1.5 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 1.5 – தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அது
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்
விடை : தீ
3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல்
விடை : கண்டேன்
4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
விடை : நண்பகல்
5. 4 மாத்திரை அளவுள்ள இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
விடை : வாழ்த்து
6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அஃது
சிறு வினா
1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
2. உயிர்மெய் எழுத்துகளை எத்தனை வகைப்படுத்தலாம்?
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க்குறில் தோன்றுகிறது.
- மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
- உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்
3. எழுத்தை ஒலிக்கும் காலஅளவு வகைப்படுத்துக
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு | 1 மாத்திரை |
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு | 2 மாத்திரை |
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு | ½ மாத்திரை |
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு | ½ மாத்திரை |
கூடுதல் வினாக்கள்
1. எழுத்து என்றால் என்ன?
ஒலி வடிவாக எழுதப்படுவது, வரி வடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
2. உயிர் எழுத்துக்கள் எவ்வாறு பிறக்கின்றது?
இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.
3. தமிழ் மெய் எழுத்துகள் ஒலிக்கும் முறை கூறுக
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்
- வல்லினம் – க், ச், ட், த், ப், ற்
- மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள்
4. உயிர்மெய் தோன்றும் விதம் பற்றி எழுதுக?
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.
5. ஆய்த எழுத்து என்பது யாது?
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
6. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் காலஅளவு யாது?
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை
7. மாத்திரை என்பது யாது?
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
8. குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு யாது?
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
9. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு யாது?
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒலி வடிவாக எழுதப்டுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எனப்படுகிறது.
- எழுத்து
2. குறுகி ஒலிக்கும் ____________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
- அ, இ, உ, எ, ஒ
3. நீண்டு ஒலிக்கும் _________________ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
4. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ________________
- அரை மாத்திரை
மொழியை ஆள்வோம்
வினாக்களுக்கு விடையளி
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு சொல்வது
- விரிவாகச்
- சுருங்கச்
- பழமையைச்
- பல மொழிகளில்
விடை : சுருங்கச்
2. நோயற்ற வாழ்வை த் தருவது ________________
விடை : சுத்தம்
3. உடல் ஆரோக்கியமே அடிப்படை ________________
விடை : உழைப்பு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை, உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
சுத்தம்
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
- எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
- பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க
மொழியோடு விளையாடு
திரட்டுக
“மை” என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.
உண்மை | பொய்மை |
மெய்மை | வெண்மை |
கருமை | பொறுமை |
பன்மை | வன்மை |
சிறுமை | வாய்மை |
பெண்மை | பெருமை |
நேர்மை | எருமை |
மேன்மை | இனிமை |
புதிய சொற்களை உருவாக்குக
1. கரும்பு
- கரு
- கம்பு
2. கவிதை
- கவி
- விதை
- கதை
3. பதிற்றுப்பத்து
- பதி
- பத்து
- பற்று
- துதி
4. பரிபாடல்
- பரி
- பாடல்
- பாரி
- பல்
- பால்
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)
விண்மீன் | கண்மணி |
மணிமாலை | எழுதுகோல் |
நீதிநூல் | தமிழ்மொழி |
விண்வெளி | நீதிமொழி |
தமிழ்மாலை | விண்மீன் |
தமிழ்மாலை | தமிழ்நூல் |
நீதிமணி | நீதிமாலை |
மணிமொழி | தமிழ்வெளி |
மீன்கண் |
பொருத்தமான சொற்களால் தொடரை நிரப்பு
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு
1. __________ தருவது தமிழ்
- அன்பு
2. __________ தருவது தமிழ்
- ஏற்றம்
3. __________ தருவது தமிழ்
- இன்பம்
4. __________ இல்லாதது தமிழ்
- ஈடு
5. __________ தருவது தமிழ்
- ஆற்றல்
6. __________ தருவது தமிழ்
- ஊக்கம்
7. __________ வேண்டும் தமிழ்
- என்றும்
8. __________ தருவது தமிழ்
- உணர்வு
மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க
பாரதிதாசன் | பாரதியார் |
திருவள்ளளுவர் | கம்பர் |
ஒளவையார் | வாணிதாசன் |
கலைச்சொல் அறிக
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…