TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.4 – மனித யந்திரம்

2.4 மனித யந்திரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.4 – மனித யந்திரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - manitha yenthiram

8th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம்.
  • சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்,
  • சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை.
  • மணிக்கொடி இதழில் வெளியான புதுமைபித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

முன்னுரை

“சிறுகதை மன்னன்” என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் எழுதிய கதை மனித யந்திரம் ஆகும். அதனை இனிக் காண்போம்.

மீனாட்சி சுந்தரம்

மீனாட்சி சுந்தரம் ஒரு கடையில் எழுத்தர் வேலை செய்பவர். 45 வருடங்களாக ஒரே கடையில் வேலை செய்கிறார். சம்பளம் மாதத்திற்கு 20 ரூபாய். அவர் மிகவும் சாது. அவரைப் பாரத்தாலே அனைவருக்கும் பழுதுபடாத எந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும். இவரை ஊரார் அப்பாவிப் பிராணி என்றுதான் கூறுவார்கள்.

மீனாட்சி சுந்தரத்தின் ஆசை

சாதுவாக இருந்த மீனாட்சி சுந்தரத்தின் மனில் ஆசைகள் முளைவிடத் தொடங்கின. மாடும் கன்றும் வாங்க வேண்டும். நிலத்தைத் திருப்ப வேண்டும். ஒருமுறை கொழும்புக்குப் போய் விட்டு தங்க அரைஞான், கடிகாரச் சங்கிலி, கையில் பணம் போன்றவற்றுடன் மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும். தெருவில் எதிரிலே வருகிறவர்கள் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டி அண்ணாச்சி சவுக்கியமா? என்று கேட்க வேண்டும். இதுதான் மீனாட்சி சுந்தரத்தின் ஆசை.

மீனாட்சி சுந்தரத்தின் செயல்

கணக்கு வழக்கைப் பாரத்து விட்டுக் கடையை பூட்டிவிட்டுப் பணத்தை முதலாளி வீட்டில் ஒப்படைத்து விட்டு வருவதுதான் வழக்கம். மீனாட்சி சுந்தரம் தன்னுடைய ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க நினைத்தார். பெட்டியில் உள்ள பணத்தைத் திருடிச் சென்று விட முடிவு செய்தார். நாற்பது ரூபாயும் சில்லறையும் இருந்ததை எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு சென்றார் மீனாட்சி சுந்தரம்.

மனமாற்றம்

மீனாட்சி சுந்தரம் கடையில் திருடிய பணத்தையும் சில்லறையும் எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தூத்துக்குடி வண்டியில் ஏறி அமர்ந்தார். திருடிய பயத்தில் வியர்வை பூத்தது. அந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரம் என்று ரயில்வே போலீஸ் நண்பர் கல்யாணசுந்தரம் மீனாட்சி சுந்தரத்தைக் கூப்பிட்டார். திருடிய பயத்தில் தூத்துக்குடி செல்வதாகக் கூறினார். காலை விடிந்தவுடன் எல்லா விஷயமும் ஊராருக்குத் தெரிந்.துவிடும். கல்யாண சுந்தரமும் நான் தூத்துக்குடி சென்றுள்ளதை சொல்லிவிடுவான். எனவே பயத்தில் மனமாற்றம் அடைந்தான். மீண்டு கடையை நோக்கி நடந்து தனக்குரிய பதினொண்ணே காலணா சம்பளத்தை எடுத்துக்கொண்டு, முதாலாளி ஐயா வீட்டிற்குச் சென்று சம்பளம் எடுத்துக் கொண்டதை சொல்லி விட்டுச் சென்றார்.

முடிவுரை

குற்றவுணர்வு மனதில் அழுத்திக் கொண்டே இருந்து, அது நம்மைத் தீயவை பக்கத்தில் விடாமல் காப்பாற்றும் என்பதை அறியலாம்.

கூடுதல் வினாக்கள்

1. மனிதன் பெற்றுள்ள பண்புகள் யாவை?

ஒரே மனிதனுக்குள் இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

  • நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வது ஒன்று
  • தீயனவற்றைச் செய்யத் தூண்டுவது மற்றொன்று.

2. புதுமைபித்தன் எவ்வாறு போற்றப்படுகிறார்?

புதுமைபித்தன் புதுமைபித்தன் என போற்றப்படுகிறார்

3. சொ. விருத்தாச்சலம் என இயற்பெயர் கொண்டவர் யார்?

சொ. விருத்தாச்சலம் என இயற்பெயர் கொண்டவர் புதுமைபித்தன்

4. புதுமைபித்தனின் சிறுகதைகளுள் புகழ் பெற்றவை யாவை?

  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  • சாபவிமோசனம்
  • பொன்னகரம்
  • ஒரு நாள் கழித்து

5. முற்காலத்தில் வழக்கிலிருந்து நாணயத்தினை முறையினை கூறுக

  • அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கதில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்.
  • பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய்.
  • அரை ரூபாயை எட்டணா என்றும், கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றன.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment