TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 1.3 – தமிழ்விடு தூது

1.3 தமிழ்விடு தூது

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 1.3 – தமிழ்விடு தூது.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Tamil Vidu Thoothu

9th Std Tamil Text Book – Download

மனப்பாடப் பாடல்

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

நூல்வெளி

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
  • இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
  • தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
  • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
  • தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன
  • 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
  • இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.

சொல்லும் பொருளும்

  • குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
  • மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
  • சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
  • சிந்து – ஒருவகை இசைப்பாடல்
  • முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர், தீவிரமான செயல். தாமசம் – சோம்பல், தாழ்மை)
  • பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்
  • வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
  • வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  • ஊனரசம் – குறையுடைய சுவை
  • நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
  • வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு

இலக்கணக்குறிப்பு

  • முத்திக்கனி – உருவகம்
  • தெள்ளமுது – பணபுத்தொகை
  • குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
  • நா – ஓரெழுத்து ஒரு மொழி
  • செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
  • சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. கொள்வார் – கொள் + வ் +ஆர்

  • கொள் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ

  • உணர் – பகுதி
  • த் – சந்தி
  • த் – ந் ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

  1. தொடர்நிலைச் செய்யுள்
  2. புதுக்கவிதை
  3. சிற்றிலக்கியம்
  4. தனிப்பாடல்

விடை : சிற்றிலக்கியம்

2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

  1. …………….இனம்
  2. வண்ணம் …………….
  3. …………….குணம்
  4. வனப்பு …………….
    1. மூன்று, நூறு, பத்து, எட்டு
    2. எட்டு, நூறு, பத்து, மூன்று
    3. பத்து, நூறு, எட்டு, மூன்று
    4. நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை : மூன்று, நூறு, பத்து, எட்டு

3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு –

  1. வேற்றுமைத்தொகை
  2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. பண்புத்தொகை
  4. வினைத்தொகை

விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறு வினா

கண்ணி என்பதன் விளக்கம் யாது?

இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி. அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும்.

சிறு வினா

தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக

  • அமிழ்தினும் மேலான முத்திக் கனியே! முத்தமிழே! உன்னோடு மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்!
  • புலவர்கள் குறம், பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பாவைகக்கும் உறவு உண்டா?
  • தமிழே! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.
  • தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டுமே பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்!
  • மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான். ஆனால் தமிழே! நீ மட்டும் 100 வண்ணங்களை பெற்றுள்ளாய்!
  • உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்!
  • மற்றையோர்க்கு அழகு ஒன்று தான், ஆனால், தமிழே! நீயோ 8 வகையான ஆழகினைப் பெற்றுள்ளாய்!

கூடுதல் வினாக்கள்

படித்துத் திரட்டுக.

“காதாெளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதாெளிர் சி்ந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதாெளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியாெளிர் செங்காேலாய்த திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க”

– கவியாேகி சுத்தானந்த பாரதியார்.

இப்பாடல் காடடும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.

இப்பாடல் காட்டும் இலக்கியங்கள்

  • குண்டலமும் – குண்டலகேசி
  • கைக்கு வளையாபதி – வளையாபதி
  • சிந்தாமணி – சீவகசிந்தாமணி
  • பொன்முடி சூளாமணி – சூளாமணி
  • செங்கோலாய்த் திருக்குறள் – திருக்குறள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. கலிவெண்பாவால் பாடப்பெறும் சிற்றிலக்கியம் ___________

  1. பிள்ளைத்தமிழ்
  2. கலம்பகம்
  3. மாலை
  4. தூது

விடை : மாலை

2. தூது விடும் பொருட்கள் மொத்தம் ___________

  1. 12
  2. 10
  3. 11
  4. 9

விடை : 10

3. தமிழ் விடு தூது நூலை முதன் முதலில் புதுப்பித்தவர் ___________

  1. உ.வே.சா.
  2. ஒளவையார்
  3. தமிழன்பன்
  4. அடியார்க்கு நல்லார்

விடை : உ.வே.சா.

4. உ.வே.சா. தமிழ் விடு தூது நூலைப் புதுப்பித்த ஆண்டு ___________

  1. 1928
  2. 1930
  3. 1932
  4. 1934

விடை : 1930

5. தமிழ் விடு தூது நூலில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை ___________

  1. 260
  2. 258
  3. 250
  4. 268

விடை : 268

6. ___________ என்பது சிற்றிலக்கியம் வகைகளுள் ஒன்று

  1. மணிமேகலை
  2. தூது
  3. சிலம்பு
  4. பரணி

விடை : தூது

7. சிற்றிலக்கிய வகை சார்ந்தது ___________

  1. குறம்
  2. பள்ளு
  3. சீவகசிந்தமணி
  4. தமிழ்விடுதூது

விடை : சீவகசிந்தமணி

8. தாமசம் என்பதன் பொருள் ___________

  1. அமைதி
  2. போர்
  3. சோம்பல்
  4. மேன்மை

விடை : சோம்பல்

9. தமிழின் வண்ணகங்கள் ___________

  1. 96
  2. 100
  3. 104
  4. 108

விடை : 100

பொருத்துக

1. உணவில் சுவை அ. ஒன்பது
2. தமிழின் சுவை ஆ. பத்து
3. தேவர்கள் குணம் இ. ஆறு
4. தமிழின் குணம் ஈ. மூன்று
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. தமிழ் விடு தூது நூலின் ஆசிரியர் ___________

விடை : அறிய இயலவில்லை

2. இனிக்கும் தெளிந்த அமுதம் ___________

விடை : தமிழ்

3. வீடுபேற்றைத் தரும் கனி ___________

விடை : தமிழ்

4. அறிவால் உண்ணப்படும் தேன் போன்றது ___________

விடை : தமிழ்

5. விளம்பக் கேள் என்பதன் பொருள் ___________

விடை : சொல்வதைக்கேள்

6. ஒழியா வனப்பு ___________

விடை : எட்டு

7. அழியா வனப்பு ___________

விடை : ஒன்று

குறு வினா

1. தூது இலக்கியத்தின் வேறு சில பெயர்களை எழுதுக

  • வாயில் இலக்கியம்
  • சந்து இலக்கியம்

2. தூது இலக்கியம் குறிப்பு வரைக

தலைவன் மீது அன்பு கொண்ட தலைவி ஒருத்தி, தலைவனிடம் தூது அனுப்பி மாலை வாங்கி வருமாறு அன்னம் முதலிய 10 பொருள்களில் ஏதேனும் ஒன்றினை தூது அனுப்புவது தூது இலக்கியம் ஆகும். இது கலி வெண்பாவால் பாடப்படும்.

3. மூவகைப் பாவினங்கள் எவை?

துறை, தாழிசை, விருத்தம்

4. நவரசங்கள் தொகை விளக்கம் தருக?

வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை

5. தேவர் பெற்ற முக்குணங்கள் எவை?

சமத்துவம், இராசசம், தாமசம்

6. ஐந்து வண்ணங்கள் தொகை விளக்கம் தருக?

வெள்ளை, சிவப்பு,கருப்பு ,மஞ்சள், பச்சை

7. தமிழுக்கு கூறபட்ட உருவகங்கள் யாவை

  • வீடுபேறு தரும் கனி
  • அறிவால் உண்ணப்படும் தேன்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment