TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 2.3 – முல்லைப்பாட்டு

2.3 முல்லைப்பாட்டு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 2.3 – முல்லைப்பாட்டு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide -Mullaipattu

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

 • நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
 • நேமி – வலம்புரிச்சங்கு
 • காேடு – மலை
 • காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
 • நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
 • தூஉய் – தூவி
 • விரிச்சி – நற்சாெல்
 • சுவல் – தாேள்

இலக்கணக்குறிப்பு

 • மூதூர் – பண்புத்தாெகை
 • உறுதுயர் – வினைத்தாெகை
 • கைதாெழுது – மூன்றாம் வேற்றுமைத் தாெகை
 • தடக்கை – உரிச்சாெல் தாெடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பாெறித்த – பாெறி + த் + த் +அ

 • பாெறி – பகுதி
 • த் – சந்தி
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயெரச்ச விகுதி

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

 1. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
 2. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
 3. கடல் நீர் ஒலித்தல்
 4. கடல் நீர் கொந்தளித்தல்

விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

குறு வினா

1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்துவிடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

2. மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக

மா அல்
பொருள் திருமால் பேருருவம்
இலக்ககணக்குறிப்பு செய்யுளிசை அளபெடை உரிச்சொல் தொடர்

நெடு வினா

முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக

குறிப்புச்சட்டம்
 • மழை
 • தெய்வ வழிபாடு
 • கன்றின் வருத்தம்
 • வருந்தாதே
 • முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

மழை:-

மேகம் அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.

தெய்வ வழிபாடு:-

முது பெண்கள் காவலையுடைய ஊர்பக்கறம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுக்ள நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்து முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவபர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

கன்றின் வருத்தம்:-

“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி”

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்

வருந்தாதே:-

புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டு வந்து விடுவார் “வருந்தாதே” என்றாள் இடைமகள்.

முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது:-

இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டாேம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாேதே!

கற்பவை கற்பின்

1. முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கை சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க

 • மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைத்  தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கின்றனர்.
 • மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி அஃறிணை உயிரினங்களின் துன்பங்களையும் நீக்க முற்பட்டிருக்கின்றனர்.
 • தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
 • விரிச்சி கேட்டலில் நம்பிக்கை உடையவர்கள்.
 • ஒருவரையொருவர் ஆற்றப்படுத்தி மகிழந்திருக்கின்றனர்.

2. குறிப்புகளைக் கொண்டு ஆர்வமூட்டும் வகையில் கதை / நிகழ்வை எழுது

அமைதி – வனம் – மனத்தைத் தொட்டது – கொஞ்சம் அச்சம் – ஆனால் பிடித்திருந்தது – இரவில் வீட்டின் அமைதியை விட – வனத்தின் அமைதி – புதுமை – கால்கள் தரையில் – இலைகளில் சலசலப்பு – பறவைள் மரங்கள் மேல் – சிறகடிப்பு – அருகில் திரும்பியவுடன் – திடீரென ஆரவார ஓசை – தண்ணீரின் ஓட்டம் – அழகான ஆறு – உருண்ட சிறு கூழாங்கற்கள் – இயற்கையின் கண்காட்சி

இயற்கையின் கண்காட்சி

அமைதியான வளம்

அடர்ந்த மரங்களைக் கொண்ட பசுமை மிகுந்த அமைதி நிறைநத வனத்திற்கு சென்றேன். வனத்தாவரங்கள் மற்றும் மலர்களின் நறுமணம் என மனதைத் தொட்டது. அச்சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. இரவில் வீட்டில் இருக்கும் அமைதியை விட வனத்தின் அமைதி என்னை மிகவும் கவர்ந்தது.

காட்டுயிரிகள்

புதுமையான ஓர் அனபவத்தை பெற்றேன். என் கால்கள் தரையில் ஊன்றியிருப்பதாய் தெரியவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டு ஓசை வந்த திசை நோக்கித் திரும்பினேன். மரங்கள் மேலிருந்த பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்து சோம்பலைப் போக்கிக் கொண்டிருந்தன.

ஆரவார ஒசை

திடீரென ஏற்பட்ட ஆரவார ஓசையைக் கேட்டு திரும்பிப் பாரத்தேன். குரங்குகள் தண்ணீரின் ஓட்டத்தில் தங்களின் முகங்களின் அழகைக் கண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தன.

அழகான ஆறு

தெளிவான நீரோடையின் உள்ளே, உருண்டை வடிவில் சிறு கூழாங்கற்கள் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கற்களைப் போலவும், கண்ணாடியால் செய்யப்பட்ட உருண்டைகள் போலவும் தோற்றமளித்தன. இத்தகைய இயற்கையின் கண்ணாட்சி என் மனதை விட்டு அகலவில்லை.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

 • பெரும்பெயல் – பண்புத்தாெகை
 • பெருமுதுபெண்டிர்- பண்புத்தாெகை
 • அருங்கடி – பண்புத்தாெகை
 • சிறுபுன் – பண்புத்தாெகை
 • நல்லோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. பாெழிந்த – பாெழி + த் (ந்) + த் +அ

 • பாெழி – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயெரச்ச விகுதி

2. நிமிர்ந்த – பாெழி + த் (ந்) + த் +அ

 • நிமிர் – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயெரச்ச விகுதி

3. கொண்ட = கொள்(ண்) + ட் + அ

 • கொள் – பகுதி
 • ள்(ண்) – ஆனது விகாரம்
 • ட் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயெரச்ச விகுதி

4. அசைத்த – பாெறி + த் + த் +அ

 • அசை – பகுதி
 • த் – சந்தி
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயெரச்ச விகுதி

5. நோக்கி – நோக்கு + இ

 • நோக்கு – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. முல்லைப்பாட்டு மொத்த அடிகள் __________

 1. 101
 2. 102
 3. 103
 4. 104

விடை : 103

2. முல்லைப்பாட்டு __________ நூல் வகையை சார்ந்தது

 1. எட்டுத்தொகை
 2. பத்துபாட்டு
 3. கீழ்கணக்கு
 4. சிற்றிலக்கியம்

விடை : பத்துபாட்டு

3. முல்லைத் திணைக்குரிய பூ வகை __________

 1. காந்தள்
 2. பாதிரி
 3. பிடவம்
 4. தாழை

விடை : பிடவம்

4. முல்லைப்பாட்டு __________ நூல்களுள் ஒன்று

 1. பதினென்மேல்கணக்கு
 2. பதினென்கீழ்க்கணக்கு
 3. சிற்றிலக்கியம்
 4. காப்பியம்

விடை : பதினென்மேல்கணக்கு

5. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் __________

 1. திருமுருகாற்றுப்படை
 2. குறிஞ்சிப்பாட்டு
 3. பட்டினப்பாலை
 4. முல்லைப்பாட்டு

விடை : முல்லைப்பாட்டு

6. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர் __________

 1. மாவலி மன்னன்
 2. நான்முகன்
 3. திருமால்
 4. முருகன்

விடை : திருமால்

7. குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துக் தந்தவன் __________

 1. மாவலி மன்னன்
 2. நான்முகன்
 3. திருமால்
 4. முருகன்

விடை : திருமால்

8. மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர் __________

 1. மாவலி மன்னன்
 2. நான்முகன்
 3. முருகன்
 4. திருமால்

விடை : திருமால்

9. “கோடு கொண்டு எழுந்த கொடுஞ செலவு எழிலி” – இவ்வடிகளில் மேகம் என்னும் பொருள் தரும் சொல்

 1. எழிலி
 2. கோடு
 3. செலவு
 4. கொடு

விடை : எழிலி

10. “கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர்” யார்?

 1. கோவலன்
 2. குறவர்
 3. இடையர்
 4. உழவர்

விடை : இடையர்

11. முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்

 1. கபிலர்
 2. நப்பூதனார்
 3. நக்கீரர்
 4. மாங்குடிமதேனார்

விடை : நப்பூதனார்

12. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது ________

 1. ஐப்பெருங்காப்பியங்கள்
 2. சங்க இலக்கியங்கள்
 3. அறநூல்கள்
 4. ஐஞ்சிறுங்காப்பியங்கள்

விடை : சங்க இலக்கியங்கள்

13. நன்ந்தலை” என்பதன் பொருள்

 1. அகன்ற
 2. இழந்த
 3. கவர்ந்த
 4. சுருங்கி

விடை : அகன்ற

14. “நறுவீ” – என்பதில் “வீ” என்பதன் பொருள்

 1. மான்கள்
 2. கண்கள்
 3. மலர்கள்
 4. விண்மீன்கள்

விடை : மலர்கள்

15. தலைவிக்காக நற்கொல் கேட்டு நின்றவர்கள் ……………..

 1. இளம்பெண்கள்
 2. தோழிகள்
 3. சான்றோர்
 4. முதிய பெண்டிர்

விடை : முதிய பெண்டிர்

16. சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்து?

 1. பசு
 2. இளங்கன்று
 3. எருமை
 4. ஆடு

விடை : இளங்கன்று

17. பசியால் வாடிக்கொண்டிருந்த இளங்கன்றின் வருத்த்தைக் கண்டவள் _________

 1. குறமகள்
 2. இடைமகள்
 3. தலைவி
 4. தோழி

விடை : இடைமகள்

18. “கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயார்” என்று யார் யாரிடம் கூறியது?

 1. இடைமகள் இளங்கன்றிடம்
 2. முதுபெண்டிர் பசுவிடம்
 3. தலைவன் காளையிடம்
 4. தலைவி மேகத்திடம்

விடை : இடைமகள் இளங்கன்றிடம்

19. கார்காலத்துக்குரிய மாதங்கள்

 1. தை, மாசி
 2. பங்குனி, சித்திரை
 3. ஆவணி, புரட்டாசி
 4. கார்த்திகை, மார்கழி

விடை : ஆவணி, புரட்டாசி

20. நப்பூதனாரின் தந்தை _________

 1. பொன்முடி
 2. பொன்வணிகனார்
 3. மாணிக்கநாயனார்
 4. மாசாத்துவாணிகனார்

விடை : பொன்வணிகனார்

21. பொன்வணிகனாரின் ஊர் _________

 1. மதுரை
 2. உறையூர்
 3. குற்றாலம்
 4. காவிரிப்பூம்பட்டினம்

விடை : காவிரிப்பூம்பட்டினம்

பொருத்துக

1. நேமி அ. மலை
2. கோடு ஆ. வலம்புரிசங்கு
3. விரிச்சி இ. தோள்
4. சுவல் ஈ. நற்சொல்
விடை : 1- ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. மூதூர் அ. உரிச்சொற்றொடர்
2. உறுதுயர் ஆ. மூன்றாம் வேற்றுமைத் தொகை
3. கைதொழுது இ. வினைத்தொகை
4. தடக்கை ஈ. பண்புத்தொகை
விடை : 1- ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. முல்லைப்பாட்டு – குறிப்பு வரைக

 • பத்துபாட்டு நூல்களுள் ஒன்று.
 • 103 அடிகளை கொண்டது
 • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
 • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது
 • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்.

2. நப்பூதனார் குறிப்பு வரைக

முல்லைப் பாட்டினை பாடியவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.

3. இளங்கன்று வருந்தக் காரணம் யாது?

சிறு தாப்புக் கயிற்றில் கட்டப்பட்ட இளங்கன்று இன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது.

4. இளங்கன்றின் வருத்த்தைப் போக்க இடைமகள் கூறிய செய்தி யாது?

புல்லை மேயந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பை கொண்ட எம் இடையர் இப்போது ஓட்டி வந்த விடுவர் – வருந்தாதே.

5. தலைவியை முதுபெண்டிர் எவ்வாறு ஆற்றப்படுத்தினர்?

 • நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவான்.
 • தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே

6. முல்லைப்பாட்டில் திருமால் குறித்து கூறப்பட்ட செய்தி யாது?

 • வலம்புரிச்சங்கு பொறித்த கைகளை உடையவன் திருமால்.
 • குறுகிய வடிவம் எடுத்தவன்.
 • மாவலி மன்னனர் நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப்ப பேருருவம் எடுத்தவன்.

7. முல்லை நிலத்திற்குரிய பொழுதுகள் யாவை?

 • பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
 • சிறுபொழுது – மாலை.

8. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள கருப்பொருள்கள் யாவை?

 • நீீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
 • மரம் – கொன்றை, காயா, குருத்தம்
 • பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

9. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள உரிப்பொருள்கள் யாவை?

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment