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு பெயர் வைக்க எத்தனை பெயர்களை பட்டியலிட்டுள்ளது?

உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது.

5. கஜா புயலுக்கு அடுத்த வந்த புயலுக்கு பெய்ட்டி என்ன பெயரினை வைத் நாடு?

தாய்லாந்து

6. சார்க் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் யாவை?

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், இலங்கை, தாய்லாந்து

7. நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலையை குறிக்கும் அகநானூறு அடிகள் பற்றி எழுதுக

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”

அகநானூறு 208 : 22

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment