TN 6th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.1 – சிலப்பதிகாரம்

2.1 சிலப்பதிகாரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.1 – சிலப்பதிகாரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

ஆசிரியர் குறிப்பு

பெயர் இளங்கோவடிகள்
பெற்றோர் இமயவரம்பன் நெடுஞ்சேரலான் – நற்சோனை
காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு
மரபு சேர மரபு
படைப்பு சிலப்பதிகாரம்
தமையன் சேரன் செங்குட்டுவன்

சொல்லும் பொருளும்

  • திங்கள் – நிலவு
  • கொங்கு – மகரந்தம்
  • அலர் – மலர்தல்
  • திகிரி – ஆணைச்சக்கரம்
  • பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
  • மேரு – இமயமலை
  • நாமநீர் – அச்சம் தரும் கடல்
  • அளி – கருணை

நூல் வெளி

  • சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
  • இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
  • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இதுவே தமிழின் முதல் காப்பியம்.
  • இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கழுத்தில் சூடுவது __________

  1. தார்
  2. கணையாழி
  3. தண்டை
  4. மேகலை

விடை : தார்

2. கதிரவனின் மற்றொரு பெயர் _________

  1. புதன்
  2. ஞாயிறு
  3. சந்திரன்
  4. செவ்வாய்

விடை : ஞாயிறு

3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. வெண் + குடை
  2. வெண்மை + குடை
  3. வெம் +குடை
  4. வெம்மை + குடை

விடை : வெண்மை + குடை

4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. பொன் + கோட்டு
  2. பொற் + கோட்டு
  3. பொண் + கோட்டு
  4. பொற்கோ + இட்டு

விடை : பொன் + கோட்டு

5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. கொங்குஅலர்
  2. கொங்அலர்
  3. கொங்கலர்
  4. கொங்குலர்

விடை : கொங்கலர்

6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. அவன்அளிபோல்
  2. அவனளிபோல்
  3. அவன்வளிபோல்
  4. அவனாளிபோல்

விடை : அவனளிபோல்

நயம் அறிக

1. பாடலிலுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • போற்றுதும் – போன்று
  • மேரு – மேல்
  • திகரி – திரிதலான்
  • வன் – ளிபோல்

2. பாடலிலுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

  • திங்களை – கொங்கு
  • போற்றுத் – பொற்கோட்டு
  • ர்தார்ச் – உகு
  • மாழை – நா

குறு வினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காவியம் வான்நிலா, கதிரவன்,வான்மழை போன்றவற்றை வாழ்த்தி தொடங்குகிறது

2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

மனிதன் இயங்குவது, வாழ்வதும் இயற்கையினால்தான் அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது, அதுவே உயிரினங்களுக்கு மணி முடி அதனால் தான் இயற்கையைப் போற்றுகிறோம்

சிந்தனை வினா

இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

  • பண்டைய மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தனர். இயற்கைப் புலன்களுக்கு ஏற்ப வாழும் இடங்களை அமைத்து, அவ்வவ்நிலத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்து வந்தனர்.
  • ஐவகை நிலங்களை ஐவகைத் திணைகளைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்து அதற்கேற்ற உரிபப்பொருள்களையும் உடையவர்களாய் இருந்தனர்.
  • தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகக் குறிப்பிடுகிறது. எல்லா உயிரினங்களும் மதிக்கப்டுவதைப் பல்வேறு இலக்கியங்களும் பேசுகின்றன.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்  வாடினேன் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
  • பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால், இயற்கையை நன்கு அறிந்திருந்தனர்.
  • மனிதன் இயங்குவது வாழ்நாள் முழுவதும் இயற்கையில்தான், அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது.
  • இயற்கையே உயிரினங்களுக்கு மணிமுடி. அதனால் தான் மனிதர்கள் இயற்கையைப் போற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் _________

  1. சுப்பிரமணிய பாரதி
  2. சுப்புரத்தினதாசன்
  3. இளங்கோவடிகள்
  4. சீத்தலைசாத்தனார்

விடை : இளங்கோவடிகள்

2. இளங்கோவடிகள் __________ மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

  1. சேர
  2. சோழ
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை : சேர

3. சென்னி என்பது ________ -க் குறிக்கும் பெயர்.

  1. சேரனை
  2. சோழனை
  3. பாண்டியனை
  4. பல்லவனை

விடை : சோழனை

4. திகிரி என்பது குறிக்கும் பொருள் ________

  1. மண்பாண்டம்
  2. கதிரவன்
  3. சந்திரன்
  4. சக்கரம்

விடை : சக்கரம்

5. நாமநீர் என்னும் சாெல் உணர்த்தும் பொருள் ________

  1. அச்சம் தரும் ஏரி
  2. அச்சம் தரும் குளம்
  3. அச்சம் தரும் கால்வாய்
  4. அச்சம் தரும் கடல்

விடை : அச்சம் தரும் கடல்

பிரித்து எழுதுக

  • வானிலிருந்து – வானில் + இருந்து
  • சிலப்பதிகாரம் – சிலம்பு + அதிகாரம்
  • மாமழை – மா + மழை
  • மேனின்று – மேல் + நின்று
  • அங்கண் – அம் + கண்

பாெருத்துக

1. குடை ஞாயிறு
2. சக்கரம் மழை
3. அருள் திங்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

குறுவினா

1. தமிழின் முதல் காப்பியம் எது?

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம் ஆகும்.

2. சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறது?

  • முத்தமிழ்க் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்

3. இரட்டைக் காப்பியங்கள் யாவை?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment