3.3 பேசும் ஓவியங்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.3 – பேசும் ஓவியங்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.
- மண்துகள்
- நீர் வண்ணம்
- எண்ணெய் வண்ணம்
- கரிக்கோல்
விடை : மண்துகள்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ________.
- குகை ஓவியம்
- சுவர் ஓவியம்
- கண்ணாடி ஓவியம்
- கேலிச்சித்திரம்
விடை : கேலிச்சித்திரம்
3. ‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- கோடு + ஓவியம்
- கோட்டு + ஓவியம்
- கோட் + டோவியம்
- கோடி + ஓவியம்
விடை : கோட்டு + ஓவியம்
4. ‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- செப்பு + ஈடு
- செப்பு + ஓடு
- செப்பு + ஏடு
- செப்பு + யேடு
விடை : செப்பு + ஏடு
5. ‘எழுத்து + ஆணி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
- எழுத்துஆணி
- எழுத்தாணி
- எழுத்துதாணி
- எழுதாணி
விடை : எழுத்துதாணி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _________
விடை : பாரதியார்
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது _________
விடை : துணி ஓவியம்
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் __________ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
விடை : செப்பேடுகளில்
குறு வினா
1. ஓவியங்களின் வகைகள் யாவை?
|
|
2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.
3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய், வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவர்
4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் ஆகும்
5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
நீர்நிலைகள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்
சிறு வினா
1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை கேலிச்சித்திரம் என்பர்
2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
- ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்
- இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளை கொண்டு இருக்கும்.
- இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகிறது.
சிந்தனை வினா
தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
யானைத் தந்தங்களின் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. எனவே கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.
கற்பவை கற்றபின்
இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
- மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது
- அன்னம் – சோறு, பறவை
- மதி – அறிவு, நிலம்
- நகை – புன்னகை, அணிகலம்
- மெய் – உடல், உண்மை
- திங்கள் – மாதம், நிலவு
- மாடு – விலங்கு, செல்வம்
- தை – மாதம், தைத்தல்
- பார் – உலகம், பார்த்தல்
- திரை – கடல் அலை, திரைச்சீலை
- படி – படித்தல், படிக்கட்டு
- இசை – புகழ், சங்கீதம்
- வேங்கை – மரம், விலங்கு
- கிளை – மரக்கிளை, பெரிய
- மா – மாமரம், பெரிய
- மறை – மறைத்தல், வேதம்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையை தேர்ந்தெடு
1. ஆயக்கலைகள் ……….
- 62
- 96
- 64
- 63
விடை : 64
2. குகை ஓவியம் ____________ அறிந்து கொள்ள உதவுகிறது
- பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை
- பழந்தமிழர்களின் வேளாண்மை முறையை
- பழந்தமிழர்களின் உணவு முறையை
- பழந்தமிழர்களின் உடை முறையை
விடை : பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை
3. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம் ____________
- மாமல்லபுரம்
- தஞ்சை பெரிய கோவில்
- கொற்கை
- பூம்புகார்
விடை : தஞ்சை பெரிய கோவில்
4. தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ………………..
- சுவர் ஓவியம்
- ஓலைச்சுவடி ஓவியம்
- செப்பேட்டு ஓவியம்
- துணி ஓவியம்
விடை : துணி ஓவியம்
5. தந்த ஓவியங்கள் அதிகம் காணப்படும் இடம் ____________
- தமிழ்நாடு
- ஆந்திர
- கேரளா
- தெலுங்கா
விடை : கேரளா
6. கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் …………….
- தஞ்சாவூர்
- கோவை
- தஞ்சாவூர்
- ஆந்திரா
விடை : தஞ்சாவூர்
7. கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளி வந்த இதழ் …………
- விடுதலை
- எழுத்து
- இந்தியா
- கழையானி
விடை : இந்தியா
8. அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் போன்றவற்றின்
சுவர்களிலும் மேற்கூரைகளிலும் காணப்படும் ஓவியங்கள் _____________
- துணி ஓவியம்
- சுவர் ஓவியம்
- ஓலைச்சுவடி ஓவியம்
- செப்பேட்டு ஓவியம்
விடை : சுவர் ஓவியம்
9. ஓலைச்சுவடி ஓவியங்கள் _____________ காணலாம்
- திருவனந்தபுரம் நடுவன் நூலகத்தில்
- தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில்
- கன்னிமாரா நூலகத்தில்
- கொல்கத்தா தேசிய நூலகத்தில்
விடை : சுவர் ஓவியம்
10. ஓவியத்தை குறிக்கும் சொற்களில் பொருந்தாதவை
- ஓவம்
- படாம்
- படம்
- பாடம்
விடை : பாடம்
குறு வினா
1. ஓவியக்கலையை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் காரணம் யாது?
ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். எனவேதான்
ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர்.
2. கலம்காரி ஓவியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றன?
- தமிழகம்
- ஆந்திரா
3. ஓவியம் வரையப் பயன்படும் துணியின் வேறு பெயர்கள் யாவை?
எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
4. ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் யாவை?
|
|
5. பசார் பெயிண்டிங் என்றால் என்ன?
நாட்காட்டி ஓவியங்கள் பசார் பெயிண்டிங் என்பர். இதன் முன்னோடி கொண்டையராஜூ
6. புனையா ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கியங்கள் யாவை?
நெடுநெல்வாடை, மணிமேகலை
7. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக்கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
இராஜா இரவிவர்மா.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…