TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.4 – தலைக்குள் ஓர் உலகம்

3.4 தலைக்குள் ஓர் உலகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.4 – தலைக்குள் ஓர் உலகம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Thalaikul Oru Ulagam

8th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
  • இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள், அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக்கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றிவர்.
  • மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
  • என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது தலைமைச்செயலகம் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம்.

இடப்பாகச் செயல்

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்கான காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியனா பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள். இடது பாதிதான் பேச எழுத கணக்கிட தர்க்க ரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெலலாம் இடது பகுதி பாரத்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்

இடது பாதி அண்ணன் என்றால் வலது பாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை தொடர்பானவை. எல்லாம் வலது பாதியில் தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளை கையாளுபவர்களாக, கலைத்திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாக திகழ்வர்.

முடிவுரை

இடதும், வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

கற்பவை கற்றபின்

மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.

மூளை நாம் பார்க்கும், கேட்கும், உணரும் செயல்களைச் சேமித்து கொள்கிறது

பதிய வைத்தல்

இதுவே நிகழ்வுகளை நமத நினைவகத்தில் சேமிக்கும் தலம் ஆகும். அதாவது, நமது, புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமத சுற்றுப் புறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன. உதாரணம் : நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும்பொழுது அவரின் நிறம், உருவம், உயரம் போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பும். இந்த தகவல்கள் நமது மூளையில் ஒர நரம்பு செல்லில் இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும். அதாவத இரு செல்களின் இடைவெளியைக் கடக்கும் பொழுது ஒரு வகை வேதியியல் மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்பிற்கு சின்பேச என்று பெயர்.

இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரைப் பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது. இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்த விடாது. ஒரு நபரை மீண்டும் மீண்டும் பாரக்கும் பொழுது அவரைப் பற்றிய தகவல் நம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரைப் பற்றி நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.

இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினைவுகளுக்கும் ஓர் தனி இணைப்பு நம் மூளையில் உருவாகும். இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம், கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூளையில் பதிய வைக்கப்படும். மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது.

கூடுதல் வினாக்கள்

1. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை லிட்டரில் குருதி தேவைப்படுகிறது?

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது.

2. மூளை பார்த்துக் கொள்ளும் வேலை யாது?

தலையின் பகுதியல் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றப்படி கண்களை திறப்பது, தலைமையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் மூளைய பார்த்துக் கொள்கிறது.

3. மூளையின் இடது பாகம் செய்யும் வேலையின் பணி யாது?

  • பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது
  • அறிவாற்றல், பிரச்சனைகளை அலுசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையும் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது.
  • நம் மொழி அறிவு கூட இடது பகுதி ஆகும்.

4. மூளை இடது பாகம் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் எவ்வாறெல்லாம் திகழ்கின்றன?

பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்

5. மறதி என்பது என்ன?

மறதி என்பது சில நினைவுகள், மற்ற நினைவுகளுடன் குறுக்கிட்டு அவற்றை அழிப்பதாகும்.

6. சராசரி மனிதன் எத்தனை கனவுகள் காண்கிறான்?

மூன்று லட்சம்

7. சுஜாதாவின் படைப்பு யாவை?

என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள் தலைமைச்செயலகம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment