TN 7th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.3 – ஒப்புரவு நெறி

2.3 ஒப்புரவு நெறி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.3 – ஒப்புரவு நெறி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Aram ennnu kathir

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்
நடத்திய இதழ்கள் அருளோசை, அறிக அறிவியல்
படைப்பு நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்

நூல்வெளி

 • மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
 • குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
 • திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள்கடமையாகக் கொண்டவர்.
 • நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
 • அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
 • ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ________ நெறி

 1. தனியுடமை
 2. பொதுவுடமை
 3. பொருளுடைமை
 4. ஒழுக்கமுடைமை

விடை : பொதுவுடமை

2. செல்வத்தின் பயன் ________ வாழ்வு.

 1. ஆடம்பர
 2. நீண்ட
 3. ஒப்புரவு
 4. நோயற்ற

விடை : ஒப்புரவு

3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்.

 1. மருந்து
 2. மருத்துவர்
 3. மருத்துவமனை
 4. மாத்திரை

விடை : மருந்து

4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________.

 1. பாரதியார்
 2. பாரதிதாசன்
 3. முடியரசன்
 4. கண்ணதாசன்

விடை : பாரதிதாசன்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

1. எளிது அ. புரவலர்
2. ஈதல் ஆ. அரிது
3. அந்நியர் இ. ஏற்றல்
4. இரவலர் ஈ. உறவினர்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. குறிக்கோள்

 • விளையாட்டு வெற்றியை குறிக்கோளாக வைத்து விளையாட வேண்டும்

2. கடமைகள்

 • நம் வீட்டில் தந்தைக்கு பல கடமைகளை நமக்காக புரிவார்

3. வாழ்நாள்

 • தம் வாழ்நாள் முழுவதும் அன்னை தெரசா சமூக நலனுக்காகவே அர்ப்பணித்தார்

4. சிந்தித்து

 • சிந்தித்து செயல்பட்டால் வாழ்வில் பல துன்பங்களை வெல்லலாம்

குறு வினா

1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?

பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்

2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?

மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.

சிறு வினா

1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?

ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.

தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே!

சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒரு வகையில் வாணிகம் போலத்தான்.

அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.

2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?

ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது. அதைத் தடுப்போர் யாருமில்லை.

ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன் மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.

பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.

மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப் பெறுகிறது.

நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.

சிந்தனை வினா

ஒப்புரவுக்கும் உதவி செய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?

உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு. இல்லை என்று கேட்போருக்கு நாம் அவருக்குத் தேவையானதைத் கொடுப்பது உதவி செய்தல். ஒப்புரவில் பெறுவர் உறவினர். உதவி செய்வதில் பெறுபவர் ஏழைகள் அனைவரும்.

கற்பவை கற்றபின்

பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.

 • பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகிய ஏழு வள்ளல்கள் பிறருக்காக தம் வாழ்நாள் முழுவதம் வாழ்ந்தவர்கள்.
 • சீதக்காதி ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்.
 • காந்தியடிகள் நம் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்.
 • அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர்.
 • அன்னை தெராசா தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்காகவே வாழந்தவர்.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதர்கள் ________ வாழப் பிறந்தவர்கள் அல்லர்.

 1. கூடி
 2. ஒடி
 3. சேர்ந்து
 4. தனித்து

விடை : தனித்து

2. ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது _______

 1. திருக்குறள்
 2. நாலடியார்
 3. புறநானூறு
 4. பழமொழி

விடை : திருக்குறள்

3. ஊருளி, பயன்மரம் பற்றி குறிப்பிடும் நூல் _______

 1. நாலடியார்
 2. திருக்குறள்
 3. புறநானூறு
 4. பழமொழி

விடை : திருக்குறள்

4. வாழ்க்கையின் கருவி ________

 1. ஓப்புரவு
 2. வறுமை
 3. மருந்து
 4. பொருள்

விடை : பொருள்

5. ஊருணியை அகழ்ந்தவன் ________

 1. திருவள்ளூவர்
 2. அப்பரடிகள்
 3. மனிதன்
 4. வள்ளல்

விடை : மனிதன்

6. செல்வத்தப் பயன் ________ வாழ்க்கை

 1. வறுமை
 2. பொருள்
 3. மருந்து
 4. ஒப்புரவு

விடை : ஒப்புரவு

குறு வினா

1. மனிதர்கள் தம் படைப்பாற்றல் கொண்டு படைத்தவையாக குன்றக்குடி அடிகளார் கூறுவன யாவை?

ஊருணி, பயன்மரம், மருந்துமரம்

2. திருவள்ளுவரின் வாழும் நெறி யாது?

ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும்
பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.

3. ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படுவது எது?

உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

4. குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள் யாவை?

நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்

5. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் யாவை?

அருளோசை, அறிக அறிவியல்

6. நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது எதனைப் போன்றது?

நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment