TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.2 – ஒன்றல்ல இரண்டல்ல

1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.2 – ஒன்றல்ல இரண்டல்ல.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Ondrala Irandala

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உடுமலை நாராயணகவி
இயற்பெயர் நாராயணசாமி
காலம் 25.09.1999- 23.05.1981
சிறப்புப்பெயர் பகுத்தறிவுக் கவிராயர்
சிறப்பு திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
படைப்புகள் கலைமாமணி, 31.12.2008 அஞ்சல் தலை வெளியீடு, உடுமலைப்பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தை தமிழக அரசு நிறுவியுள்ளது.

சொல்லும் பொருளும்

  • ஒப்புமை – இணை
  • முகில் – மேகம்
  • அற்புதம் – விந்தை
  • உபகாரி – வள்ளல்
  • சொல்ல – கூற
  • தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று
  • கவி – கவிஞன் (அ) புலவன்
  • அருள் – இரக்கம்

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

நூல் வெளி

  • பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
  • இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

  1. கலம்பகம்
  2. பரிபாடல்
  3. பரணி
  4. அந்தாதி

விடை : பரணி

2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

  1. அகில்
  2. முகில்
  3. துகில்
  4. துயில்

விடை : முகில்

3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. இரண்டு + டல்ல
  2. இரண் + அல்ல
  3. இரண்டு + இல்ல
  4. இரண்டு + அல்ல

விடை : இரண்டு + அல்ல

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. தந்து + உதவும்
  2. தா + உதவும்
  3. தந்து + தவும்
  4. தந்த + உதவும்

விடை : தந்து + உதவும்

5. ‘ஒப்புமை + இல்லாத’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. ஒப்புமைஇல்லாத
  2. ஒப்பில்லாத
  3. ஒப்புமையில்லாத
  4. ஒப்புஇல

விடை : ஒப்புமையில்லாத

குறு வினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறு வினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர்  கூறுகிறார்

சிந்தனை வினா

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

  • சங்க காலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
  • கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலை தூக்கின.
  • தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
  • குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.

எனவே, தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கற்பவை கற்றபின்

1. தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.

  • தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம்.
  • அதியன் (ஒளவைக்கு உதவியவளன்)
  • யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறுநூறு தொகுப்பித்தவன்)
  • பூரிக்கோ (குறுந்தொகையை தொகுப்பித்தவன்)
  • பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்)
  • பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்)
  • சடையப்ப வள்ளல் (கம்மராமாயணம் எழுத உதவியவர்)
  • சீதக்காதி, அபுல்காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்)
  • சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்)

2. தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

  • கீழ்கணக்கு
  • மேல்கணக்கு
  • அறஇலக்கியம்
  • பெருங்காப்பியம்
  • சிறுகாப்பியம்
  • சிறுகதை
  • மரபுக்கவிதை
  • புதுக்கவிதை
  • புதினம்
  • நாட்டுப்புற இலக்கியம்

கூடுதல் வினாக்கள்

பொருத்துக

1. பகைவரை வென்றதை பாடுவது அ. பரிபாடல்
2. இசைப்பாடல் ஆ. பரணி
3. வான்புகழ் கொண்டது இ. சங்க இலக்கியங்கள்
4. அகம், புறம், மெய்ப்பொருளாக கொண்டது ஈ. திருக்குறள்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பகைவரை வென்று பாடுவது ____________ இலக்கியம்.

  1. பரிபாடல்
  2. பரணி
  3. சங்கஇலக்கியங்கள்
  4. திருக்குறள்

விடை : பரணி

2. “பகுத்தறிவுக்கவிராயர்” என்று புகழப்படுபவர் ____________

  1. உடுமலை நாராயணகவி
  2. திருவள்ளுவர்
  3. பாரதிதாசன்
  4. வெ. இராமலிங்கனார்

விடை : உடுமலை நாராயணகவி

3. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் ____________

  1. சுரதா
  2. பாரதிதாசன்
  3. உடுமலை நாராயணகவி
  4. வெ. இராமலிங்கனார்

விடை : உடுமலை நாராயணகவி

4. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் ____________

  1. சுரதா
  2. திருவள்ளுவர்
  3. அழ. வள்ளியப்பா
  4. உடுமலை நாராயணகவி

விடை : உடுமலை நாராயணகவி

5. முல்லைக்கு தேர் தந்து புகழ் பெற்றவன் ____________

  1. வேள்பாரி
  2. குமணன்
  3. அதியமான்
  4. பேகன்

விடை : வேள்பாரி

6. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ………………….

  1. வேள்பாரி
  2. குமணன்
  3. அதியமான்
  4. பேகன்

விடை : குமணன்

7. இசைப்பாடல் இலக்கியம் ____________

  1. பரிபாடல்
  2. குயில்பாட்டு
  3. பரணி
  4. திருக்குறள்

விடை : பரிபாடல்

8. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம் ____________

  1. பரிபாடல்
  2. பரணி
  3. சங்க இலக்கியங்கள்
  4. திருக்குறள்

விடை : சங்க இலக்கியங்கள்

9. வான்புகழ் கொண்ட இலக்கியம் ____________

  1. பரிபாடல்
  2. பரணி
  3. சங்க இலக்கியங்கள்
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

10. தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை ………………….

  1. மான்
  2. கனி
  3. பெண்
  4. பொன்

விடை : பொன்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலில் ஆசிரியர் ________________

விடை : உடுமலை நாராயண கவி

2. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றி ________________ வளமும் ________________ வளமும் நிரம்பியது.

விடை : பொருள், அருள்

3. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ________________ மிக்கவர்களாக விளங்கினர்.

விடை : கொடைத்திறன்

4. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் ________________

விடை : வேள்பாரி

5. “கவிச்சொல்லுக்கு” என்ற சொல்லில் ‘கவி’ என்பதன் பொருள் ________________

விடை : புலவன்

வினாக்கள்

1. “வான்முகிலிலனும் புகழ்படைத்த உபகாரி” என் பாடலடியில் இடம் பெறும் “முகில்” “உபகாரி” ஆகிய சொற்களின் பொருள் யாது?

  1. “முகில்” – மேகம்
  2. “உபகாரி” – வள்ளல்

2. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் யாவை?

  • நில வளம்
  • நீர் வளம்
  • பொருள் வளம்
  • அருள் வளம்

3. தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?

மன்னர்கள், வள்ளல்கள்

4. மழை மேகத்தை விட புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?

  • மழை மேகத்தை விட புகழ் பெற்றவன் – வள்ளல் வேள்பாரி
  • அவன் முல்லைக்கொடி படர்வதற்கு தன் விலை உயர்ந்த தேரை தந்தவர் ஆவார்

5. நன்செய் நிலம் என்றால் என்ன?

ஆற்றுநீர், குளத்து நீர், கிணற்று நீர் ஆகிய நீர் வள ஆதாரங்களினைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி நன் செய்நிலம் எனப்படுகிறது.

6. நன்செய் நிலப்பயிர்கள் யாவை?

நன்செய் நிலப்பயிர்கள் நெல், வாழை, கரும்பு ஆகும்.

சிறு வினா

1. உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக

  • பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
  • இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment