TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.5 – தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

2.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.5 – தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide -thogai nilai thoga nilai thodargal

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது …………………….

  1. வேற்றுமைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. அன்மொழித்தொகை

விடை : வேற்றுமைத்தொகை

2. ‘செம்மரம்’ என்னும் சொல் ………………….த்தொகை.

  1. வினை
  2. பண்பு
  3. அன்மொழி
  4. உம்மை

விடை : பண்பு

3. ‘கண்ணா வா!’- என்பது ……………..த் தொடர்.

  1. எழுவாய்
  2. விளி
  3. வினைமுற்று
  4. வேற்றுமை

விடை : விளி

பொருத்துக.

1. பெயரெச்சத் தொடர் அ. கார்குழலி படித்தாள்
2. வினையெச்சத் தொடர் ஆ. புலவரே வருக
3. வினைமுற்றுத் தொடர் இ. பாடி முடித்தான்
4. எழுவாய்த் தொடர் ஈ. எழுதிய பாடல்
5. விளித் தொடர் உ. வென்றான் சோழன்.
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

சிறு வினா

1. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை

  • வேற்றுமைத் தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

2. ‘இரவுபகல்’ என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

‘இரவு பகல்’ இத்தொடர், ‘இரவும் பகலும்’ என விரிந்து பொருள் தருகின்றது.

இதில் சொல்லின் இடையிலும், இறுதியிலும் ‘உம்’  என்னும் இடைச்சொல் நின்று பொருள் தருகிறது.

இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் ‘உம்’ இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத் தொகை என்பர்.

3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.

சான்று : பொற்கொடி வந்தாள்

இத்தொடரில் “பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள்” என்னும் பொருள் தருகிறது. இதில் “ஆல்” என்னும் வேற்றுமை உருபும் “ஆகிய” என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது.

“வந்தாள்” என்னும் சொல்லால் பெண் என்பதனையும் குறிப்பதால், இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. திருவாசகம் படித்தாள் – இதில் மறைந்து வரும் வேற்றுமை உருபு _________

  1. இரண்டாம் வேற்றுமை உருபு
  2. மூன்றாம் வேற்றுமை உருபு
  3. நான்காம் வேற்றுமை உருபு
  4. ஐந்தாம் வேற்றுமை உருபு

விடை : இரண்டாம் வேற்றுமை உருபு

2. கம்பர் பாடல் – இதில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபு _________

  1. கு
  2. இன்
  3. அது
  4. கண்

விடை : அது

3. காலம் கரந்த பெயரெச்சம் _________

  1. பண்புத்தொகை
  2. வினைத்தொகை
  3. வேற்றுமைத்தொகை
  4. உவமைத்தொகை

விடை :வினைத்தொகை

4. வெண்ணிலவு, கருங்குவளை _________க்குச் சான்றாகும்

  1. வினைத்தொகை
  2. பண்புத்தொகை
  3. வேற்றுமைத்தொகை
  4. உவமைத்தொகை

விடை : பண்புத்தொகை

5. தொகைநிலைத் தொடர்கள் _________ வகைப்படும்

  1. 6
  2. 7
  3. 8
  4. 5

விடை : 6

6. தொகாநிலைத் தொடர்கள் _________ வகைப்படும்

  1. 7
  2. 8
  3. 9
  4. 10

விடை : 9

குறு வினா

1. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.

2. உவமைத்தொகை என்றால் என்ன?

உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உறுப்புகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

3. எண்ணும்மை என்றால் என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் ‘உம்’ என்னும் உருபு வெளிபட வருவது எண்ணும்மை எனப்படும்.

4. எழுவாய் தொடர் என்றால் என்ன?

எழுவாயைத் தொடர்ந்து பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.

5. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?

வினைமுற்று பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.

6. பெயரெச்ச தொடர் என்றால் என்ன?

எச்சவினை பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது பெயரெச்சத் தொடர் ஆகும்.

மொழியை ஆள்வோம்!

கேட்க

கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.

பெருமை மிகுந்த சான்றோர் சபைக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இப் பெருமைமிகு சபையில் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு கைத்தொழில் ஒன்றைக் கற்றக்கொள் என்பதாகும்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பார்கள். அதைப்போல ஏட்டுப் படிப்பு படித்தவர்களக்கு எந்த வேலையும் கிடைப்பதாகத் தெரியவில்லை. படித்தாலும் படித்து பட்டம் பெற்றாலும் கைத்தொழில் ஒன்றையும் நாம் கூடவே, சேர்த்து கைத்தொழில் ஒன்றையும் நாம் கூடவே, சேர்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை அந்த வேலைக்காக காத்திராமால் கற்ற கைத்தொழில் நமக்கு மிகவும் பயன்படும்.

தையல், ஓவியம், மரவேலை, மின்னணுச் சாதனங்கள் பழுது பார்ப்பு, தட்டச்சு கணிப்பொறி, கூடை பின்னதல், அலங்காரப் பொருட்கள் செய்தல் இவற்றை பொழுது போக்கிற்காக நம் பள்ளியில் கற்றாலும் அங்கு ஆழமாக ஆழந்து கற்க வேண்டும். அதுவே தான், பிற்காலத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் நமக்கு நல்ல சம்பாத்தியத்தைக் கொடுக்கும்.

ஏட்டுக்கல்வி கைவிட்டாலும், கைத்தொழில் கல்வி உன்னைக் கைவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இளைஞர்களாகிய நாம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

2. இதயம் கவரும் இசை

என்னை ஈன்ற தாய் மொழிக்கும், இந்தச் சான்றோர் பேரவைக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, இதயம் கவரும் இசை என்ற நல்லதொரு தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. துன்பங்கள் நம்மைத் துரத்தும்போத அமைதி தானாக தேடி வருவதில்லை. இசையின் பக்கம் நாம் தான் ஓடி வர வேண்டும். புல்லாங்குழல் இசையும், வீணை இசையும், நாத முழக்கமும், மத்தளம் இசையும் மனதைப் புண்படுத்தும். இசைக்கச்சேரி கேட்கும் போது இதயமெல்லாம் மென்மையாகிவிடும்.

சங்ககாலத்தில் தலைவன் ஒருவன் கள் உண்ட மயக்கத்தில் படுத்து கிடக்கிறான். தொலைவில் தலைவி திணையைக் காய வைத்துக் கொண்டிருக்கிறாள். தலைவன் படுத்து இருந்த இடத்தை நோக்கி மத யானை ஒன்று ஒடி வருகின்றது. ஐயோ! தலைவனுக்கு என்ன ஆகுமோ? என்று கவலைப்படாமல் தலைவி அருகிலிருந்த யாழை எடுத்து மீட்டினாள். மதம் பிடித்த யானை யாழ் இசையில் மயங்கி தலைவனை மிதிக்காமல் தெளிந்து சென்றதாம். இசை உயிரையும் காப்பாற்றும்.

குழந்தை பிறந்தும் தாலாட்டி இசை செய்தான். அவன் வளர்ந்து திருமணம் ஆகும்போதும் மங்கள இசைதான். இப்படி இசை வாழ்வில் எத்தனையோ இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது. நம் வாழ்க்கையில் “இதயம் கவரும் இசை அனைவரையும் கவரும் தசை” என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

சொல்லக் கேட்டு எழுதுக.

முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளக்குகிறது. திருவண்ணாமலைச் சாரலில் ஆயர் ஒருவர் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினார். அப்போது எருமை ஒன்று காணாமல் போனதை அறிந்தார். தம் கையிலிருந்த குழலை எடுத்து இனிய இசையை எழுப்பினார். இன்னிசை கேட்ட எருமை அவரை வந்தடைந்தது. இவ்வாறு ஆயர்களின் இசைத் திறத்தைத் திருப்பதிகம் விளக்குகிறது.

சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

(கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)

1. இடி ______________ மழை வந்தது.

  • உடன்

2. மலர்விழி தேர்வின் ______________ ஆயத்தமானாள்.

  • பொருட்டு

3. அருவி மலையில் ______________ வீழ்ந்தது.

  • இருந்து

4. தமிழைக் ______________ சுவையான மொழியுண்டோ!

  • காட்டிலும்

5. யாழ், தமிழர் ______________ இசைக்கருவிகளுள் ஒன்று

  • உடைய

இசைக்கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், கசுரம், மகுடி

விடை :

உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

இணைச்சொற்களை வகைப்படுத்துக.

உற்றார்உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.

நேரிணை:-

  • உற்றார்உறவினர்
  • வாடிவதங்கி
  • நட்டநடுவில்
  • பட்டிதொட்டி

எதிரிணை:-

  • விருப்புவெறுப்பு
  • காலைமாலை
  • உள்ளும்புறமும்
  • மேடுபள்ளம்
  • ஆடல்பாடல்

செறியிணை :-

  • கன்னங்கரேல்

இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் ______________ சிறந்தவர் ஆவர்.

  • கல்விகேள்வி

2. ஆற்று வெள்ளம் ______________ பாராமல் ஓடியது.

  • மேடுபள்ளம்

3. இசைக்கலைஞர்கள் ______________ வேண்டியவர்கள்.

  • போற்றிப்புகழப்பட

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ______________ இல்லை

  • ஈடுஇணை

5. திருவிழாவில் யானை ______________ வந்தது.

  • ஆடிஅசைந்து

கடிதம் எழுதுக.

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

அ.சங்கரலிங்கம்,
த/பெ. ரா.அருணாசலம்,
7/507, வடக்குத்தெரு,
வெங்கேடஸ்வரபுரம், ஆலங்குளம்,
தென்காசி – 627854

பெறுநர்

உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஆலங்குளம்.

மதிப்புக்குரிய அய்யா,

பொருள் : இருப்பிடச் சான்றிதழ் வேண்டுதல் சார்பாக

வணக்கம், ஈரோடு, கிராமகமிட்டி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். 7/507, வடக்குத்தெரு, வெங்கேடஸ்வரபுரம், ஆலங்குளம்,
தென்காசி – 627854 என்ற முகவரியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகின்றோம். அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகிறது. இத்துடன் குடும்ப அட்டை நகலும் ஆதார் அட்டை நகலும் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : ஆலங்குளம்
நாள் : 17.10.2022

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
அ.சங்கரலிங்கம்

உறைமேல் முகவரி

பெறுநர்

உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஆலங்குளம்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

8th Standard - thogai nilai thoga nilai thodargal - Kukeluthputhir

இடமிருந்து வலம்:-

1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது. 

  • மத்தளம்

2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி _______________

  • வீணை

7. இயற்கைக் கருவி _______________

  • சங்கு

12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட கருவி _______________

  • கொம்பு

வலமிருந்து இடம்:-

4. வட்டமான மணி போன்ற கருவி _______________

  • சேகண்டி

8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி _______________

  • குடமுழா

9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் _______________

  • பாணர்

மேலிருந்து கீழ்:-

1. 19 நரம்புகளைக் கொண்ட _______________

  • மகரயாழ்

3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை _______________ கருவி

  • கஞ்ச

5. சிறியவகை உடுக்கை. 

  • குடுகுடுப்பை

6. பறை ஒரு _______________ கருவி

  • தோல்

கீழிருந்து மேல்:-

8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக்கருவி _______________

  • குழல்

10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை _______________

  • ஏழு

11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.

  • குடமுழா

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
  2. இசைக் கலையை வளர்த்த சான்றோர்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

  • கைவினைப் பொருள்கள் – Crafts
  • புல்லாங்குழல் – Flute
  • முரசு – Drum
  • கூடைமுடைதல் – Basketry
  • பின்னுதல் – Knitting
  • கொம்பு – Horn
  • கைவினைஞர் – Artisan
  • சடங்கு – Rite

இணையத்தில் காண்க

இசையின் வகைப்பாடுகள் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடி எழுதுக.

  • ஆங்கில இசை
  • ஆப்பிரிக்க அமெரிக்க இசை
  • இந்துஸ்தானி இசை
  • உலோக இசை
  • கருநாடக இசை
  • சூபி இசை
  • செம்மிசை
  • தமிழிசை
  • நாட்டார் இசை
  • பரவலர் இசை
  • மெட்டல் இசை
  • ராக் இசை
  • அரபு இசை
  • இரைச்சல் இசை
  • உரோமான்சா
  • உள்ளுணர்வு இசை
  • சீக்கிய இசை
  • பரப்பிசை
  • வன்கு இசை
  • ஜாஸ்
  • புதுயுக இசை
  • பிரித்தானிய இசை

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment