TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 2.4 – புறநானூறு

2.4 புறநானூறு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 2.4 – புறநானூறு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Purananuru

8th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குடபுலவியனார் (சங்கப்புலவர்)
இயற்பெயர் அருண்மொழித்தேவர்
சிறப்பு பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறியவர்
படைப்புகள் புறநானூற்றில் சில பாடல்களைப் பாடியுள்ளார்

மனப்பாடப் பகுதி

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி காெடுத்தோர் உயிர் காெடுத்தோரே!
உண்டி முதற்றே உ்ணவின் பிணடம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

குடபுலவியனார்

சொல்லும் பொருளும்

  • யாக்கை – உடம்பு
  • புணரியோர் – தந்தவர்
  • புன்புலம் – புல்லிய நிலம்
  • தாட்கு – முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்

இலக்கணக்குறிப்பு

  • மூதூர் – பண்புத்தொகை
  • நல்லிசை – பண்புத்தொகை
  • புன்புலம் – பண்புத்தொகை
  • நிறுத்தல் – தொழிற்பெயர்
  • அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
  • நீரும் நிலமும் – எண்ணும்மை
  • உடம்பும் உயிரும் – எண்ணும்மை
  • அடுபோர் – வினைத்தொகை
  • கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் – நிறு + த் + தல்

  • நிறு – பகுதி
  • த் – சந்தி
  • அன் – சாரியை
  • தல் – தொழில் பெயர் விகுதி

காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர்

  • காெடு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
  • பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
  • இந்நூல் பண்டைத் தமிழிர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

பகுபத உறுப்பிலக்கணம்

பலவுள் தெரிக.

மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  1. மறுமை
  2. பூவரசு மரம்
  3. வளம்
  4. பெரிய

விடை : வளம்

சிறு வினா

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.

நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

குறு வினா

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

  • வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடையவோ, உலகு முழுவதையும் வெல்லவோ, நிலையான புகழைப் பெற விரும்பினால் நான் சொல்வதைக் கேள்!
  • நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமையும். உணவையே முதன்மையாக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
  • உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
  • தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனுக்கு சிறிதும் உதவாது. அதனால், நான் கூறியதை விரைவாகக் கடைப்பிடிப்பாயாக!
  • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
  • நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
    பெறுவர்.
  • இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்

கற்பவை கற்றபின்

1. பின்வரும் புறநானூற்றுத் தொடருக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்கு சென்று அறிந்த எழுதுக

அ. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ! (புறம் – 18)

உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர்.

ஆ. உண்பது நாழி உடுப்பை இரண்டே! (புறம் – 189)

உண்பது சிறிதளவு, உடுப்பது மேலாடை, கீழாடை இரண்டு மட்டுமே

இ. யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192)

எல்லா ஊர்களும் நம் ஊரே! எல்லாரும் நம் உறவினர்களே!

ஈ. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே! (புறம் – 312)

அறிஞன் ஆக்குதல் தந்தையின் கடமை, நன்னெறி கூறுதல் மன்னனின் கடமை

ஈ. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்!
       பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே! (புறம் – 183)

துன்ப காலத்தில் உதவியும் பொருள் கொடுத்தும் ஆசிரியரை மதித்து கற்பதுவே நன்று

2. உணவாகும் மழை என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக

9th Standard - Purananuru

மழையால் காடுகள் மற்றும் மலைப்பகுதிகள் செழிக்கின்றன. காய்கள், கனிகள் அவற்றால் பெருகுகின்றன.

9th Standard - Purananuru

ஊட்டச்சத்து மிக்க கீரைகள், பயிறு, பருப்பு வகைகள் மழையால் நன்கு வளர்ந்து, நீண்ட நாள் நலத்துடன் வாழ நல்லுணவைத் தருகின்றன.

9th Standard - Purananuru

நோயற்ற வாழ்வு வாழ அறுசுவை உணவு அவசியம். அதனை அளிப்பது மழையே

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் _______________

  1. பெரியபுராணம்
  2. தமிழ்விடுதூது
  3. தமிழோவியம்
  4. புறநானூறு

விடை : புறநானூறு

2. “நீரின்று அமையா யாக்கை” – என்று பாடியவர் 

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. குடபுலவியனார்
  3. திருவள்ள்ளுவர்
  4. மணிமேகலை

விடை : குடபுலவியனார்

3. “வான் உடனும் வடிநீண் மதில்” எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்ட மன்னன் _______________

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. திருவள்ள்ளுவர்
  3. குடபுலவியனார்
  4. மணிமேகலை

விடை : குடபுலவியனார்

4. புறநானூறு _______________ நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினென்கீழ்கணக்கு
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : எட்டுத்தொகை

5. “உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” – இத்தொடரைப் பாடியவர்

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. திருவள்ள்ளுவர்
  3. குடபுலவியனார்
  4. மணிமேகலை

விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்

6. சரியான கூற்றினை தேர்க

1. குடபுலவியனார் புறநானூற்றில் பாடல் எழுதியுள்ளார்
2. நீர் நிலைகளை உருவாக்குபவர்கள் உயிரை உருவாக்குபவர்கள்
3. குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப்பாடல் பொதுவியல் திணையன்று

  1. 1 மட்டும் சரி 2, 3 தவறு
  2. 2 மட்டும் சரி 1, 3 தவறு
  3. 3 மட்டும் சரி 1, 2 தவறு
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

7. குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வழங்கிய அறிவுரை _______________

  1. வேளாண்மை பெருக்கு
  2. நீர்நிலை பெருக்குதல்
  3. போர் செய்யாமை
  4. அறம் செய்

விடை : நீர்நிலை பெருக்குதல்

8. மூதூர் – இலக்கணக்குறிப்பு

  1. வினைத்தொகை
  2. பண்புத்தொகை
  3. வினையாலணையும் பெயர்
  4. தொழிற்பெயர்

விடை : பண்புத்தொகை

8. “ஆளும் இறைவன்” – என்ற தொடரில் ‘இறைவன்’ என்று பொருள்தரும் சொல்

  1. உழவன்
  2. கிழவன்
  3. புலவன்
  4. அரசன்

விடை : அரசன்

பொருத்துக

1. யாக்கை அ. முயற்சி
2. தாட்கு ஆ. உடம்பு
3. புணரியோர் இ. உலகம்
4. ஞாலம் ஈ. தந்தவர்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. உணவு எனப்படுவது யாது?

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.

2. எவற்றையெல்லாம் பேணிப் பாதுகாக்க வேண்டுமென குடபுலவியனார் கூறுகிறார்

நிலம், நீர், காற்று ஆகியவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டுமென குடபுலவியனார் கூறுகிறார்

2. பொதுவியல் திணை என்றால் என்ன?

வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

3. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்து உரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்.

4. தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – தொடர் பொருள் விளக்கம் தருக.

குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment