TN 6th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.2 – காணி நிலம்

2.2 காணி நிலம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.2 – காணி நிலம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Kaani Nilam

6th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

பெயர் சுப்பிரமணியன்
பெற்றோர் சின்னசாமி – இலக்குமி
சிறப்பு பெயர் பாரதியார், ஷெல்லிதாசன்
காலம் 11.12.1882 – 11.09.1921
ஊர் தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம்
படைப்பு பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

சொல்லும் பொருளும்

  • காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  • மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம் – உள்ளம்.

பாடலின் பொருள்

காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.

அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

நூல்வெளி

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் “பாரதி” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “கிணறு” என்பதைக் குறிக்கும் சொல் ________

  1. ஏரி
  2. கேணி
  3. குளம்
  4. ஆறு

விடை : கேணி

2. “சித்தம்” என்பதன் பொருள் _________

  1. உள்ளம்
  2. மணம்
  3. குணம்
  4. வனம்

விடை : உள்ளம்

3. “மாடங்கள்” என்பதன் பொருள் மாளிகையின் __________

  1. அடுக்குகள்
  2. கூரை
  3. சாளரம்
  4. வாயில்

விடை : அடுக்குகள்

4. “நன்மாடங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________

  1. நன் + மாடங்கள்
  2. நற் + மாடங்கள்
  3. நன்மை + மாடங்கள்
  4. நல் + மாடங்கள்

விடை : நன்மை + மாடங்கள்

5. “நிலத்தினிடையே” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ________

  1. நிலம் + இடையே
  2. நிலத்தின் + இடையே
  3. நிலத்து + இடையே
  4. நிலத் + திடையே

விடை : நிலத்தின் + இடையே

6. “முத்து + சுடர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. முத்துசுடர்
  2. முச்சுடர்
  3. முத்துடர்
  4. முத்துச்சுடர்

விடை : முத்துச்சுடர்

7. “நிலா + ஒளி” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நிலாஒளி
  2. நிலஒளி
  3. நிலாவொளி
  4. நிலவுஒளி

விடை : நிலாவொளி

பொருத்துக.

1. முத்துச்சுடர்போல அ. தென்றல்
2. தூய நிறத்தில் ஆ. நிலாஒளி
3. சித்தம் மகிழ்ந்திட இ. மாடங்கள்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

நயம் அறிக.

1. பாடலிலுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

  • முத்து – முன்பு
  • த்து – க்கத்திலே
  • ங்கு – ந்த
  • நிறத்தினதாய் – நிலத்திடையே

2. பாடலிலுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

  • காணி – கேணி
  • தென்றல் – நன்றாய்
  • ன்னிரண்டு – தென்னைமரம்
  • த்து – சித்தம்

குறு வினா

1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

  • காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
  • நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
  • இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
  • காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார்.

2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும்

“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

காக்கை குருவி எங்கள் கூட்டம்”…

என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது.

எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல்.

பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை.

இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.

அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.

இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.

காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது.

குறு வினா

1. பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக

அத்தி மரம், ஆல மரம், பலா மரம், மாமரம், கொய்யா மரம், வாழை மரம், பாக்கு மரம், முருங்கை மரம், தென்னை மரம், வேப்பமரம், அசோக மரம், புன்னை மரம், சப்போட்டா மரம் போன்றவற்றை வளர்ப்பேன்.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்பு

1. பாரதியாரின் இயற்பெயர் __________

விடை :  சுப்பிரமணியன்

2. “இளமை + தென்றல்” என்னும் சொல்லைப் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________

விடை : இளந்தென்றல்

3. “பன்னிரண்டு” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் கிடைப்பது _________

விடை : பத்து + இரண்டு

4. பாரதியாருக்கு எட்டயபுர மன்னர் _________ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்

விடை : பாரதி

பொருத்துக

1. தூண் அ. முத்துச்சுடர்
2. மாடம் ஆ. அழகு
3. நிலா ஒளி இ. தூயநிறம்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

வினாக்கள்

1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.

2. பாரதியார் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியவை யாவை?

  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.

3. பாரதியார் எழுதிய நூல்கள் சிலவற்றை எழுதுக

  • பாஞ்சாலி சபதம்
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment