TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.2 – தமிழ்மொழி மரபு

1.2 தமிழ்மொழி மரபு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.2 – தமிழ்மொழி மரபு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - tamilmozhi marabu

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • விசும்பு – வானம்
  • மரபு – வழக்கம்
  • மயக்கம் – கலவை
  • திரிதல் – மாறுபடுதல்
  • இருதிணை – உயர்திணை, அஃறிணை
  • செய்யுள் – பாட்டு
  • வழாஅமை – தவறாமை
  • தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  • ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

பாடலின் பொருள்

இவவுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும் . உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுததிக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும்பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

நூல் வெளி

  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
  • பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இஙகுத் தரப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இளமைப்  பெயர்கள்

  • புலி – பறழ்
  • சிங்கம் – குருளை
  • யானை – கன்று
  • பசு – கன்று
  • கரடி – குட்டி

ஒலி மரபுகள்

  • புலி – உறுமும்
  • சிங்கம் – முழங்கும்
  • யானை – பிளிறும்
  • பசு – கதறும்
  • கரடி – கத்தும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பறவைகள் ……………. பறந்து செல்கின்றன.

  1. நிலத்தில்
  2. விசும்பில்
  3. மரத்தில்
  4. நீரில்

விடை : விசும்பில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் …………….

  1. மரபு
  2. பொழுது
  3. வரவு
  4. தகவு

விடை : மரபு

3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..

  1. இரண்டு + திணை
  2. இரு + திணை
  3. இருவர் + திணை
  4. இருந்து + திணை

விடை : இரண்டு + திணை

4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. ஐம் + பால்
  2. ஐந்து + பால்
  3. ஐம்பது + பால்
  4. ஐ + பால்

விடை : ஐந்து + பால்

குறுவினா

1. உலகம் எவற்றால் ஆனது?

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்

சிந்தனை வினா

நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

மனிதன் தன் வாழ்நாளில் நல்லமுறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்தற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைபிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாக பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் மரபுகளை பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத் தான் இருக்கும் என் கருதுகிறேன்.

கற்பவை கற்றபின்

1. பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.

  • காகம் கரையும்.
  • கிளி பேசும்
  • குயில் கூவும்
  • ஆந்தை அலறும்
  • கூகை குழறும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • மயில் அகவும்
  • வண்டு முரலும்

2. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.

  • நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி
  • தீ – நெருப்பு, கொள்ளி, அக்கினி, கனல், அனல்
  • நீர் – தண்ணீர், வெள்ளம், புனல்
  • வளி – காற்று, வாயு, தென்றல், பயுல்
  • விசும்பு – ஆகாயம், வானம், விண்

3. ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை _________ எனப்படும்.

  1. செல்வம்
  2. ஒழுக்கம்
  3. அறிவு
  4. சிறப்பு

விடை : ஒழுக்கம்

2. மொழிக்குரிய ஒழுங்குமுறை _________ எனப்படும்.

  1. செல்வம்
  2. அறிவு
  3. சிறப்பு
  4. மரபு

விடை : மரபு

3. திணை _________ வகைப்படும்.

  1. 5
  2. 3
  3. 4
  4. 2

விடை : 2

4. தொல்காப்பியர் எழுதிய நூலின் பெயர் _________

  1. தேன்மழை
  2. ஊரும் பேரும்
  3. தொல்காப்பியம்
  4. கல்லும் மண்ணும்

விடை : தொல்காப்பியம்

5. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _________  ஆகும்.

  1. திருக்குறள்
  2. தொல்காப்பியம்
  3. நன்னூல்
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

7. தொல்காப்பியம் _________ அதிகாரங்களை கொண்டுள்ளது.

  1. 4
  2. 2
  3. 5
  4. 3

விடை : 3

8. _________ மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி தொல்காப்பியம் கூறுகிறது.

  1. செய்யுளுக்கும்
  2. உரைநடைக்கும்
  3. சிறுகதைக்கும்
  4. பெருங்கதைக்கும்

விடை : செய்யுளுக்கும்

9. எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பதை _________ என்பர்

  1. குறில்
  2. நெடில்
  3. ஆய்தம்
  4. அளபெடை

விடை : அளபெடை

10. இவ்வுலகம் _________ ஆல் ஆனவை

  1. நீர்
  2. நிலம்
  3. காற்று
  4. ஐம்பூதங்கள்

விடை : ஐம்பூதங்கள்

11. இளமை பெயர்களுள் பொருத்தாதது

  1. புலி – பறழ்
  2. சிங்கம் – குருளை
  3. பசு – குட்டி
  4. யானை – கன்று

விடை : பசு – குட்டி

12. ஒலி மரபுகளுள் பொருத்தாதது

  1. புலி – உறுமும்
  2. யானை – கத்தும்
  3. சிங்கம் – முழங்கும்
  4. பசு – கதறும்

விடை : யானை – கத்தும்

குறு வினா

1. ஒழுக்கம் என்பது யாது?

வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும்.

2. மரபு என்பது யாது?

மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்.

3. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

4. இரு திணைகள் யாவை?

உயர்திணை, அஃறிணை

5. தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களை எழுதுக?

எழுத்து, சாெல், பொருள்

6. தமிழின் மரபு யாது?

உலகத்து பொருள்களை இரு திணையாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு ஆகும்

7. உயிரளபெடை என்பதன் விளக்கம் யாது?

செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment