TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.1 – தமிழ்மொழி வாழ்த்து

1.1 தமிழ்மொழி வாழ்த்து

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.1 – தமிழ்மொழி வாழ்த்து.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - tamilthai valthu

8th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் பாரதியார்
இயற்பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியன்
பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்
பிறப்பு 11.12.1882 (எட்டயபுரம்)
படைப்புகள் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு
புகழ்மொழி சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்

மனப்பாடப்பகுதி

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!

– பாரதியார்

சொல்லும் பொருளும்

  • நிரந்தரம் – காலம் முழுமையும்
  • வண்மொழி – வளமிக்கமொழி
  • வைப்பு – நிலப்பகுதி
  • இசை – புகழ்
  • சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • தொல்லை – பழமை, துன்பம்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்கலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிநது உரக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மமொழி வாழ்க! எங்கள் தமிழ்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறைப்படைக!  பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

நூல் வெளி

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
  • இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _________

  1. வைப்பு
  2. கடல்
  3. பரவை
  4. ஆழி

விடை : வைப்பு

2. “என்றென்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. என் + றென்றும்
  2. என்று + என்றும்
  3. என்றும் + என்றும்
  4. என் + என்றும்

விடை : என்று + என்றும்

3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. வான + மளந்தது
  2. வான் + அளந்தது
  3. வானம் + அளந்தது
  4. வான் + மளந்தது

விடை : வானம் + அளந்தது

4. ‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________

  1. அறிந்ததுஅனைத்தும்
  2. அறிந்தனைத்தும்
  3. அறிந்ததனைத்தும்
  4. அறிந்துனைத்தும்

விடை : அறிந்தனைத்தும்

5. ‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. வானம்அறிந்து
  2. வான்அறிந்த
  3. வானமறிந்த
  4. வான்மறிந்

விடை : வானமறிந்த

“தமிழ்மொழி வாழ்த்து” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

  • வாழ்க – வாழிய
  • ண்மொழி – ளர்மொழி
  • ங்கள் – ன்றென்றும்
  • கன்று – றிந்த

குறு வினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

சிறு வினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

  • எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
  • எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!
  • உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க
  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

சிந்தனை வினா

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

  • நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொணடிருக்கும் ஒரே மொழி நம் தமிழ்மொழி தான்.
  • தமிழ்மொழி ஒன்று தான் வாழ்வுக்கே இல்கணம் அமைந்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையைேய “அகம்” “புறம்” என இருவகைப்படுத்தி இலக்கணங்கண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு
  • இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் தமிழை ___________ ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்

  1. உயிர்
  2. அறிவு
  3. புத்தி
  4. தலை

விடை : உயிர்

2. ___________ அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே

  1. கடல்
  2. வானம்
  3. பூமி
  4. நாடு

விடை : வானம்

3. “புகழ்” என பொருள் பொருள் தரும் சொல் ___________

  1. கருவி
  2. இசை
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : புகழ்

4. வானமளந்து அனைத்தும் அளந்திடு ……………….. வாழியவே.

  1. வண்மொழி
  2. பண்மொழி
  3. தன்மொழி
  4. செம்மொழி

விடை : வண்மொழி

5. “விஜயா, இந்தியா” என்ற இதழ்களை நடத்தியவர் ……………….

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. வாணிதாசன்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

6. பாரதியார் நூலகளுள் பொருந்தாதது.

  1. பாஞ்சாலி சபதம்
  2. கண்ணன் பாட்டு
  3. குயில் பாட்டு
  4. பிசிராந்தையர்

விடை : பிசிராந்தையர்

7. சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர், தமிழ்தேனீ என்றெல்லாம் பாரதியாரை பாராட்டியவர் …………………….

  1. பாரதிதாசன்
  2. திரு.வி.க.
  3. சுரதா
  4. வாணிதான்

விடை : பாரதிதாசன்

8. “வண்மொழி” என்று என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது

  1. வண் + மொழி
  2. வாண் + மொழி
  3. வளமை + மொழி
  4. வண்மை + மொழி

விடை : வண்மை + மொழி

9. “ஏழ்கடல்” என்று என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது

  1. ஏழ் + கடல்
  2. ஏழ்மை + கடல்
  3. ஏழு + கடல்
  4. எளிமை + கடல்

விடை : ஏழு + கடல்

10. “வானமளந்து” என்று என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது

  1. வான + மளந்து
  2. வானம் + அளந்து
  3. வானம + ளந்து
  4. வானம் + ஆளந்து

விடை : வானம் + அளந்து

11. “வளர் + மொழி” என்று என்னும் சொல்லை சேர்த்தெழுக் கிடைப்பது

  1. வளர்மொழி
  2. வளமைமொழி
  3. வளமொழி
  4. வளர்ந்தமொழி

விடை : வளர்மொழி

12. “சீட்டு + கவி” என்று என்னும் சொல்லை சேர்த்தெழுக் கிடைப்பது

  1. சீட்டுகவி
  2. சீட்டுக்கவி
  3. சீடைக்கவி
  4. சீட்கவி

விடை : சீட்டுக்கவி

13. “சிந்தனை + ஆளர்” என்று என்னும் சொல்லை சேர்த்தெழுக் கிடைப்பது

  1. சிந்தனை ஆளர்
  2. சிந்தனையாளர்
  3. சிந்தனைஎளர்
  4. சிந்தனைஆளர்

விடை : சிந்தனையாளர்

குறு வினா

1. மொழி – வரையறு

மொழி, கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.

2. தமிழர்கள் எதனை உயிராக கருதிப் போற்றி வந்துள்ளனர்?

தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.

3. ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் மொழி எது?

ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் மொழி தமிழ்மொழியாகும்.

4. எது உள்ள வரையிலும் வாழ வேண்டும்?

எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ வேண்டும்.

5. உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டுமென பாரதியார் கூறுவதென்ன?

தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டுமென பாரதியார் கூறுகிறார்.

6. பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

இந்தியா, விஜயா

7. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

சந்திரைகையின் கதை, தராசு

8.  பாரதியாரை எவ்வாறெல்லாம் பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்?

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment