TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.1 – வளம் பெருகுக

3.1 வளம் பெருகுக

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.1 – வளம் பெருகுக.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - valam peruga

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

 • வாரி – வருவாய்
 • எஞ்சாமை – குறைவின்றி
 • முட்டாது – தட்டுப்பாடின்றி
 • ஒட்டாது – வாட்டம்இன்றி
 • வைகுக – தங்குக
 • ஓதை – ஓசை
 • வெரீஇ – அஞ்சி
 • யாணர் – புதுவருவாய்

பாடலின் பொருள்

சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக. அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க. கிளைத்துச் செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக. போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலததில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து வி்ளங்குக.

நூல் வெளி

 • ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
 • தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
 • இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
 • இநநூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ___________ எல்லொம் முளைத்தன.

 1. சத்துகள்
 2. பித்துகள்
 3. முத்துகள்
 4. வித்துகள்

விடை : வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.

 1. காரி
 2. ஓரி
 3. வாரி
 4. பாரி

விடை : வாரி

3. ‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

 1. அ + களத்து
 2. அக் + களத்து
 3. அக்க + அளத்து
 4. அம் + களத்து

விடை : அ + களத்து

4. ‘கதிர் + ஈன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

 1. கதிரென
 2. கதியீன
 3. கதிரீன
 4. கதிரின்ன

விடை : கதிரீன

குறு வினா

1. பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது யாது?

தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.

2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்

சிறு வினா

உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

 • சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கிறது.
 • அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.
 • முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுபாடின்றி மழை பொழிகின்றது.
 • தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.
 • செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.
 • அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.
 • நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஒலி எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சி தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.

சிந்தனை வினா

உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

உழவுத் தொழில் உயிர்தொழில்

நாகரீகம் என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம் உழவுத்தொழில் செய்தல் வேண்டும். உழவுத்தொழில், அரசுப் பணியில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும் உழவுத்தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப் பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உழவுத்தொழில் நிச்சயம் சிறக்கும்.

கற்பவை கற்றபின்

உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுதஙதி எழுதுக.

மண்பாண்டத் தொழில்

குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களிலிருந்து களிமண்ணை எடத்து வருவர், பெரிய பள்ளம் தோண்டி அதில் களிமண்ணை நிரப்பி தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பர். பிறது அதனுடன் மெல்லி மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவார்கள். பிறகு பானை செய்யும் சக்கரத்தில் வைத்து வேண்டிய வடிவங்களில் அதை உருவாக்குவார்கள். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடத்து காய வைப்பர்.

ஒரளவு காய்ந்ததும், தட்டுப்பலகை கொண்டு தட்டி பானையின் அடிப்பகுதியில் இருக்கும் ஓட்டையை மூடி பானையை முழுமையாக்ககின்றனர். பிறகு வண்ணங்களையும், ஓவியங்களையும் தகுந்தாற்போல வரைகின்றனர்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. _______பதை காக்கும் மாபெரும் சிறப்பு மழைக்கு உண்டு

 1. மண்
 2. வெயில்
 3. காற்று
 4. நெருப்பு

விடை : மண்

2. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் _____________

 1. நெய்தல் தொழில்
 2. மீன்பிடித் தொழில்
 3. மண்பாண்டத் தொழில்
 4. உழவுத் தொழில்

விடை : உழவுத் தொழில்

3. “யாணர்” என்பது குறிக்கும் பொருள் ___________

 1. பழைய வருவாய்
 2. எஞ்சிய வருவாய்
 3. மிஞ்சிய வருவாய்
 4. புதுவருவாய்

விடை : புதுவருவாய்

4. வளம் பெருக பாடல் ___________ மன்னர் பற்றியது

 1. சேரர்
 2. சோழர்
 3. பாண்டியர்
 4. பல்லவர்

விடை : சேரர்

5. தர்மபுரியின் பழைய பெயர் …………… 

 1. மாமண்டூர்
 2. வடுவூர்
 3. தகடூர்
 4. பல்லவர்

விடை : தகடூர்

6. ‘அக்கிளை‘ என்ற சொல்லைப் பிரிதது எழுதக் கிடைப்பது ____________.

 1. அக் + கிளை
 2. அ + கிளை
 3. அக்க + கிளை
 4. அம் + கிளை

விடை : அ + கிளை

7. ‘பெடை + ஓடு‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

 1. பெடையோடு
 2. பெடைஒடு
 3. பெட்டையோடு
 4. பெடையாடு

விடை : பெடையோடு

8. பொருந்தாதை தேர்வு செய்க

 1. வாரி – வருவாய்
 2. எஞ்சாமை – குறைவின்றி
 3. முட்டாது – தட்டுபாடு
 4. ஒட்டாது – வாட்டம்இன்றி

விடை : முட்டாது – தட்டுபாடு

பிரித்தெழுதுக

1. வைகுக அ. ஓசை
2. ஓதை ஆ. தங்குக
3. வெரீஇ இ. அஞ்சி
4. யாணர் ஈ. புதுவருவாய்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு எதற்கு உண்டு?

மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு.

2. மழை நீரின் பணி யாது?

மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment