TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.4 – பால் மனம்

3.4 பால் மனம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.4 – பால் மனம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - palmanam

8th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி;
  • சிறுகதைகள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
  • இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
  • உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

குழந்தை கிருஷ்ணாவின் பணபுநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

“பால்மனம்” எனும் இக்கதை அ.வெண்ணிலா எனபவர் தொகுத்த “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம்.

கிருஷ்ணாவின் செயல்கள்

ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள். அம்மா அதை தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தெடலாமா? என்றாள் கிருஷ்ணா, தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள். அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள். கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பாரத்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள். தன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின் மனித நேயத்தை கண்டு வியக்கிறார்.

மனமாற்றம்

ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார். இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால் சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும் என்கிறது. பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார்.

ஏமாற்றம்

குழந்தைகளின் மனதை அவர்கள் வளர வளர இந்தச் சமுதாயமும் அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம் இல்லாமல் அவர்களை வளர்க்கும் செயல் ராமுக்கு ஏமாற்றத்தை தந்தது. நான் பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து கொண்டார்.

முடிவுரை

கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில் பிறக்கிறது. ஆனால் மனிநேயம்  இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு நீங்குகிறது.

கற்பவை கற்றபின்

குழந்தைகளின் நற்பணபுகளாகப் ‘பால் மனம்’ கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.

  • அஃறிணை உயிர்கள் மீது அன்பு காட்ட வேண்டும்.
  • உடல் நலக் குறைவாக இருப்பவரிடம் நலம் விசாரிக்க வேண்டும்.
  • துன்பப்படும் ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
  • பசியில் வாடி இருப்பவர்களுக்கு உணவு தர வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

1. கோமகளின் அன்னை பூமி என்னும் புதினம் பெற்ற விருதுகள் யாவை?

  • அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.

2. கோமகள் எழுதியுள்ள நூல்கள் யாவை?

  • உயிர் அழுதாய்
  • நிலாக்கால நட்சித்திரங்கள்
  • அன்பின் சிதறல்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment