TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.3 – தமிழரின் கப்பற்கலை

1.3 தமிழரின் கப்பற்கலை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.3 – தமிழரின் கப்பற்கலை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - tamilarkalin kaparkalai

7th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ________

  1. கலம்
  2. வங்கம்
  3. நாவாய்
  4. ஓடம்

விடை : ஓடம்

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை _______ வழக்கம் என்று கூறுகிறது.

  1. நன்னீர்
  2. தண்ணீர்
  3. முந்நீர்
  4. கண்ணீர்

விடை : முந்நீர்

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி _______

  1. சுக்கான்
  2. நங்கூரம்
  3. கண்ணடை
  4. சமுக்கு

விடை : சுக்கான்

கோடிட்ட இடங்ளை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _____________ என அழைக்கப்படும்.

விடை : தொகுதி

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது _____________

விடை : நங்கூரம்

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் _______________ எனக் குறிப்பிடப்படும்.

விடை : கண்ணடை

பொருத்துக.

1. எரா அ. திசைகாட்டும் கருவி
2. பருமல் ஆ. அடிமரம்
3. மீகாமன் இ. குறுக்கு மரம்
4. காந்தஊசி ஈ. கப்பலைச் செலுத்துபவர்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம் 

  • ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்

2. காற்றின் திசை

  • கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்

3. வானியல் அறிவு

  • தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்

4. ஏற்றுமதி

  • துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன

குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து தோண்டப்பட்டவை தோணி எனப்பட்டன.

2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

  • ஏரா
  • பருமல்
  • நங்கூரம்
  • கூம்பு
  • வங்கு
  • சுக்கான்
  • பாய்மரம்

சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

  • தோணி
  • ஓடம்
  • படகு
  • புணை
  • மிதவை
  • தெப்பம்

ஆகியவை சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

  • கலம்
  • வங்கம்
  • நாவாய்

ஆகியவை கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

  • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர் .
  • திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
  • கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.
  • கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

  • கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.
  • நீர் மட்ட வைப்பிற்கு வேம்ப், இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்கு தேக்கு, வெண் தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.
  • சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.
  • மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.
  • சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்ட காலம் உழைத்தன.
  • இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மர ஆணிகளைப் பயன்படுத்தினர்.

சிந்தனை வினா

இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

  • கப்பலில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் நீண்ட நாளட்கள் பயணம் செய்ய வேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
  • அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை.
  • கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
  • அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.

போன்ற காரணங்களால்  இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடற்பயணத்தை பெரிதும் மேற்கொள்ளவில்லை.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்த்தெடு

1. பூம்புகார் துறைமுத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறும் நூல் __________

  1. திருக்குறள்
  2. பட்டினப்பாலை
  3. பதிற்றுப்பத்து
  4. சேந்தன் திவாகரம்

விடை : பட்டினப்பாலை

2. பலவகையான கப்பல்களின் பெயரைக் குறிப்பிடும் நூல் __________

  1. சேந்தன் திவாகரம்
  2. திருக்குறள்
  3. பட்டினப்பாலை
  4. பதிற்றுப்பத்து

விடை : சேந்தன் திவாகரம்

3. மரத்தினால் ஆன ஆணி __________

  1. கண்ணடை
  2. கம்மியர்
  3. தச்சுமுழம்
  4. தொகுதி

விடை : தொகுதி

4. பழந்தமிழர் __________ வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி கடல்பயணம் செய்திருக்கலாம்.

  1. குதிரைகள்
  2. ஆமைகள்
  3. யானைகள்
  4. மரங்கள்

விடை : ஆமைகள்

5. “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்”
என்று பெரிய கப்பலை குறிப்பிடும் நூல் ______________

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. மலைபடுகடாம்
  4. குறிஞ்சிபாட்டு

விடை : அகநானூறு

5. கப்பல் கட்டும் கலைஞர்கள் ______________ என்று அழைக்கப்பட்டனர்.

  1. மீனவர்
  2. கம்மியர்
  3. கலைஞர்
  4. தலைவர்

விடை : கம்மியர்

5. கப்பல் கட்டும் கலைஞர்கள் ______________ என்று அழைக்கப்பட்டனர்.

  1. மீனவர்
  2. கம்மியர்
  3. கலைஞர்
  4. தலைவர்

விடை : கம்மியர்

6 “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” என்ற அடி இடம் பெற்றுள்ள நூல் ___________

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. குண்டலகேசி

விடை : மணிமேகலை

6 “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக என்னும் புறப்பாடல் அடிகளை எழுதியவர் ___________

  1. வெண்ணிக்குயத்தியார்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : வெண்ணிக்குயத்தியார்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.  தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் __________ நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

விடை : கட்டும் கலையை

2. வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை _____________ ஆகும்.

விடை : கப்பல்கள்

3.கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் ______________  ஆகும்.

விடை : உருவங்கள்

4. தொல்காப்பியம் கடற்பயணத்தைக் ______________ என்று குறிப்பிடுகிறது.

விடை : முந்நீர் வழக்கம்

5.மார்க்கோபோலா __________ நாட்டு கடற்பயணி

விடை : இத்தாலி

6. ___________ செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன.

விடை : காற்றின் உதவியால்

குறு வினா

1. தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்து பட்ட அறிவு பெற்றிருந்தனர் என்பதை விளக்கும் நூல்கள் யாவை?

  • திருக்குறள்
  • பட்டினப்பாலை
  • அகநானூறு
  • பதிற்றுப்பத்து
  • சேந்தன் திவாகரம்

2. கலங்கரை விளக்கம் என்பது யாது?

கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

3. தமிழர்கள் அயல்நாட்டுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்கு சான்று ஒன்று தருக.

நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

4. நீர்வழிப் பயணத்தின வகைகளை எழுதுக?

உள்நாட்டு நீர் வழிப் பயணம், கடல் வழிப் பயணம்

5. கட்டுமரங்கள் என்பது என்ன?

மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின மீது ஏறிப் பயணம் செய்வதை கட்டுமரங்கள் எனப்படும்

5. பெரிய கப்பற்படை கொண்டு பல நாடுகள் வென்ற சோழர்கள் யாவர்?

இராசராச சோழன், இராசேந்திர சோழன்

6. கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றால் என்ன?

கரிமுக அம்பி : பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை தலையை போன்று வடிவமைப்பதாகும்

பரிமுக அம்பி : பெரிய படகுகளில் முன்பக்கத்தை குதிரை தலையை போன்று வடிவமைப்பதாகும்

7. தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?

பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப்பாய்மரம்,  கோசுப்பாய்மரம்

8. கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் பெயர்களை கூறுக

மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

சிறு வினா

1. தமிழர் கட்டிய கப்பல்கள் கட்டுவதை குறித்கு வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியதென்ன?

  • “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.
  • ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

2. பாய்மரங்களைக் கட்டும் கயிற்றின் வகைகள் யாவை?

  • ஆஞ்சான் கயிறு
  • தாம்பாங்கயிறு
  • வேடாங்கயிறு
  • பளிங்கைக்கயிறு
  • மூட்டாங்கயிறு
  • இளங்கயிறு
  • கோடிப்பாய்கயிறு

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment