TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.1 – கல்வி அழகே அழகு

1.1 கல்வி அழகே அழகு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.1 – கல்வி அழகே அழகு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - kalvi alage alagu

8th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குமரகுருபரர்
பெற்றோர் சண்முக சிகாமணி – சிவகாமசுந்தரி
ஊர் ஸ்ரீவைகுண்டம்
காலம் கி.பி. 17-ம் நூற்றாண்டு
படைப்புகள் திருவாரூர் நான்மணிமாலை, கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சொல்லும் பொருளும்

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மறறோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்

– குமரகுருபரர்

சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர
  • வேண்டாவாம் – தேவையில்லை

பாடலின் பொருள்

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அது போலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்கு தேவையில்லை.

நூல் வெளி

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.
  • கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
  • மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
  • நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.
  • இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்கு பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கற்றவருக்கு அழகு தருவது ________

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

விடை : கல்வி

2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

விடை : கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு

விடை : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. கற்றவர்

விடை : கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.

3. அணிகலன்

விடை : மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

குறு வினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
  • ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • நம்முள் புதைந்து கிடைக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  • பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  • துன்பம் வரும் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  • மெய்பொருள் காணும் அறிவைத் தரும்.

கற்பவை கற்றபின்

1. கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.

  • கல்வி கரையில கற்பவர் நாள் சில.
  • கல்வி அழகே அழகு.
  • கத்த(கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
  • நூறு நாள் கத்தது(கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
  • கற்க கசடற.
  • இளமையில் கல்.
  • நூல் பல கல்.

2. கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.

  • கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
    புண்ணுடையோர் கல்லா தவர்

திருக்குறள்

  • நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

பழமொழி

  • மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
    மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்கு
    தன்தேச மல்லால் சிறப்பில்லை
    கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

மூதுரை

3. பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. குமரகுருபரரின் காலம் ________

  1. கி.பி. 15 நூற்றாண்டு
  2. கி.பி. 17 நூற்றாண்டு
  3. கி.பி. 18 நூற்றாண்டு
  4. கி.பி. 16 நூற்றாண்டு

விடை : கி.பி. 17 நூற்றாண்டு

2. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ________

  1. 100
  2. 102
  3. 103
  4. 104

விடை : 102

3. எழில் – பொருள் தரும் சொல் ________

  1. அழகு
  2. வாய்மை
  3. பொய்
  4. நேர்மை

விடை : எழில்

3. அணிகலன் – பொருள் தரும் சொல் ________

  1. அழகு
  2. வனப்பு
  3. கலன் 
  4. பாவை

விடை : கலன்

குறு வினா

1. நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் கூறுக

மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

2. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளது?

நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.

3. குமரகுருபரர் படைப்புகளை எழுதுக?

சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment