TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.5 – குற்றியலுகரம், குற்றியலிகரம்

1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.5 – குற்றியலுகரம், குற்றியலிகரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Kutriyalugaram kutriyaligaram

7th Std Tamil Text Book – Download

கற்றவை கற்றபின்

ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.

எண்ணுப்பெயர்கள்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து

குற்றியலுகரச் சொற்கள்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து

குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

வன்தொடர் குற்றியலுகரம்

  • மூன்று
  • எட்டு
  • பத்து

மென்தொடர் குற்றியலுகரம்

  • ஒன்று
  • இரண்டு
  • நான்கு
  • ஐந்து
  • ஒன்பது

உயிர்த் தொடர் குற்றியலுகரம்

  • ஆறு

குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடி

எண்ணுப்பெயர்கள் மாத்திரை அளவு
ஒன்று 1 + ½ + ½ = 2
இரண்டு 1 + 1 + ½ + ½ = 3
மூன்று 2 + ½ + ½ = 3
நான்கு 2 + ½ + ½ = 3
ஐந்து 2 + ½ + ½ = 3
ஆறு 2 + ½ = 2½
ஏழு 2 + 1 = 3
எட்டு 1 + ½ + ½ = 2
ஒன்பது 1 + ½ + 1 + ½ = 3
பத்து 1 + ½ + ½ = 2

கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.

  • கு – பாகு, வாகு
  • டு – பாடு, சாடு, ஓடு, விடு
  • சு – காசு, வீசு, பேசு
  • து – வாது, கேது, சாது, மாது
  • று – வறு, சேறு, செறு

மதீப்பீடு

குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படு

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

  • நெடில் தொடர் – காசு
  • ஆய்தத் தொடர் – எஃகு
  • உயிர்த் தொடர் – ஆறு, ஏடு, விறகு
  • வன் தொடர் – உழக்கு, எட்டு
  • மென் தொடர் – பந்து, கரும்பு
  • இடைத் தொடர் – கொய்து

பொருந்தாத சொற்களை எழுதுக.

1. பசு, விடு, ஆறு, கரு

  • கரு

2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

  • பஞ்சு

3. ஆறு, மாசு, பாகு, அது

  • அது

4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு

  • அரசு

5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

  • எஃகு

குறுவினா

1. ’குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்

குற்றியலுகம் = குறுமை + இயல் + உகரம்

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

கூடுதல் வினாக்கள்

1. முற்றியலுகரம் என்பது என்ன?

ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்

(எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

2. கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளை எழுதுக

  • குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ – (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
  • நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ –  (எ.கா.) ஐகான், ஔகான்
  • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ – (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
  • ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’ – (எ.கா.) அஃகேனம

3. நெடில்தொடர் குற்றியலுகரம் என்பது யாது?

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .

3. இடைத்தொடர் குற்றியலுகரம் என்பது யாது?

இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந் து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

4. தமிழ் எழுத்துக்களின் வகைகள் எழுது?

  • முதலெழுத்து
  • சார்பெழுத்து

5. சார்பெழுத்துக்களின் வகைகளை எழுதுக?

  • உயிரமெய்,
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்
  • ஐகாரக்குறுக்கம்
  • ஒளகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்,
  • ஆய்தக்குறுக்கம்

12. குற்றியலுகரச் சொற்கள் அல்லாதவை யாவை ?

  • ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
  • மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

மொழியை ஆள்வோம்

வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

கோதை கவிதையைப் படித்தாள்

வினா அழுத்தம் தர வேண்டிய சொல்
கோதை எதைப் படித்தாள்? எதைப்
கவிதையைப் படித்தது யார்? யார்
கோதை கவிதையை என்ன செய்தாள்?   என்ன

படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக

7th Standard Tamil Guide - Kutriyalugaram kutriyaligaram - Poruthamana Thinaiyai eluthu 7th Standard Tamil Guide - Kutriyalugaram kutriyaligaram - Poruthamana Thinaiyai eluthu
உயர்திணை – ஆண்பால் அஃறிணை – ஒன்றன்பால் உயர்திணை –  பெண்பால்

உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்து

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்

உயர்திணை

  • முகிலன்
  • கயல்விழி
  • தலைவி
  • ஆசிரியர்
  • சுரதா

அஃறிணை

  • வயல்
  • குதிரை
  • கடல்
  • புத்தகம்
  • மரம்

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

1. இருதிணை

  • உயர்திணை
  • அஃறிணை

2. முக்கனி

  • மா
  • பலா
  • வாழை

3. முத்தமிழ்

  • இயல்
  • இசை
  • நாடகம்

4. நாற்றிசை

  • கிழக்கு
  • மேற்கு
  • வடக்கு
  • தெற்கு

5. ஐவகைநிலம்

  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
  • பாலை

6. அறுசுவை

  • இனிப்பு
  • புளிப்பு
  • உவர்ப்பு
  • கசப்பு
  • கார்ப்பு
  • துவர்ப்பு

கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.

7th Standard Tamil Guide - Kutriyalugaram kutriyaligaram - Oru Sol Varumaru Kattidangal Eluthuga

7th Standard Tamil Guide - Kutriyalugaram kutriyaligaram - Oru Sol Varumaru Kattidangal Eluthuga

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

எ.கா

அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.

1. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.

2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை.

3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்

4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர் .
குழந்தையை மெதுவாக நட என்போம்.

5. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு.

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • ஊடகம் – Media
  • பருவ இதழ் – Magazine
  • மொழியியல் – Linguistics
  • பொம்மலாட்டம் – Puppetry
  • ஒலியியல் – Phonology
  • எழுத்திலக்கணம் – Orthography
  • இதழியல் – Journalism
  • உரையாடல் – Dialogue

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment