TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.6 – திருக்குறள்

2.6 திருக்குறள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.6 – திருக்குறள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Thirukural

8th Std Tamil Text Book – Download

மனப்பாடப்பகுதி

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. அரசரை அவரது _________ காப்பாற்றும்.

  1. செங்கோல்
  2. வெண்கொற்றக்குடை
  3. குற்றமற்ற ஆட்சி
  4. படை வலிமை

விடை : குற்றமற்ற ஆட்சி

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _________ தகுதி அறிந்து பேச வேண்டும்.

  1. சொல்லின்
  2. அவையின்
  3. பொருளின்
  4. பாடலின்

விடை : அவையின்

3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. கண் + ஓடாது
  2. கண் + ணோடாது
  3. க + ஓடாது
  4. கண்ணோ + ஆடாது

விடை : கண் + ஓடாது

4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. கச + டற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசடு + அற

விடை : கசடு + அற

5. ‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________

  1. என்றாய்ந்து
  2. என்றுஆய்ந்து
  3. என்றய்ந்து
  4. என்ஆய்ந்த

விடை : என்றாய்ந்து

குறு வினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

இச்செயலை இந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

நிகழ்வுக்குப் பொருத்தமான குறளைத் தேர்ந்தெடு

பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக் குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
   தொகைஅறிந்த தூய்மை யவர்.

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
   அதனை அவன்கண் விடல்.

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
   தேர்ந்துசெய் வஃதே முறை.

விடை :-

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும்

  • நாடி – நாடுதல்
  • ஆய்ந்து – ஆராய்ந்து
  • இறை – அரசர்
  • விளையாடல் – செயல் செய்தல்
  • ஒறுப்பது – தண்டிப்பது
  • கடியன் – கடுமையானவர்
  • வேந்தன் – அரசன்
  • கடுகி – விரைந்து

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. அரசரை அவரது _________ காப்பாற்றும்

  1. செங்கோல்
  2. வெண்கொற்றக்குடை
  3. குற்றமற்ற ஆட்சி
  4. படை வலிமை

விடை : குற்றமற்ற ஆட்சி

2. _________ நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்

  1. காலம்
  2. நடுவுநிலைமை
  3. முறையாக ஆராய்தல்
  4. உயிர்கள் காப்பாற்று

விடை : நடுவுநிலைமை

3. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _______ தகுதி அறிந்து பேச வேண்டும்

  1. சொல்லின்
  2. பொருளின்
  3. பாடலின்
  4. அவையின்

விடை : அவையின்

4. _________ நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்

  1. காலம்
  2. நடுவுநிலைமை
  3. முறையாக ஆராய்தல்
  4. உயிர்கள் காப்பாற்று

விடை : நடுவுநிலைமை

5. “கண்ணோடாது” பிரித்தெழுதக் கிடைப்பது _________

  1. கண் + ஓடாது
  2. கண் + ணோடாது
  3. க + ஓடாது
  4. கண்ணோ + ஆடாது

விடை : கண் + ஓடாது

6. “கசடற” பிரித்தெழுதக் கிடைப்பது _________

  1. கச + டற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசடு + அற

விடை : கசடு + அற

7. “என்று + ஆய்ந்து” சேர்த்தெழுதக் கிடைப்பது _________

  1. என்றாய்ந்து
  2. என்றுஆய்நது
  3. என்றய்ந்து
  4. என்ஆய்ந்து

விடை : என்றாய்ந்து

8. “இறை” என்னும் சொல்லின் பொருள் ………………..

  1. உலகம்
  2. குடிமக்கள்
  3. இறைவன்
  4. அரசர்

விடை : அரசர்

சிறு வினா

1. அரசர் யாரைக் காப்பாற்றுபவர்?

உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் அரசர் ஆவார்

2. அரசரைக் காப்பாற்றுவது எது?

அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.

3. அரசனின் கடமை என்ன?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு யாது?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

5. சொல்வளமும், நற்பண்பும் உடையவர்கள் எவ்வாறு பேச வேண்டுபவர் யார்?

சொல்வளமும், நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதியறிந்து பேசுதல் வேண்டும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment