TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.2 – வருமுன் காப்போம்

3.2 வருமுன் காப்போம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.2 – வருமுன் காப்போம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Varumun kappom

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

 • நித்தம்  நித்தம் -நாள்தோறும்
 • வையம் – உலகம்
 • மட்டு – அளவு
 • பேணுவயல் – பாதுகாத்தல்
 • சுண்ட – நன்கு
 • திட்டுமுட்டு – தடுமாற்றம்

மனப்பாடப்பகுதி

உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள் இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டக் கும்பிட்டுக்
காலன் ஒடிப் போவானே!

பாடலின் பொருள்

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடலில் உ

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

நூல்வெளி

 • கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
 • முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
 • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
 • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. காந்தியடிகள் ………………. போற்ற வாழ்ந்தார்.

 1. நிலம்
 2. வையம்
 3. களம்
 4. வானம்

விடை : வையம்

2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

 1. நலம் + எல்லாம்
 2. நலன் + எல்லாம்
 3. நலம் + எலாம்
 4. நலன் + எலாம்

விடை : நலம் + எல்லாம்

3. ‘இடம் + எங்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….

 1. இடவெங்கும்
 2. இடம்எங்கும்
 3. இடமெங்கும்
 4. இடம்மெங்கும்

விடை : இடமெங்கும்

“வருமுன்காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை சொற்கள்

 • டமும் – னிய
 • காலை – காற்று
 • ருமை – டையும்
 • சுத்தமுள்ள  – சுகமும்
 • டலின் – லகில்
 • திட்டு – தினமும்

மோனை சொற்கள்

 • லின் – இமும்
 • கூழை – ஏழை
 • சுத்தமுள்ள – நித்தம்
 • திட்டு – மட்டு
 • ருமை – வருமுன்
 • ட்டிடுவாய் – ஓட்டிவிடும்

இயைபு சொற்கள்

 • தினமும் – இடமும்
 • கூழை – ஏழை
 • திட்டு – மட்டு
 • குடியப்பா – உறங்கப்பா
 • உணணாமல் – தின்பாயேல்

குறு வினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?

நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

சிறு வினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக

 • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
 • சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.
 • காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
 • அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
 • நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
 • அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
 • தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
 • அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

சிந்தனை வினா

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

 • உடலின் வலிமைக்கம், நோய் வராமல் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்த ஓட்டம் சீராகும்.
 • உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
 • நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.
 • உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளம் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்தே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

கற்பவை கற்றபின்

சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத தொகுத்து எழுதுக.

 • சுத்தம் சோறு போடும்..
 • கந்தையானாலும் கசக்கி கட்டு.
 • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
 • காற்றக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.
 • காயம் படுமுன் கதறி அழாதே.
 • சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்ய மாட்டான்.
 • ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.
 • ஆள் பாதி ஆடை பாதி
 • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
 • தீங்குகளின் உறைவிடம் சோம்பல்
 • வரும் காப்பதே நலம்
 • கூழானாலும் குளித்துக் குடி
 • வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!
 • சுகமிருந்தால் சுகம் உண்டு
 • சுத்தமான காற்று சுகாதாரமான காற்று

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது _________

 1. புதுமொழி
 2. பழமொழி
 3. சிறுமொழி
 4. அறிவுமொழி

விடை : பழமொழி

2. நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே _________

 1. பொதுவுடைமை
 2. தன்னுடைமை
 3. அறிவுடைமை
 4. அன்புடைமை

விடை : அறிவுடைமை

3. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே _________ நலத்திற்கு அடிப்படை

 1. நல்ல உடல்
 2. அறிவு உடல்
 3. அன்புடல்
 4. துன்ப உடல்

விடை : நல்ல உடல்

4. “கவிமணி” எனப் போற்றப்படுபவர் __________

 1. பாரதிதாசன்
 2. சுரதா
 3. தேசிய விநாயகனார்
 4. பாதியார்

விடை : தேசிய விநாயகனார்

5. “வருமுன் காப்போம்” பாடலை பாடியவர் __________

 1. சுரதா
 2. கவிமணி
 3. பாதியார்
 4. பாரதிதாசன்

விடை : கவிமணி

6. உடலில் உறுதி கொண்டவரே, உலகில் __________ உடையவர்

 1. மகிழ்ச்சி
 2. வீரம்
 3. அன்பு
 4. பரிவு

விடை : மகிழ்ச்சி

7. கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் __________ 

 1. உமர்கய்யாம் பாடல்கள்
 2. ஒரு நதியின் கதை
 3. நல்மொழி
 4. முள்ளும் மலரும்

விடை : உமர்கய்யாம் பாடல்கள்

8. நடைபயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோர் உயிரைக் கவர ____________ அணுகமாட்டான்

 1. வீரன்
 2. எமன்
 3. கள்வன்
 4. வேலன்

விடை : எமன்

9. ‘வையம்’ என்பதற்கு __________ என்பது பொருள்

 1. வீரம்
 2. அன்பு
 3. உலகம்
 4. பரிவு

விடை : உலகம்

10. கவிமணி பிறந்த ஊர் __________

 1. நெல்லை
 2. செங்கை
 3. திருவாரூர்
 4. தேரூர்

விடை : தேரூர்

11. ஆசியஜோதி நூலின் ஆசிரியர் __________

 1. சுரதா
 2. கவிமணி
 3. பாதியார்
 4. பாரதிதாசன்

விடை : கவிமணி

12. கதர் பிறந்த கதை நூலின் ஆசிரியர் __________

 1. கவிமணி
 2. நேரு
 3. பகத்சிங்
 4. காந்தி

விடை : கவிமணி

13. மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் __________

 1. இராமலிங்க அடிகளார்
 2. சோமசுந்தர பாரதி
 3. கவிமணி
 4. பெருஞ்சித்திரனார்

விடை : கவிமணி

பிரித்தெழுதுக

 • உடையவராம் = உடையவர் + ஆம்
 • சுத்தமுள்ள = சுத்தம் + உள்ள
 • குடியப்பா = குடி + அப்பா
 • உறங்கப்பா = உறங்கு + அப்பா
 • நன்னீர் = நன்மை + நீர்
 • தினமும் = தினம் + உம்

குறு வினா

1. எது அறிவுடைமை?

நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை

2. உடல் நலத்திற்கு அடிப்படையானவைகளை கூறுக

 • நல்ல உணவு
 • உடல் தூய்மை
 • உடற்பயிற்சி

3. உடலில் உறுதி கொண்டவர் உலகில் எதனை உடையவர்?

உடலில் உறுதி கொண்டவர் உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்

4. குளித்த பிறகு குடிக்க வேண்டுமென கவிமணி கூறுவது என்ன?

கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடிக்க வேண்டும் என கவிமணி கூறுகிறார்.

5. தூய்மையைப் போற்றி பாதுகாத்தால் எதனைப் பெறலாம்?

தூய்மையைப் போற்றி பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

6. எமன் யாரை அணுக மாட்டான்?

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை எமனும் அணுக மாட்டான்.

7. தேசிய விநாயகனார் நூறாண்டு வாழ கூறும் வழி யாது?

 • தூய்மையான காற்று
 • நல்ல குடிநீர்
 • நன்கு பசித்த பிறகு உணவு

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment